தலைவலிக்குக் காரணம் தலையில் இல்லை!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
பிறப்பு முதல் இறப்பு வரை தலைவலியே ஏற்படாத ஒரு மனிதத் தலைகூட உலகில் இருக்க முடியாது. சாதாரண தலைவலிக்கும் தலைக்கனத்திற்கும் அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப வீட்டு வைத்தியம் மூலமோ, அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் தலைவலி மாத்திரைகள் மூலமோ நிவாரணம் பெறுகின்றனர். நாள்பட்ட தலைவலியோடு நாட்களை நகர்த்துவோர்பாடு நரக வேதனைதான்.
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது பல காரணங்களால், பல விதங்களில் ஏற்படுகிறது. Migraine என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலி, பொதுவாக ஒரு பக்கமாக வரக்கூடியது. ஆயினும் ஒற்றைத் தலைவலிக் குறிகள் ஒரு பகுதியினருக்கு தலையின் இரண்டு பக்கங்களிலும் வரவும் கூடும்.
ஒற்றைத் தலைவலிக்கு பாரம்பரியமே பிரதான காரணம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச்சூழலின் அழுத்தம் (Environmental Stress), பரபரப்பு போன்ற மனவியல் காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. மது, புகைப்பழக்கம், மசாலாப்பொருட்கள், ஊறுகாய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாக்லேட், மீன், அதிகளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகள் போன்றவைகள் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கவோ அதிகரிக்கவோ செய்கின்றன.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
தலைவலியால் பெண்கள் படும்பாடுஆண்களை விடப் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். அவர்களிடம் காணப்படும் இயக்குநீர் (Harmone) சுரப்புகளின் மாறுபாடுகளே இதற்குக் காரணம். கர்ப்பக்காலத்தில் இந்தத் தலைவலி மாயமாய் மறைந்து விடுகிறது. பிரசவத்திற்கு பின் மீண்டும் தாக்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஒற்றைத் தலைவலி ஓடிஒளிகிறது. அறுவைச் சிகிச்சை (Hysterectomy) மூலம் கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் பலரை ஒற்றைத் தலைவலி ஈவு இரக்கமின்றித் தாக்குகிறது. 50, 55 வயதைத் தாண்டும் பெண்களுக்கு இயற்கையாகவே இவ்வலி குறைந்து மறைந்து போகிறது.
விதவிதமான தலைவலிகள்!
ஒற்றைத் தலைவலியின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பொதுவாகக் காணப்படும் சாதாரண வகை ஒற்றைத் தலைவலி (Common or Simple Migraine) திடீரென்று தோன்றக் கூடியது. கண்களில் மேல்புறம், பின்புறம், தலையின் பின்புறத்தில், ஒருபக்கமாக வலி தோன்றக் கூடும். Classical Migraine எனப்படும் மற்றொரு வகை ஒற்றைத் தலைவலி முன் அறிகுறிகளோடு (Aura)வரக் கூடியது. ஒற்றைத் தலைவலித் தாக்கத் துவங்குவதற்கு முன்பு சிலருக்குதலைச்சுற்றல் ஏற்படலாம். சிலருக்கு குமட்டலோ, உடல்சோர்வோ, மனச்சோர்வோ ஏற்படலாம். சிலருக்கு பார்வையில் விபரீதமான மாற்றங்கள் முன் கூட்டி ஏற்படலாம். பார்வை மங்கல் அல்லது பொருட்கள் இரண்டாக தோன்றுதல், கண்முன் வெளிச்சப் புள்ளிகளோ, கருப்புப் புள்ளிகளோ பறத்தல் போன்றவை ஏற்படலாம்.
Cluster headache என்று இன்னொரு வகை ஒற்றைத் தலைவலி உண்டு. இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக் கூடிய தீவிரத் தலைவலியாகும். இந்த வகை ஒற்றைத் தலைவலி ஒரு கண்ணில் ஏற்பட்டு கண் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுக்கு அல்லது மூக்கடைப்பு உண்டாகக் கூடும். தினமும் இவ்வலி ஓரிரு தடவைகள் ஏற்பட்டு கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கடுமையாகக் காணப்படும்.
தீர்வை நோக்கி
மைக்ரேன் தலைவலி எனப்படும் நரம்பியல் தொடர்பான தலைவலிக்கு, ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தரத் தீர்வு ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளது. ஒற்றைத் தலைவலியால் சித்ரவதை அனுபவிக்கும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஹோமியோபதி மருந்துகள் தேவைப்படும். ஹோமியோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகள் அல்ல; நோயை முழுமையாய் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கவை. தலைவலி தோன்றிய இடம், பக்கம், வலியின் தன்மை, வலி எப்போது எதனால் குறைகிறது அதிகமாகிறது என்ற விபரம், நோயாளியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலைவலியுடன் சேர்ந்து வந்துள்ள வேறு உடல் தொந்தரவுகள் போன்ற அனைத்து அம்சங்களுடன் ஆய்வு செய்யப்பட்டு ஹோமியோபதியில் மருந்து தேர்வு செய்யப்படுவதால் ஆண்டு கணக்கில் அவஸ்தைப்படுத்திய ஒற்றைத் தலைவலி கூட முற்றிலும் குணமாகிறது
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.