தலைமுறை இடைவெளி - Generation Gap

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

[FONT=verdana, Tahoma, Calibri, Geneva, ]"மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முன்னால் கசக்கும் பின்னால் இனிக்கும்' என்பர். இன்றைய தலைமுறையினருக்கு வீடுகளில் முதியவர்கள் பேச ஆரம்பித்தாலே கசக்கிறது . உங்கள் காலம் வேறு , எங்கள் காலம் வேறு என வியாக்கியானம் செய்து வாயை அடைத்து விடுகின்றனர். பல விடயங்களில் தமது பிள்ளைகள் தெரிந்தே போய் படுகுழியில் விழுகிறார்களே என பெற்றோர்களுக்கு ஆதங்கம். ஆனால், யார் காது கொடுத்துக் கேட்கிறார்கள் ? முதுமைக்கும் , இளைமைக்கும் தலைமுறை இடைவெளி இருந்தாலும் அது ஒன்று மட்டுமே அவர்கள் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் இல்லை. அனுபவமிக்க முதியவர்களின் கருத்துகளால் குடும்ப விவகாரங்களில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால், பொருளாதார விடயங்களில் தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத சில ஆலோசனைகளால் பலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது. தெரிந்த நண்பர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மூதாதையரின் சொத்துகளை விற்று அதன் மூலம் நகருக்கு அருகில் சில வீடுகளை வாங்கிப் போட முடிவெடுத்தார். ஆனால், அவரது தந்தை வலுக்கட்டாயமாகத் தடுத்து சொத்துகளை விற்றுக் கிடைக்கும் பணத்தை அரசு வங்கியில் பாதுகாப்பாக வைப்புச் செய்யும் படி வற்புறுத்தினார். கடைசியில் தந்தையில் பேச்சைக்கேட்டு மகனும் அப்படியே செய்தார். ஆனால், தற்போது அவர் வாங்க நினைத்திருந்த வீடுகளின் சந்தை மதிப்பு எங்கேயோ போய் விட்டது. வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தின் மதிப்போ அதல பாதாளத்தில் . எப்படியிருக்கும் அவரது மகனுக்கு ? இந்தப் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஒரே வீட்டில் இருந்தாலும் தந்தையும் மகனும் சரிவரப் பேசிக் கொள்வதேயில்லை. இப்படி எந்த விடயத்தில் தலையிட வேண்டும். எதில் தலையிடக் கூடாது எனத் தெரியாமல் முதியவர்கள் பலர் வீடுகளில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மூத்தோரின் மேலான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திவிட்டு பொருந்தாத ஆலோசனைகளை தான் ஏன் செயற்படுத்தவில்லை என்பதை விபரமாக விளக்கிக் கூறும் பொறுமையும் பக்குவமும் இளையவர்களுக்குக் கை கூட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் கூட்டுக் குடும்பங்களும் சிதையாது. நாம் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறார்களே என முதியவர்கள் புலம்ப வேண்டிய நிலையும் ஏற்படாது. முதுமைக் காலத்தைப் பற்றிய எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் பலர் அவஸ்தைப்பட்டு வருவதற்கு இதுபோன்ற பல காரணங்கள் உண்டு. மகனோ, மகளோ புறக்கணிக்கிறார்கள் என எந்தவொரு முதியவராவது புலம்பினால் அவர்களது குடும்ப உறவுகளைத் தவிர்த்து மூன்றாம் மனிதர்களால் என்ன செய்து விட முடியும் ? அப்படி, அவர்களால் சட்டத்தின் மூலமோ அல்லது ஏதாவதொரு விதத்திலோ நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டாலும் பின்னாளில் வம்பு, வழக்கு என ஏதாவது வந்து விடுமோ என அஞ்சியே பலரும் ஒதுங்கிப் போய்விடுவது கண்கூடு. சரி பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு? பயோலஜீக்கல் குரிக் (உயிரியல் கடிகாரம்) என்பார்கள். அந்தக் கடிகாரம் ஒவ்வொருவரின் மூளைக்குள்ளும் இருந்து கொண்டு காலச் சக்கரச் சுழற்சியில் நம்மை நேர நியதிப்படி இயங்க வைத்துக் கொண்டிருக்கும் . ஐம்பது வயதைக் கடந்தவுடன் அந்தக் கடிகாரத்தில் முதல் அலாரம் அடிக்கும் ...! அப்போதே உஷாராகிவிட வேண்டும். அறுபது வயதைக் கடந்துவிட்டாலோ இன்னும் உஷாராகி விட வேண்டும். தாமரை இலைத் தண்ணீர் போல வாழலாம். ஒருவேளை வாரிசுகளால் தனிமைப்படுத்தப்படும் போது சுயமாக இயங்கும் நிலையில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகளை (பண உதவி மட்டுமல்ல) உண்மையிலேயே சிரமப்படும் பிறருக்குச் செய்ய முன்வர வேண்டும். இதன்மூலம் கிடைக்கின்ற புதிய உறவுகளால் நமது நம்பிக்கைகள் பலப்பட்டு முதுமையில் உற்சாகமாக இயங்கத் தெம்பும் கிடைக்கும். அதைவிடுத்து ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என எஞ்சிய காலத்தை புலம்பிக்கொண்ட கழிப்பதால் எந்தவொரு நன்மையும் விளையப் போவதில்லை. - [/FONT]
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.