தாய்ப்பால் தடுமாற்றங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாய்ப்பால் தடுமாற்றங்கள்


ஏற்கனவே குழந்தை பெற்ற பெண்களுக்கும் சரி, பெறப் போகிறவர்களுக்கும் சரி... எப்போதும் சில விஷயங்களில் கேள்விகளும் சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால். அப்படி சில குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.தாய்ப்பால்தான் ஆரோக்கியமானது என வலியுறுத்தப்படுவது ஏன்?``பிறந்த குழந்தைக்கான மிகச் சிறந்த உணவு தாய்ப்பால். குழந்தைக்கு வயிறு மற்றும் சுவாச மண்டலம் தொடர்பான எந்தத் தொற்றும் ஏற்படாமல் காக்கும் IgA immunoglobulin இருப்பதே காரணம். அதிலும் குழந்தை பிறந்ததும் உடனே வருகிற சீம்பால் சத்துகள் நிறைந்தது என்பதால் சுகப்பிரசவமான பெண்கள் மட்டுமல்ல... சிசேரியன் ஆனவர்களும் மற்ற சிரமங்களைப் பார்க்காமல் குழந்தைக்கு உடனே தாய்ப்பால் தர வேண்டும்.


தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் ஆக்சிடோசின் என்கிற ஹார்மோன், பிரசவித்த பெண்ணின் கர்ப்பப்பையை சுருங்கச் செய்யவும், பிரசவத்துக்குப் பிறகான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவும்.’’தாய் எடுத்துக் கொள்கிற உணவுகளின் கலப்பு தாய்ப்பால் வழியே குழந்தைக்குச் செல்லுமா? உதாரணத்துக்கு தாய் மாம்பழம் சாப்பிட்டால், குழந்தைக்கு மாந்தம் ஏற்படும் என்பதெல்லாம் உண்மையா?

``இல்லை. தாய் என்ன சாப்பிட்டாலும் அதன் சத்துகள் மட்டுமே குழந்தைக்கு பாலின் வழியே போகும். தாய் எடுத்துக் கொள்கிற உணவினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படவெல்லாம் வாய்ப்பில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் கவனம் தேவை. தாய் எடுத்துக் கொள்கிற மருந்துகள், ஆன்ட்டிபயாடிக் உள்பட, அதன் வீரியம் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் போகும்.

தேவையின்றி எடுத்துக் கொள்கிற ஆன்ட்டிபயாடிக்கின் விளைவால் குழந்தைக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. அதனால், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அம்மாவுக்கு உடல்நலமில்லாத போது தாய்ப்பால் ஊட்டக்கூடாதா?``காய்ச்சல் இருந்தால்கூட தாய்ப்பால் கொடுக்கலாம். ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ள பெண்கள் மட்டுமே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், சமீப காலமாக அவர்கள்கூட தாய்ப்பாலை எடுத்து வைத்து பதப்படுத்தி, குழந்தைக்குக் கொடுக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.’’மார்பகங்களின் அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் தொடர்புண்டா?

``மார்பகங்களின் அளவு என்பது அந்தப் பகுதியில் உள்ள கொழுப்பால் தீர்மானிக்கப்படுவது. தாய்ப்பால் சுரப்பு என்பது பால் சுரப்பிகளின் வேலையால் நிகழ்வது. கொழுப்புக்கும் பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, மார்பகங்களின் அளவு குறித்த கவலை தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்குத் தேவையே இல்லை.’’

முதல் குழந்தைக்கு போதுமான அளவு பால் சுரக்காவிட்டால் அடுத்த குழந்தைக்கும் அப்படியே இருக்குமா?``முதல் அனுபவம் என்பது எல்லோருக்குமே மிகுந்த மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் கொடுப்பது இயல்பு.

முதல் பிரசவமும் அப்படித்தான். அதன் காரணமாகவும் தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் பற்றி அறிந்திராத காரணத்தாலும் பால் சுரப்பு குறைவாக இருந்திருக்கலாம். அது அடுத்தடுத்த பிரசவங்களுக்கும் தொடரும் என அர்த்தமில்லை. குழந்தை குடிக்கக் குடிக்க, பால் சுரப்பானது அதிகரிக்கும்.’’நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பது சரியா, தவறா?

``அதனால் தாய்க்கு சத்துக்குறைபாடு ஏற்பட்டு, பலவீனமாகலாம். மற்றபடி குழந்தைக்குப் பிரச்னைகள் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய்ப்பாலை மட்டுமே தொடராமல், திட உணவுகளையும் பழக்குவதுதான் குழந்தையின் முழுமையான ஆரோக்கியத்துக்கு உதவும்.’’முதல் அனுபவம் என்பது எல்லோருக்குமே மிகுந்த மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் கொடுப்பது இயல்பு. முதல் பிரசவமும் அப்படித்தான்...
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Nice sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.