தவறான உணவுக் கட்டுபாடு உடல்நலத்தை கடுமை&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தவறான உணவுக் கட்டுபாடு உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும்!!!

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தான் இந்த உலகலேயே மிகவும் பரிதாபமானவர்கள். மற்றும் உலகிலேயே அதிகமாக அறிவுரைகள் கேட்டு, கேட்டு நொந்து நூடூல்ஸ் ஆனவர்களும் இவர்களாக தான் இருப்பார்கள்.

பக்கத்து வீட்டு அக்காவில் இருந்து, அலுவலக ஊழியர்கள், நண்பர்கள், நாளிதழ், ரேடியோ, தொலைகாட்சி, இணையதளம் என்று இவர்களுக்கு அறிவுரைக் கூறப்படாத இடமே இல்லை என்று தான் கூறவேண்டும். ஏன், நமது சான்றோர்கள் கூட சில இடங்களில் இவர்களுக்கு பாடல்களில் அறிவுரை கூறியிருக்கின்றனர்.

அந்தோ பரிதாபம் என்ற சூழ்நிலையில் வாழும் இவர்களும் கண்டமேனிக்கு உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுவார்கள். ஆனால், அதிலும் கூட பிரச்சனை இருக்கிறது என்று புதியதாய் ஒரு குண்டைப் போடுகின்றனர். அது என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்...

கலோரிகள் நீங்கள் உட்கொள்ளும் சில மிகக் குறைவான உணவுகளில் மிக அதிகமான கலோரிகள் இருக்கும். இது நமக்கு தெரிவதில்லை. உதாரணமாக , மதிய உணவிற்கு பிறகு ஓர் இனிப்பு சாப்பிடவது, இரவு உணவிற்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது.

ஒரு முழு சாப்பாட்டில் உள்ள கலோரிகள் ஓர் சிறிய இனிப்பு உணவில் இருக்கிறது. இது வயிற்றை நிரப்பாவிட்டாலும். உங்கள் உடலில் கொழுப்பை அதிகமாக நிரப்பி விடும். எனவே, உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், சாப்பிடும் போது அந்த உணவில் எத்தனை கலோரிகள் இருக்கிறது என்று அறிந்து சாப்பிடுவது நல்லது.

பிரித்து சாப்பிடுதல் ஒரே அடியாக உணவைக் குறைத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கானது ஆகும். மூன்று வேலை மாட்டும் சாப்பிடுவதற்கு மாறாக அதை ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உணவு சாப்பிடலாம். ஏனெனில் திடீரென உங்கள் உணவைக் குறைத்துக் கொள்வது, உடல் சோர்வும், மயக்கமும் ஏற்படக் காரணம் ஆகிவிடும்.

பசியில்லை என்றாலும் சாப்பிட வேண்டும் சிலர் காலையில் இருந்து பசிக்கவில்லை என்று சாப்பிடமால் இருப்பார்கள். ஆனால், இரவு காலை முதல் சாப்பிடவே இல்லைதானே என்று நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இது தான் மிகப் பெரிய தவறு. பசிக்கவிட்டாலும், கொஞ்சமாவது சாப்பிட வேண்டியது அவசியம். இரவு நேரங்களில் அதிக உணவு உட்கொள்வது தான் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

கவனத்தை மாற்றுங்கள் ஒரு சிலருக்கு ஓர் வினோதமான பழக்கம் இருக்கும்., வீட்டில் இருந்தாலோ அல்லது போரடித்தலோ சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். இன்னும் சிலர் கோபம் வந்தாலும், அழுதாலும் கூட சாப்பிடுவார்கள்.

இது போன்ற நேரங்களில் உங்கள் கவனத்தை வேறு பக்கம் திசைத்திருப்ப வேண்டியது அவசியம். நீங்கள் ஒருவேளையில் செய்யும் தவறு, உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மொத்தமாய் சீர் கெடுத்துவிடும்.

மென்று சாப்பிடுங்கள், விழுங்காதீர்கள் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டியது அவசியம். இது உங்கள் செரிமானத்திற்கும் நல்லது. அப்படியே விழுங்குவதால் செரிமானமும் பாதிக்கப்படும், கலோரிகளை கரைப்பதும் சிரமம்.

எளிய உணவுகள்உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முடிந்த வரை கடின உணவுகளை தவிர்த்து எளிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.

நிதானமாக சாப்பிட வேண்டும் மென்று சாப்பிடுவதை போலவே, உணவை நிதானமாக சாப்பிட வேண்டும். உணவருந்த குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். சிலர், வேலை, தாமதம் போன்ற காரணங்களினால் ஓரிரு நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை ஆகும்.

நிறைய உறக்கம் நல்ல உணவை போலவே, நல்ல உறக்கமும் தேவை. இவை இரண்டும் கலந்தது தான் நல்ல ஆரோக்கியம் ஆகும். நல்ல தூக்கம் உங்களது பசியின்மையைப் போக்கும் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.