தவிர்க்கலாம் மூட்டுவலி!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தவிர்க்கலாம் மூட்டுவலி!



'காலை மடக்க முடியலையே...’ - வயோதிகர்கள் இருக்கும் வீட்டில்தான் இந்த மாதிரியான முனங்கல் சத்தம் கேட்கும். ஆனால், இன்றோ இளம் வயதிலேயே முழங்கால் மூட்டு வலியால் அவதிப்படும் நிலை. ஆர்த்தோ டாக்டரை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது மூட்டுவலிப் பிரச்னைக்காக, அதிக அளவில் இளைஞர்கள்தான் வந்திருந்தனர். இளம் வயதில், மூட்டு தேய என்னக் காரணம் என விவரிக்கிறார் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துக்குமார்.

''தொடை எலும்பு, கால் எலும்பு, முட்டிச்சிப்பி (பெட்லா) இந்த மூன்று எலும்புகளும் சேர்ந்ததுதான் முழங்கால் மூட்டு. உடலில் அதிக எடையைத் தாங்கக்கூடியதும் இந்த முழங்கால் மூட்டுதான். இதன் இணைப்புகள் ஒரே மாதிரியாக இயங்க, உடல் எடை சீராக இருக்கவேண்டும். உடல் எடையில் மாறுதல் ஏற்படும்போது வீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.

ஒருவரின் பி.எம்.ஐ அளவு 30-க்கு மேல் போகும்போது உடல்பருமன் பிரச்னை வரும். இந்த அதிகப்படியான உடல் எடை காரணமாக மூட்டு பாதிக்கத் தொடங்கும். சாதாரணமாக நம்மை அறியாமலேயே நாள் ஒன்றுக்கு மூட்டினை 9,000 முறை பயன்படுத்துகிறோம். உடலின் எடை அதிகரித்துக்கொண்டே போகும்போது, நிற்க, நடக்க என ஒவ்வோர் அசைவின்போதும் மூட்டுகளில் தேய்மானம் அதிகரிக்கும்.

இதனுடன் எலும்பு இணைப்புகளில் உள்ள கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு தேயும்போது, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கடுமையான வலி எடுக்கும். அழுத்தம் உள் பக்க வழியாக ஊடுருவும்போது, மூட்டின் ஒரு பகுதி தேய்மானம் அடையும்.

நடப்பதைத் தவிர்ப்பதால் முழங்காலில் தொடைப் பகுதியில் சதை குறைந்து அங்கு கொழுப்பு அதிகரிக்கிறது. அதிக எடையைத் தூக்கும்போது, அதிக அளவு முழங்கால் அசைவு, இடுப்பு அசைவு, கால் அசைவால் சின்ன எலும்பான முட்டிச்சிப்பியில் உராய்வு ஏற்பட்டு, மூட்டு வலிக்கு வழி வகுக்கும். முதுகு எலும்பு சரியான நிலையில் இல்லாமல் இருக்கும்போதுகூட மூட்டு எலும்பில் தேய்மானம் ஏற்படலாம்.


சிக்குன்குனியா, ருமாட்டிக் போன்ற சில நோய்களால்கூட மூட்டுப் பகுதி பாதிக்கப்படும். இன்று இளம் வயதினர் சுமார் 10 கிலோ எடையை முதுகில் சுமந்து செல்கின்றனர். இதுவும் இளமையிலேயே மூட்டுவலி வருவதற்கு முக்கியக் காரணம். தவிர, எலும்புகள் மற்றும் தசைகள் போதிய வலுவின்றியும், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மரபணுக் காரணங்களால் தேய்மானம் ஏற்படலாம்.'

அறிகுறிகள்:

'அதிக தூரம் நடப்பது, உட்கார்ந்து எழும்போது, தூக்கத்தின்போது என முழங்காலில் வலி ஏற்படும். சில நேரங்களில் சும்மாவே இருந்தாலும்கூட, மூட்டு வலி இருக்கும். மூட்டுப் பகுதியில் வலி இருந்தால், நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் சரியாகலாம். ஆனால், மூட்டுவலி இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து குறையாமல் இருந்தால், பாதிப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

சிகிச்சை:

பிசியோதெரபி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். வலி அதிகமாக இருக்கும்போது எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் தேய்மானத்தின் அளவைத் தெரிந்துகொள்ளலாம். வலி, தேய்மானத்தைப் பொருத்து மருந்து மாத்திரைகள், ஊசி எனச் சிகிச்சைகள் தொடர வேண்டியிருக்கும். பத்தாயிரத்தில் ஒருவருக்குத்தான் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...

உணவிலும் அதிகக் கவனம் தேவை. அரிசி சாதத்தைக் குறைத்து, வைட்டமின், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற அனைத்துச் சத்துக்களும் இருக்கும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் எனச் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

பிரத்யேக உடற்பயிற்சியுடன், யோகா பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.

நடைப்பயிற்சியும் நல்ல பலனைத் தரும். மூட்டுத் தேய்மானம் இருந்தாலும், தினமும் சிறிது தூரம் நடப்பது நல்லது.

முதுகில் 5 கிலோ எடைக்கு மேல் சுமையைத் தூக்கக் கூடாது.

மாடிப்படி ஏறலாமா?

மாடிப்படி ஏறுவது நல்ல உடற்பயிற்சி என்று சிலர் அதை மட்டுமே செய்கின்றனர். இது தவறு. மாடிப்படிகளில் ஏறி இறங்குவது மட்டுமே எக்சர்சைஸ் இல்லை. உடல் பருமன் உள்ளவர்கள், 40 வயதில் எந்தவிதமான உடற்பயிற்சியும் இன்றி இருப்பவர்கள் படிகளில் அதிகம் ஏறி இறங்கும்போது, முத்துச்சிப்பி உராய்வு ஏற்படும். சர்க்கரை நோய், மூட்டுவலி இருப்பவர்கள், இதய நோயாளிகள் படிக்கட்டுகள் ஏறுவது தவிர்ப்பது நல்லது. உயரத்துக்கு ஏற்ற எடையுடன் ஆரோக்கியமாக இருப்பவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் படிக்கட்டு ஏறுவது பாதிப்பை ஏற்படுத்தாது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.