தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் &

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான். தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.

(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும் வே புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்
துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி’ யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில


  • 1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
  • 3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

  • 4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு
  • போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.

  • 5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

  • 6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
  • 7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.


  • 1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
  • 2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)
  • 3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

தயிர் பயன் படுத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும்.
தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம்.

தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. “தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்” என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.

குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.

இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

[h=1]தயிரை கண்டு பயந்து ஓடாதீர்[/h]பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. தயிரா நான் இதையெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது. தயிரில் முக்கியமான வைட்டமின், புரதம் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ பிளேவின் என்ற வைட்டமின் 'பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.

பால் வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும். ஆனால் தயிர் பாலை விட விரைவாக ஜீரணமாக்கும் சக்தி கொண்டது. சரியான நேரத்துக்ககு உணவு உண்பது பல உடல் உபாதைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வழி செய்யும். ஆனால் வேலைப்பளுக் காரணமாக உரிய நேரத்தில் உணவு உண்ண முடியவில்லை என்றால் அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அல்சர் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

* தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

* வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

* மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..?

2. தயிரில் உள்ள புரதம், பாலில் உள்ள புரதத்தினை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அருமருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த**யி*ரி*ல் இரு*க்கு*ம் பா*க்டீ*ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கல்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைக்காய் வதக்கும் பொழுது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் மணம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோர் ஆக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&

தயிரை சாப்பிட்டு வந்தால்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி’யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது சிறந்த மருந்தாகும்.

தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&

தயிர் தரும் சுக வாழ்வு பற்றிய தகவல் - உங்களுக்காக...!


* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.
 

Attachments

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#7
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

thanks for sharing this useful info.....
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

[h=1]வீட்டில் தயாரிக்கும் தயிரினால் தினசரி வாழ்வில் நாம் பெறும் பயன்கள்![/h]இயற்கையிலேயே தயிரில் நிறைய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துகள் உண்டு. தயிரில் உள்ள சில பாக்டீரியாக்கள் நமது செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. தற்போதைய நிலையில் சந்தையில் கிடைக்கும் பல வகையான தயிர்கள் இரசாயன கலப்புகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன. அதில் சேர்க்கப்படும் இரசாயன கலப்புகளால் நமது உடலுக்கு பல தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, வீட்டில் தயாரிக்கும் தயிரை உணவில் சேர்த்து உட்கொள்வதே சிறந்ததாகும். வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலமாக பல பயன்கள் அடைய முடிகிறது.

அதில் குறிப்பாக முகப்பரு உள்ளவர்கள் வீட்டில் தயாரிக்கும் தயிரினை முகத்தில் இட்டு சிறிது நேரம் கழித்து உலர்ந்த பிறகு முகம் கழுவி வந்தால், முகத்தில் முகப்பரு குறையும் மற்றும் சருமம் பொலிவு பெறும். மேலும் வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலம் நாம் அடையும் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள்...

மலச்சிக்கலுக்கு நிவாரணம் வீட்டில் தயாரிக்கும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகளுக்கும், மலச்சிக்கலுக்கும் நிவாரணம் கிடைக்கும்

எலும்பு பகுதிகள் வலுவடைய.. வீட்டில் தயாரிக்கும் தயிரில் உள்ள உயர் ரக வைட்டமின் டி மற்றும் கால்சியம் நமது எலும்பு பகுதிகளை வலுவடைய செய்கிறது. அதுமட்டுமில்லாது நமது உடலுக்கு தேவையான கால்சியம் அளவையும் மேம்படுத்த உதவுகிறது.

இயற்கையான முகப்பொலிவு தயிரில் ஒரு தேக்கரண்டி கடலை மாவுடன் சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் இட்டு உலர்ந்த பிறகு முகம் கழுவினால் உங்களது முகம் பன்மடங்கு பொலிவு பெறும்.

பசியை கட்டுப்படுத்தும் தயிரின் மூலமாக நமக்கு கிடைக்கும் புரதச்சத்து நமது பசியை கட்டுபடுத்தும். உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தயிரை எடுத்துக் கொள்வது உங்களது தசைகளையும், எலும்புகளையும் வலுவடைய செய்கிறது.

உடல் எடையை குறைக்க.. நமது தற்போதைய அன்றாட வாழ்வியலில் உடல் பருமன் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதில் இருந்து விடுபட்டு உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க தயிர் ஒரு நல்ல மூலப்பொருளாக உள்ளது. ஏனெனில், இதில் உள்ள சில பாக்டீரியாக்கள் செரிமான கோளாறை சரிசெய்வது மட்டுமில்லாது, தேவையில்லாத கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

இரத்தக்கொதிப்பை சீராக்க உதவுகிறது. வீட்டில் தயாரிக்கும் தயிரில் உள்ள பொட்டாசியம் நமது இரத்தக்கொதிப்பை சீராக்க உதவுகிறது மற்றும் தினமும் ஒரு கோப்பை தயிர் உட்கொள்வது நமது உடல்நலத்தை பேணிட உதவுகிறது.

மென்மையான கூந்தலுக்கு.. வீட்டில் தயாரிக்கும் தயிரை நேரடியாக கூந்தல் மற்றும் கூந்தலின் அடிவேர்களில் தடவி வருவதால் தயிரில் உள்ள இயற்கை ஈரப்பதமானது நமது கூந்தலை மென்மையானதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து வைட்டமின் டி மற்றும் கால்சியம் மட்டுமில்லாது வீட்டில் தயாரிக்கும் தயிரில் உயர் ரக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகளான வைட்டமின் பி 12, சின்க் (துத்துநாகம்), பாஸ்பரஸ் மற்றும் அயோடின் போன்றவை நிறைந்துள்ளன.

வாய் துர்நாற்றம் குறையும் வீட்டில் தாயரிக்கும் தயிரை சாப்பிடுவதன் மூலமாக வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் உள்ள வலி போன்ற வாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி வீட்டில் தயாரிக்கும் தயிரின் மூலமாக நாம் அடையும் சிறந்த பயன் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து நோய் கிருமிகளை அழிக்க செய்கிறது.

ஊட்டச்சத்துகள் சிக்கன் மற்றும் மட்டனில் தயிரை சேர்ப்பதால் ருசி மட்டுமல்லாது, அதில் உள்ள ஊட்டச்சத்துகளையும் அப்படியே தங்க செய்கிறது.
 

Attachments

kavithasankar

Citizen's of Penmai
Joined
Feb 2, 2012
Messages
508
Likes
350
Location
kanchipuram
#9
Re: தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும&#302

Thanks for the tips.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.