தாய்ப்பாலை பெருக்கும் முருங்கை பூ

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1

நமது வீடுகளில் வளர்க்கும் முருங்கை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை ஆகியவை உடலுக்கு உரம் அளித்து நீண்ட ஆயுளை தருகிறது. முருங்கைப்பூ மாத விலக்கை தூண்டக் கூடியது. ஆண்களைப் பொறுத்த அளவில் உயிரணுக்களை அதிகரிக்க செய்யக் கூடியது. ஆண் மலட்டுத் தன்மையை நீக்கக் கூடியது. உடலுக்கு மிகுந்த உரத்தை அளித்து உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக செயல்படுகிறது. முருங்கைப்பூவை பயன்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய மருந்து ஒன்றை தயார் செய்யலாம். இந்த முருங்கைப்பூ குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதற்கும் பயனுட்டக் கூடியதாக அமைந்துள்ளது.

இதற்கு தேவையான பொருட்கள் முருங்கைப்பூ, பூண்டு, பால், பனங்கற்கண்டு. முருங்கைப்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 4 அல்லது 5 பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்கவும். சிறிதளவு நீர் சேர்த்து முருங்கைப்பூவை வேக வைக்க வேண்டும். பூ வெந்ததும் இதனுடன் காய்ச்சிய பாலை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை நிறுத்த வேண்டும். உடலில் உஷ்ணம் அதிகரித்து கண் எரிச்சல் ஏற்படும் காலங்களில் இதை தொடர்ந்து பருகிவருவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கிறது. இளம் தாய்மார்கள் தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் பால் பெருக்கியாக இது செயல்படுகிறது.
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.