தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய வ&

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன:
* கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா அல்லது அதைக் கடந்து விட்டேமா?
* தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
* உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
* கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
* கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
* தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
* உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேணடியது அவசியமா?
* உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
* பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
* பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
* எப்போது கருத்தரிக்க இயலும்?
* கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
* கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
* பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
* சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#2
Re: தாயாகும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய &#29

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கியமானது, 'உபசரிப்பு'! யார் வீட்டுக்கு வந்தாலும் 'தண்*ணீர் குடிக்கிறீங்களா?' என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து 'காப்பி குடிக்கிறீங்களா?' என்பார்கள். இது உண்மையிலேயே உபசரிப்பு என்ற நிலையிலிருந்து இப்போது 'சம்பிரதாயமாக' மாறிவிட்டது! ஆனாலும், வீட்டில் என்றாலும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது 'காப்பிதான் குடிக்கிறார்கள்'. தமிழ்நாட்டிலிருக்கும் டீ, காபி கடைகளே இதற்குச் சான்று! சாதாரணமாக, 'காப்பி' குடித்தால் பெரிதாக உடற்பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், அதனை அளவுக்கு மீறி குடித்தால், ஒரு சில பாதிப்புகள் ஏற்படும்.
இதே போல, கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு 'காப்பி' குடித்தால் என்னவாகும்?
கருச்சிதைவு பாதிப்பு ஏற்படும். குறைப்பிரசவம் தோன்றும்; பல்வேறு உடற்பாதிப்புகளுடன் குழந்தை பிறக்கும் என்று பல கருத்துக்கள் நிலவின. காப்பியிலுள்ள 'பாராசாந்தீன்' என்ற பொருளே (paraxanthine) கருவை பாதிப்பதாகக் கருதினார்கள். காப்பியிலுள்ள 'காஃப்பின்' என்ற பொருளும் கேடு விளைவிப்பதாகக் கருதினார்கள்.
'காஃப்பின்' என்ற பொருள் காப்பியில் மட்டுமில்லை.
'டீ' (தேனீரீலும்) உள்ளது. 'கோலா' வகை திரவங்களிலும், 'சாக்லேட்களிலும்' கலந்துள்ளது.
எனவே ஒரு காப்பியை பருகாமல் இருந்தபோதிலும், மேற்கூறிய பானங்களையும், சாக்லேட்டையும் உட்கொண்டாலும் அவர்களது உடலிலும் 'காஃப்பின்' உட்புகும்.
ஆனால் தற்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக, ஒரு நாளைக்கு 150 மில்லி கிராம் அளவிற்கு மிகுதியாகத் தொடர்ந்து காப்பியைப் பருகி வந்தால் தான், 'கரு' ஓரளவு பாதிக்கப்படலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, கர்ப்பிணிகள் முழுமையாக 'காப்பியை' நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப்படும் போது, இடையிடையே 'காப்பி' குடிப்பதால் கண்டிப்பாக 'கரு' பாதிக்கப்படுவதில்லை.
மேலும், 'தலைவலி' மாத்திரைகள் பலவற்றிலும் 'காஃப்பின்' உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் மருந்தையும் கர்ப்பத்தையும் பற்றித்தானே பேசுகிறோம், ஏன் காப்பியை குறித்துப் பேச வேண்டுமென்று! இங்கு காப்பியிலுள்ள 'காஃப்பின்' என்ற பொருள் குறித்து தான் நாம் பேசியிருக்கிறோம். அது ஒரு மருந்து தான்!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.