தாம்பத்ய உறவு கொள்ள சரியான காலகட்டம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாம்பத்யஉறவுகொள்ளசரியானகாலகட்டம்

[/FONT]

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிகவும் ஏற்ற வயது 22ல் இருந்து 26க்குள் எனலாம். இதற்கு விதிவிலக்குகளும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இந்த வயதுகளில் குழந்தை பிறக்கவில்லை என்றால் பிறகு குழந்தையே பிறக்காதா? என்றால் அப்படி இல்லை. மேற்கண்ட வயதுக்கு பிறகு வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

முப்பது வயதில், 75 சதவீதம் பெண்கள் ஒரு ஆண்டில் கர்ப்பமாவார்கள். 91 சதவீதம் நான்கு ஆண்டுகளில் கர்ப்பமாவார்கள். 35 வயதில் 66 சதவீத பெண்கள் ஒரு ஆண்டில் கர்ப்பமாவார்கள். 84 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளில் கர்ப்பமாவார்கள். 40 வயதில் 44 சதவீதம் பேர் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள். 64 சதவீதம் பெண்கள் நான்கு ஆண்டுகளில் கர்ப்பமாவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியமில்லையா என்ற கேள்வி எழலாம். இதுவும் ஓரளவுக்கு முக்கியமே. ஆனால், பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல.

இதற்கு காரணம், பெண்கள் பிறக்கும்போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதக எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய்விடும். ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, வயதாக குறையும் என்பதும் உண்மை.

இருபதில் இருந்து 39 வயதில் 90 சதவீத ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். நாற்பதில் இருந்து 69 வயதில் 50 சதவீத ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 80 வயதுக்கு மேல் 10 சதவீத ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். பெண் வயதுக்கு வந்த பின்பு, சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை கருமுட்டைகள் வளர்ச்சி பெற்று ஃபேலோபியன் குழாய் வழியாக கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள்.

கர்ப்பம் தரிக்க சரியான நாட்கள் எவை என்று கேட்டால், எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதுதான் இதற்கு முக்கியம். கருமுட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18ல் இருந்து 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் ஃபேலோபியன் குழாயில் விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து சராசரியாக மூன்றில் இருந்து 5 நாட்கள் வரை பெண் உறுப்பில் உயிரோடு இருக்கும்.

கருமுட்டை வெளிவரும் போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும் உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கு வழி வகுக்கும். முட்டை வெளியீடு காலம் நடப்பதை எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்தால், இதை அறிந்து கொள்ளலாம்.

பெண்ணுறுப்பில் இருந்து வரும் திரவம் மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகிவிடும். மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிப்பு, காம வேட்கை அதிகரிப்பு, ரத்த சொட்டுக் கறை ஆகியவை தோன்றும். கணவருக்கு அருகிலேயே இருக்க தோன்றும். முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்ததும் உங்கள் உடல் வெப்பம் அதிகமாகும்.

மாதவிடாய் சீராக, சரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை நடந்தால் உங்கள் முட்டை வெளியீடு நாள் சரியாக 14ம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிடாய் சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விடாய் ஆரம்பிக்கும் நாளில் இருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.

கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் போது, தாம்பத்ய உறவின் போது எண்ணெய், ஜெல் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இவை விந்துவுக்கு ஆபத்தை விளைவிக்கும். பல பெண்கள் உடலுறவு கொண்டதும் உறுப்பை சுத்தம் செய்ய பல திரவங்களையும் தண்ணீரையும் பயன்படுத்துகிறார்கள். கருத்தரிக்க நினைப்பவர்கள் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த திரவங்கள் விந்துவை கொல்வதுடன் பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி அமைக்கும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
விரைவில் கருத்தரிக்க விரும்பும் பெண்களுக்கு

ஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும். 8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறிவிடும்....

ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட்களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடை நாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ள வேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளாலாம்.

இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களாக தான் இருக்கும். இதில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அந்த 5 நாட்களை கழித்துவிட்டால் மீதம் 23 நாட்கள் இருக்கும் இரத்தப் போக்கு முடிந்த 8 நாட்களுக்கு பின் கரு நல்ல நிலையில் இருக்கும்.

9 - 15வது நாள் வரையிலான 7 நாட்கள் கரு ஆரோக்கியமாக இருக்கும். பின் கடைசி 8 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்துவிடும். எனவே அந்த இடைப்பட்ட 7 நாட்களில் உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்புகள் இருக்கின்றன. கரு முட்டை தோன்றி வெளிவரும் நாட்கள் பெண்களின் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்.

இதை, நீங்கள் உடலின் அடிப்பகுதியில் தெர்மாமீட்டர் வைத்து கணக்கிட்டு பார்க்கலாம். கரு முட்டை அதன் நிலையை அடையும் வரை இந்த சூடு இருக்கும். அது தனது நிலையை 6-8 வது நாளில் அடைந்துவிடும். அந்த நாட்களில் இருந்து நீங்கள் உடலுறவுக் கொள்ள ஆரம்பித்தால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

உடலுறவில் ஈடுப்படும் போது, ஆண்களுக்கு விந்தணு வெளிபடுதல் போன்று, பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இறந்து ஓர் திரவம் வெளிப்படும். அந்த திரவம் நீர் போன்று இல்லாது கொஞ்சம் அடர்த்தியாக வெளிவருகிறது எனில், நீங்கள் கருத்தரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நாட்களில் ஆணுறையின்றி உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

பெண்களின் உடல் கூறில் சில அறிகுறிகள் தென்படும். வயிற்றின் ஒரு பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல், மார்பக பகுதியில் நிலைமாற்றம் அடைதல் அல்லது மென்மையாக உணர்தல் போன்ற அறிகுறிகள் நீங்கள் கருத்தரிக்க தயாராவதை குறிப்பிடுவன ஆகும். அந்த நாட்களில் நீங்கள் சரியான முறையில் உடலுறவுக் கொண்டால், கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.