தாது உப்புகள் தரும் நன்மைகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாது உப்புகள் தரும் நன்மைகள்


மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா? உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் அவசியம். இரும்பு சத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.

ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல் சோர்வாகும்.

மூளை சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரிய காலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.

வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில் இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.

9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 19-50 வயது வரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும்.

கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுவது எப்போது?

* கர்ப்பகாலம்.
* தாய் பால் கொடுக்கும் காலம்.
* வயிற்றில் புண் (ரத்த இழப்பு ஏற்படுத்தினால்).
* வயிறு, உணவுப் பாதையில் பிரச்சினை. அதனால் தேவையான அளவு இரும்பு சத்தினை உறிஞ்ச முடியாமல் போகுதல்.
* அதிக நெஞ்செரிச்சல் மாத்திரைகளை சாப்பிடுவது குடல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வதை தடுக்கும்.
* ஏதோ காரணத்தினால் (உ.ம். ஆபரேஷன்) எடை குறைந்த பிறகு.
* மிக அதிக உடற்பயிற்சி சிவப்பணுக்களை அழிக்கும்.
* சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு தாவர வகை இரும்பு சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

இரும்பு சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:

* மூச்சுவாங்கும்.
* படபடப்பு இருக்கும்.
* கை, கால்கள் ‘ஜில்’லென இருக்கும்.
* குழந்தைகள் பல்பம், மண் சாப்பிடுவர்.
* வளைந்த உடையும் நகம், முடி கொட்டுதல்.
* வாய் ஓரங்களில் வறட்சி புண் காணப்படும்.

இரும்பு சத்தை மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது...

* வயிறு பாதிப்பு
* கறுத்த வெளிப்போக்கு
* வாந்தி, பிரட்டல்
* மலச்சிக்கல்
* வயிற்றுப் போக்கு

போன்றவை ஏற்படலாம். நார்சத்தை கூட்டிக் கொண்டால் இப்பிரச்சினைகள் தீரும். உடலுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாது உப்புக்களும் முக்கியம். உடலின் 5 சதவீத எடை இந்த தாது உப்புக்களே. இவை உடல் செயல்பாட்டுக்கும், மூளை செயல்பாட்டுக்கும் அவசியமானது.

பல், எலும்பு, திசுக்கள், ரத்தம், தசை, நரம்பு இவை அனைத்திற்கும் தாது உப்புக்கள் அவசியமாகின்றது. உடலில் பல செயல்களில் தாது உப்புக்கள் கிரியா ஊக்கி போல் வேலை செய்கின்றது. நரம்பின் மூலம் செய்திகள் பரவ, செரிமானம் நடைபெற வைட்டமின்கள் சீராக வேலை செய்ய தாது உப்புக்களே அவசியம். வைட்டமின் ‘சி’ சத்து உடலுக்கு நன்கு கிடைக்க கால்ஷியம் தேவை. வைட்டமின் ‘ஏ’ சத்து நன்கு உடலில் உறிஞ்சப்பட ‘ஸிங்க்’ தேவை.

பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் கிடைக்க ‘மக்னீஷியம்‘ தேவை. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ஹீம்’ எனப்படும் இரும்பு சத்து அசைவ உணவிலிருந்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. என்றாலும், தாவர வகை இரும்பு சத்தே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு சத்து உடைய சைவ உணவுகள்:

* உலர் திராட்சை - இதை நாள் ஒன்றுக்கு 4 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுடன் கலந்து உண்ணும் பொழுது இதில் உள்ள இரும்பு சத்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

* பயிறு வகைகள்

* பரங்கி, பூசணி விதைகள்

* சோயா பீன்ஸ்

* கீரை வகைகள்

* எள்

* கை குத்தல் அரிசி

* ஓட்ஸ்

* உருளைக்கிழங்கு

* சோயா பன்னீர்

* முழு கோதுமை

* பச்சை காலிப்ளவர்

* சூரிய காந்தி விதை

* பச்சை பட்டாணி

* அடர்ந்த சாக்லெட். ஒரு தாது உப்பு செயல்பட மற்ற தாது உப்புகளும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும். இவைகளை ‘எலக்ட்ரலைட்ஸ்’ என்பர். இவை நம் உடலில் மின்சாரத்தை தாங்கிச் செல்பவை. பச்சை கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவைகளில் தாது உப்புக்கள் கிடைக்கின்றன.

தாது உப்புகள் விவரம்:

கால்ஷியம் க்ரோபியம் காப்பர் புளோரைட் அயோடின் இரும்பு மக்னீசியம் மங்கனீஸ் பாஸ்பரஸ் செலினியம் ஸிங்க் மேஸிமிடனம் என பிரிவுபடும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.