தவழ விட வேண்டும் - Why is crawling developmentally important?

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1


அப்பா-அம்மா இருவரும் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்க… விவரம் புரியாத குழந்தை அம்மாவைத் தேடி, தவழ்ந்து போய் காலைப் பிடிக்கும். உடனே, குழந்தையைத் தூக்கி, வாக்கரில் உட்காரவைத்து விடுகிறார்கள், இந்தக் காலத்துப் பெண்கள். தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என இப்படிச் செய்யும் பெற்றோர்கள், குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்துவிடுகிறார்கள்.

அதே போல, “எங்க பப்பு, தவழவே இல்லை தெரியுமா? குப்புற விழுந்ததுக்கப்புறம், நேரடியாக உக்காந்துடுச்சு!’ என்று பெருமையாகப் பேசுவார்கள் சில பெற்றோர்கள். அதுவும் பெருமைக்குரிய விஷயம் அல்ல; கவலைக்குரிய விஷயம்.

தவழ்தல் என்பது, குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல். குழந்தை அதைச் செய்யாமல், அடுத்தக் கட்டத்துக்குப் போவது சரியானது அல்ல. தவழ்தலைத் தடுத்தால், பின்னாளில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனில் குறைபாடு ஏற்படும்.தவழ்தல் என்னும் செயல், குழந்தையின் இடது மற்றும் வலது மூளைப் பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிப்பதன் அறிகுறி. இந்தக் காலகட்டத்தில், குழந்தைகள் எழுந்து நடந்து, வீடு முழுவதும் ஓடி, ஏறி, இறங்கி எனத் துறுதுறுவென இருக்கும் நிலை.


மூளையின் இட வலப் பகுதிகளின் ஒருங்கிணைப்பு என்பது, குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அப்போதுதான், குழந்தை எந்த வேலையையுமே நன்கு செய்ய முடியும். படிப்பு என்பது இடது பக்க மூளையின் வேலை. மற்ற படைப்புத்திறன் எல்லாம் வலதுபக்க மூளையின் வேலை. எனவே, இரண்டும் ஒருங்கிணைந்து வேலை செய்வதைப் பொறுத்துதான், குழந்தையின் மற்ற வளர்ச்சிகள் இருக்கும்.

எனவே, குழந்தைகள் தவழும் பருவத்தில், அவசியம் அவற்றைத் தவழ விட வேண்டும். தவழும் பருவத்தில் அதைத் தடுத்து, குழந்தையைத் தூக்கி வாக்கரில் போடுவதால், மூளையின் தூண்டுதலை நாம் தடை செய்கிறோம்.

கல்வியில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள், தவழ்வதைத் தவறவிட்டவர்களாக இருக்கலாம். பெற்றோர்களுக்கு இது ஓர் அவசியமான ஆலோசனை.

செயல்திறன் குறைந்த குழந்தை (Clumsy child)தவழாமல் வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் `க்ளம்ஸி சைல்ட்’ எனப்படும் செயல்திறன் குறைந்த குழந்தைகளாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு ஞாபகமறதி இருக்கும். தன் பொருட்களை ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது. பேனா எடுக்க, பை எடுக்க, லன்ச் பாக்ஸ் எடுக்க என எல்லாவற்றையும் மறப்பார்கள். பெற்றோர் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எதற்கும் எந்தப் பதற்றமும் இருக்காது.

இது போன்ற செயல்திறன் குறைதல் மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை, ‘ரெமடியல் டீச்சிங்’ எனப்படும் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலமாக மேம்படுத்த முடியும்.

Thanks to Dr.Vikatan.
 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
குழந்தை தவழ்வதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா? பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெயா.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5
குழந்தை தவழ்வதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா? பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெயா.
My pleasure sis.......
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#7
Good Info daa. Palar solli kettirken aana athu athu murai padi nadappathu thaan sirappu :) TFS
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.