தலை அரிப்புக்கு..

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,755
Location
Chennai
#1
வேப்பில்லை இலையை பறித்து அதனுடன் சிறுது (கொஞ்சம் தாராளமாகவே ) தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து தலையில் தடவி ஊற வைத்து 30 நிமிடம் கழித்து குளித்தால் . பொடுகு shampoo எனக்கு எதுக்கு ??என கேள்வி கேட்பீர்கள்..

அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து, சீயக்காய் போட்டு தலையை அலசுங்கள். இப்படி, ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று தலைக்கு குளித்துவந்தால், இரண்டு வாரங்களிலேயே தலை அரிப்பு சுத்தமாகப் போய்விடும்.

சிலருக்கு எப்போதும் தலைமுடி கசகசவென பிசுபிசுத்து கிடக்கும். வியர்வை நாற்றமும் அடித்து சங்கடப்படுத்தும். இதற்கும் ஒரு எளிய சிகிச்சை இருக்கிறது.

மிளகு, ஓமம், சீரகம்.... மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த நீரில் சீயக்காயைக் கரைத்து, தலைக்கு போட்டு குளியுங்கள்.

வாரம் இரு முறை இப்படி குளித்து வந்தால், தலையில் வியர்வை நாற்றம் நீங்கி, முடி பொலிவுடன் ஜொலிக்கும். தலை அரிப்பையும் இது கட்டுப்படுத்தும்.

தலைக்குக் குளித்தவுடனே சிலருக்கு தலையில் நீர் கோர்த்து அவதிப்படுவார்கள். அதற்கும் கை கொடுக்கிறது இந்தக் கலவை...

அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம்.... மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். இப்படி செய்துவந்தால், தலையில் கோர்த்த நீர் வடியும். உஷ்ணம் நீங்கி கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
 
Last edited:

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#3
1. அருகம்புல்லின் சாறை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்
.

2. சுருள் பட்டை - 10 கிராம், பிஞ்சுக்கடுக்காய் - 10 கிராம், வெந்தயம் - 10 கிராம், கறிவேப்பிலை - 10 கிராம், செம்பருத்தி பூ - 10 கிராம், ரோஜா மொட்டு - 10 கிராம்... இவற்றை ஓரிரண்டாக அம்மியில் நசுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi Ganga, Harini,
rendu peroda tipsum superpa....

Anitha.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#6
useful tips 4 hair pblm.... Ganga sis...& Harini.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,755
Location
Chennai
#7
You are always welcome friends...Harini,Anitha & Sudha
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.