தர்பூசணி Payangal. - Watermelon Benefits

Guruji

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 13, 2011
Messages
3,154
Likes
2,017
Location
Puducherry
#1
தாகத்தை தணிக்க பலரும் தர்பூசணியின் தயவை நாடுவது வழக்கம். சாலையோர கடைகளிலும், கோடைகால சிறப்பு ஸ்டால்களிலும் காணக்கிடைக்கும் தர்பூசணி பழத்திற்கு தாகம் தணிக்கும் சக்தியோடு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவரின் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.


தர்பூசணிப் பழம். இது உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.


தர்பூசணி பழத்தில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.

பசலைக்கீரைக்கு சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏயும் காணப்படுகின்றன.

வைட்டமின் பி6, வைட்டமின் பி1 உள்ளன.

மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது.

அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியாகும்.

தர்பூசணிக்கு `ஆசையை' அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

தர்பூசணியில் உள்ள `சிட்ரூலின்' என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

Have Darpoosani and improve health...
:cheer:

GURUJI
 
Joined
Jun 11, 2012
Messages
23
Likes
27
Location
singapore
#2
இனி நம் நாட்டில் எப்பொழுதும் தர்பூசணி தான் தேசிய பழமாக இருக்கபோகிறது .
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#4
சீசன் போச்சே !!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.