`தலை’யாய பிரச்னைகள்... சுலபமான தீர்வுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
`தலை’யாய பிரச்னைகள்... சுலபமான தீர்வுகள்!
கேசம் பற்றிய நம் சந்தேகங்கள் பல. சொல்லப்போனால், அறிவியல்பூர்வமாக தவறு என்று கூறப்படும் விஷயங்கள் பலவற்றை நாம் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறோம்... தலைமுடி விஷயத்தில்! தலைமுடி தொடர்பான அடிப்படை சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார், 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சென்னையைச் சேர்ந்த ட்ரைக்காலஜிஸ்ட் டாக்டர் எஸ்.முருகசுந்தரம்.


‘‘தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைக்க வேண்டுமா?’’

‘‘தினமும் எண்ணெய் தடவுவதால் முடி வளரும் என்பது ஆண்டாண்டு காலமாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் தவறான நம்பிக்கை. நமது ‘ஸ்கல்’லில் (மண்டை ஓடு) இயல்பிலேயே எண்ணெய் சுரப்பி இருக்கிறது என்பதால், எண்ணெய் வைக்கத் தேவையில்லை. எண்ணெய், இயற்கையான கண்டிஷனர் என்பதால், கேசத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவிவிட்டுக் குளிப்பது தவறு. குளித்த பின்தான் எண்ணெய் தடவ வேண்டும்.’’

‘‘என்ன வகையான ஷாம்பு பயன் படுத்தலாம்?’’
‘‘எல்லா ஷாம்புகளுமே, சோடியம் லாரைல் சல்ஃபேட் என்ற தவிர்க்க முடியாத கெமிக்கல் தன்மை கொண்டவைதான். இருந்தாலும், வாசனையும், வீரியமும் குறைவாக இருக்கும் ‘மைல்டு’ ஷாம்புவாகப் பார்த்துப் பயன்படுத்தலாம்.’’

‘‘அடிக்கடி ஹேர் டிரையர் பயன்படுத்தலாமா?’’
‘‘ஹேர் டிரையரை கையில் வைத்துப் பயன்படுத்தாமல், அதை சுவரில் மாட்டிவிட்டு, இரண்டடி இடைவெளி விட்டு நின்று பயன்படுத்தலாம். ஈரமான கேசத்தில் டிரையர் பயன்படுத்தினால், ஹேர் மாலிக்யூல்ஸ் பாதிப்படைந்து முடி உடைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதேபோல, டிரையரில் ஹாட் ஏர் பயன்படுத்தாமல், நார்மலான ரூம் டெம்பரேச்சர் ஏர் பயன்படுத்தலாம். இத்தனை சிக்கல்கள் இருப்பதால், என்றாவது அவசியத் தேவைக்கு ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். வாடிக்கையாக உபயோகிக்க வேண்டாம்.’’

‘‘முடியின் நுனியில் பிளவு ஏற்படுவது ஏன்?’’

‘‘முடியைச் சுற்றிப் படர்ந்துள்ள `இன்டக்ரல் லிபிட் லேயர்’ என்ற எண்ணெய்ப் படலம் பாதிக்கப்படுவதாலும், இதன் எதிர்விளைவாக முடியைப் பாதுகாக்கும் `க்யூட்டிக்கிள்’ பாதிக்கப்படுவதாலும் முடியின் நுனிப் பகுதியில் பிளவு ஏற்படுகிறது.

‘‘முடி வறட்சியை எப்படித் தவிர்ப்பது?’’
‘‘இதைத் தவிர்க்க, கண்டிஷனர் பயன்படுத்தலாம். விலைமலிவான, சிறந்த இயற்கை கண்டிஷனர், எண்ணெய். தவிர, தலைக்கு குளிக்கும்போது, ஷாம்பு பயன்படுத்திய பின் கண்டிஷனர் பயன்படுத்துவதும் கேசத்தை ‘சாஃப்ட்’ ஆக்கும். கெமிக்கல் கண்டிஷனர்களைவிட, முட்டை வெள்ளைக்கரு, ஊறவைத்து அரைத்த வெந்தய விழுது போன்ற இயற்கை கண்டிஷனர்களைத் தேர்வு செய்யலாம்.’’

‘‘வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பு பயன்படுத்தலாமா?’’
‘‘தனித்தனியாக சீப்பு பயன்படுத்துவதுதான் நல்லது. பொடுகு, ரேஷஸ் என்று ஒருவரின் பிரச்னை மற்றவருக்குத் தொற்றாமல் இது தவிர்க்கும்.’’

‘‘இரவில் உறங்கும்போது கேசத்தை ‘ஃப்ரீ ஹேர்’ ஆக விடலாமா?’’
‘‘அது அவரவர் சௌகரியத்தைப் பொறுத்தது. இருந்தாலும் முடியை அலைக்கழிக்காமல், சிக்காக்காமல் இருப்பது நல்லது.’’

‘‘ஃப்ரீ ஹேர் விடுவதால்தான் முடி அதிகமாகக் கொட்டுகிறது என்பது சரியா?’’
‘‘ஃப்ரீ ஹேர் மட்டுமே அதற்குக் காரணம் கிடையாது. எண்ணெய்ப் பிசுக்கு, சுற்றுப்புற மாசு, பொடுகுத்தொல்லை, வறட்சி என தலைமுடியை வலுவிழப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.’’
 
Last edited:
Joined
Sep 16, 2015
Messages
20
Likes
6
Location
chennai
#2
hair fall problem naraya resonala varuthu healthy food yaduthukama erukurathu,tension,water,dandruff eppadi narya aspects eruku,hair fall control panna dandruff varama pathukanum,harsh shampoo use panna kudathu coloring panna kudathu,damage aagama pathukanum,dry aagama pathukanum,ethu ellathukum solutions segal solutions product kudukuthu
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.