தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்!

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
[h=1]தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்![/h]

தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மனஅழுத்தமே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அதனால் மட்டும் தலைவலி வருவதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதிகம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால் தான் தலைவலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போது அதற்கான மாத்திரைகளை அடிக்கடி போடுவர். ஆகவே இத்தகைய தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள் என்ன என்பதை அறிந்து, அவற்றை அதிகமாக உண்பதை தவிர்த்து, தலைவலி ஏற்படாமல் தடுக்கலாமா!!!


சாக்லேட் : நிறைய பேருக்கு சாக்லேட் மிகவும் பிடித்ததாக இருக்கும் என்பதால், அவற்றை அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது சாக்லேட் நிறைய ஆராய்ச்சியின் மூலம் சாக்லேட் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு வருகிறது. அத்தகைய ஒரு ஆராய்ச்சியில் தான், தலைவலியை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களில் சாக்லேட் ஒன்று என்று தெரியவந்துள்ளது. அந்த சாக்லேட்டில் இருக்கும் பினைல்தைலமின் மற்றும் தியோபுரோமின் என்னும் பொருட்கள் உடலில் இருக்கும் இரத்தக்குழாய்களின் அளவை நீட்டிக்கச் செய்து, தலைவலியை ஏற்படுத்துகின்றன.
சீஸ் : சீஸ் கூட தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் சீஸில் இருக்கும் நொதிப்பொருளான தைரமின், உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். அதன் விளைவு தலைவலியில் முடியும். அதிலும் பழைய சீஸில் அதிகமான அளவு தைரமின் இருக்கிறது. ஆகவே பழைய சீஸ் சாப்பிடுவதை தவிர்த்து, புதியதை எப்போதாவது மட்டும் சாப்பிட்டால் நல்லது.
மதுபானம் : அனைத்து மதுபானங்களும் தலைவலியை ஏற்படுத்தும், அதிலும் ரெட் ஒயின் சொல்லவே வேண்டாம். ஏனெனில் மதுபானங்கள் இரத்த ஒட்டத்தை சரியாக அளவில் ஓடச் செய்யாமல், அதிகமான அளவில் மூளைக்கு பாயும் படிச் செய்யும் இதனால் தான், அதைக் குடித்த பின்னர் வரும் தலைவலியைத் தாங்க முடியாமல் இருக்கும். மேலும் ரெட் ஒயினில் தலைவலியை ஏற்படுத்தும் பொருட்களில் ஒன்றான சல்பைட் அளவுக்கு அதிகமாக உள்ளது.
காபி : அலுவலகங்களில் தலைவலி குறையும் என்று நினைத்து, காபியை அதிகம் குடிப்பர். ஆனால் அது முற்றிலும் தவறு. காபியில் இருக்கும் காப்பைன் என்னும் பொருள் மெக்னீசியமாக உடலில் மாறும் போது, தலைவலி வரும். அதிலும் அதிக அளவு காபி குடித்தால், அதிக அளவு தலைவலியானது வரக்கூடும்.
ஐஸ் கிரீம் : ஐஸ் கிரீம் என்று சொன்னால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் அதை சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிடுவார்களோ. உங்களுக்கே தெரிகிறது, பின்னர் என்ன? உண்மையில் நாம் ஐஸ் கிரீமை அல்லது ஐஸ் கலந்த பானங்களை உடல் சூடாக இருக்கும் போது குடிப்போம். இதனால் உடலில் இருக்கும் இரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. ஆகவே அப்போது போதிய இரத்த சுழற்சி ஏற்படுவதில்லை. இதனால் தலைவலி ஏற்படுகிறது.
சோயா சாஸ் : இப்போதெல்லம் நிறைய உணவுகளில் சுவைக்காக சோயா சாஸ் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிக அளவு சோயா சாஸ் கலந்துள்ள உணவுகளை உண்டால், தலைவலி ஏற்படும். மேலும் சோயா சாஸில் மோனோசோடியம் குளுட்டமேட் என்னும் பொருள் உள்ளது. இது தலைவலியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சோயா சாஸில் அதிக அளவு உப்பு உள்ளது, இது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கும்.
ஆகவே தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள் என்றால், மேற்கூறிய உணவுகளையெல்லாம் அதிக அளவு உண்ணாமல் இருந்தால், ஆரோக்கியமாக வாழலாம்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.