தயிரில் முக்கியமான வைட்டமின் !

Joined
Sep 18, 2011
Messages
47
Likes
17
Location
Chennai
#1
தயிர் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் இனி அறிவோம்:

நாம் ( நம் முன்னோர்கள் ) கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும்-- மற்றும் உண்டும்-- வந்திருக்கின்றனர். இன்று அது அனைத்து உலகிலும் ஒரு பொதுவான உணவாக ஆகிவிட்டது. அது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை.

100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து:

ஆற்றல் 60 kcal 260 kJ
மாவுப்பொருள்கள் 4.7 g
- இனியம் 4.7 g (*)
கொழுமியம் 3.3 g
- நிறை 2.1 g
- நிறைவுறா ஒற்றைக்கொழுப்பியம் 0.9 g
புரதம் 3.5 g
ரைபோஃவிளேவின் (உயிர். B2) 0.14 mg 9%
கால்சியம் 121 mg 12%
 
Joined
Sep 18, 2011
Messages
47
Likes
17
Location
Chennai
#2
1. தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின்B6 மற்றும் விட்டாமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும்.

2. பாலைவிட அதிகமான ஊட்டச்சத்து ஆதாயங்கள் அதிலிருந்து கிடைக்கும். மிதமான லாக்டோஸ்-சகிப்புத்தன்மை இல்லாத மக்கள் தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம், ஏன் என்றால் பாலில் காணப்படும் லேக்டோசு என்ற முன்பொருள் பண்பாட்டுவளர்ப்பு காரணமாக லாக்டிக் அமிலமாக மாறிவிடுவதே. லேக்டோசிலுள்ள ஆக்சிஜன் ஒடுக்கபடுவதால், பாதிக்கப்பட்ட ஒருவரின் பாலில் காணப்படும் சர்க்கரையை அவர்களாகவே பதப்படுத்த வேண்டிய தேவை தவிர்க்கப்பட்டு விடுகிறது.

3. தயிருக்கு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, குறிப்பாக பல வகைப்பட்ட இரையக குடலிய நிலைமைகளுக்கு, மற்றும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி-சேர்க்கை கொண்ட வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும்.

4. தயிர் பயன்பாட்டினால் ஈறுகளின் நலன் மேம்படுகிறது, ஏனென்றால் அதில் அடங்கிய லாக்டிக் அமிலங்களின் ப்ரோபையோடிக் எப்பெக்ட் (probiotic effect) காரணமாகும்.

5. இன்டர்நேஷனல் ஜெர்னல் ஒப் ஒபெசிட்டி (International Journal of Obesity) (11 ஜனவரி 2005) என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையின் படி, குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர் எடை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிகிறது.

6. பரிசோதனையில், உடல் பருமனாக இருந்தவர்களில் சிலர் ஒவ்வொரு நாளும் மூன்று வேளை குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர் உட்கொண்டவர்களின் எடை 22% அளவுக்கு மேலும் குறைந்ததாகவும், ஆனால் உணவு கட்டுப்பாட்டுடன் இருந்த குழுவினர், அவர்கள் கலோரிகளை குறித்தும் மற்றும் கூடுதாலாக கால்சியத்தை தவிர்த்த குழுவினருக்கு எடை குறையாமலும் இருந்ததாக காணப்பட்டது. மேலும் அவர்கள் 81% அதிகமாக வயிற்றுப்பகுதி பருமனையும் இழந்தார்கள்.

7. உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டும் அல்லாமல் நமக்கு, நல்ல ஜீரண சக்தியை தருகிர*து.

8. பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியைநிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.


9. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்குதயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையானஅதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.


10. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.

11. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

12. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது.மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

13. மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம் அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்

14. சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும் எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம்.

15. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
 
Joined
Sep 18, 2011
Messages
47
Likes
17
Location
Chennai
#3
தயிரின் பயன்கள் மேலும் சில டிப்ஸ்:

1. தயிர் புளித்த தயிரை தலையில் தேய்த்த குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.

2. சருமம் பழபழக்க கடலைமாவுடன், தயிர் கலந்து முகத்துக்கு தடவவும்.

3. சிறு துண்டகளாக்கிய தேங்காயினை தயிரில் போட்டல் தயிர்சீக்கரம் புள்ளிக்காது.

4. மீன் கழுவியவாடை வந்தாலோ, அல்லதுமண்ணெண்ய் வாடை இருந்தாலோதயிர் போட்டு கைகளை கழுவவும்.

5. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

6. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்து மறு நாள் காலை ஒரு சாதாரண சமையல் கரண்டியால் சுழற்றிக்கொண்டு இருந்தால் 5 நிமிடங்களில் வெண்ணெய் திரண்டு விடும்.

thanks: ஆழ்கடல்களங்கியம்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.