தாய்மை அடைய உதவும் எண்ணை!

Joined
Dec 17, 2014
Messages
20
Likes
61
Location
srivilliputhur
#1
குழந்தைப் பேறு தள்ளிப் போய் தாய்மைக்காக ஏங்கிடும்பெண்களுக்கு என பல்வேறு தீர்வுகள் சித்தர்பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.அத்தகைய தீர்வுகள் சிலவற்றை முன்னரே சிலபதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில்இன்று தாய்மை எய்திட உதவிடும் எண்ணை ஒன்றினைப்பற்றி இன்று பார்ப்போம்.இந்த தகவல் புலிப்பாணி சித்தர் அருளிய“புலிப்பாணி வைத்தியம்” எனும் நூலில்இருந்து சேகரிக்கப் பட்டது.தானே தானின்ன மொன்று சொல்லக் கேளுதயவான வீழியலைச் சாறு நாழிமானேதான் தைவேளைச் சாறு நாழிமைந்தனே பிரமியிலைச் சாறு நாழிகோனேதான் கொட்டையிலைச் சாறு நாழிகொடிதான நிலவாகைச் சாறு நாழிதேனேதா னாவின்பால் படிதா னாழிதெளிவாகச் சரக்குவகை சொல்லக் கேளு.கேளேநீ மஞ்சளுடன் கடுகுகூடக்கெணிதமுட னிந்துப்பு வெண்கரந்தான்நாளேநீ கடுக்காயும் வெள்ளைப் பூண்டுநலமான ஆண்வசம்பு சுக்குங்கூடப்பாளேநீ வகைவகைக்கு விராகன் மூன்றுபண்பாகப் பொடிசெய்து இதனிற் போட்டுக்கேளேநீ விளக்கெண்ணெய் நாழிவிட்டுக்கொடிதாக மெழுகுபதந் தன்னில் வாங்கே.பாங்குடனே மாதவிடா மூன்றாம் நாள்தான்பண்பாகத் தலைமுழுகிக் கரண்டி எண்ணெய்தாங்கியே கொடுத்துவிடு நாள்மூன்றப்பாதயவாக மறுபத்திய மொருநாள் காருதூங்கியே திரியாதே ஐந்தா நாளில்துருசாகச் சிரசுக்கு நீரை வாரேவாரேநீ வறுத்தவுப்பு பொரிச் சாறப்பாவளமாக மற்றாநாளெல்லாஞ் சேருவீழி இலைச் சாறு ஒரு நாழி, தைவேளைச்சாறு ஒரு நாழி, கொட்டைக் கரந்தைச் சாறு ஒரு நாழி,பிரமியிலைச் சாறு ஒரு நாழி, நிலாவாகைச்சாறு ஒரு நாழி, பசும்பால்ஒரு நாழி ஆகியவைகளை எடுத்துக் கொள்ளவேண்டுமாம்.மஞ்சள், கடுகு, இந்துப்பு, வெண்காரம், கடுக்காய்,வெள்ளைப் பூண்டு, ஆண்வசம்பு, சுக்கு ஆகியவற்றில்வகைக்கு மூன்று விராகன் வீதம் எடுத்து நன்றாகப்பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம்.பின்னர் இந்தப் பொடியினையும், முன்னர் சேகரித்தசாறு வகைகளுடன் சேர்த்து அதனுடன் மேலும்ஒரு படி விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில்வைத்துக் மெழுகு பதம் வரும்வரை காய்ச்சி இறக்கிக்கொள்ள வேண்டுமாம்.கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆனமூன்றாவது நாள், தலை மூழுகிய பின்னர் இந்தஎண்ணெயிலிருந்து ஒரு கரண்டி எண்ணெயை அருந்தக்கொடுக்க வேண்டுமாம். பின்னர் இரண்டாம் நாளும்,மூன்றாம் நாளும் ஒவ்வொரு கரண்டிவீதம் அருந்தி,இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார்.மருந்துண்ணும் மூன்று நாளும் பத்தியமாக இருந்து,நான்காவது நாள் மருந்து சாப்பிடாமல் பத்தியமாகஇருக்க வேண்டுமாம். மேலும் நான்காம் நாள் பகலில்தூங்காமலும், வெய்யிலில் அலையாமலும் இருக்கவேண்டுமாம். ஐந்தாவது நாள் முழுகி அனைத்தும்வழக்கமான உணவுகளை உண்னத் தொடங்கலாமாம்.நான்கு நாட்களும் பத்தியமாகஉப்பு அதிகமுள்ள,வறுத்த, பொரித்த பண்டங்களை நீக்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.குறிப்பு :- ஒரு விராகன் என்பது தற்போதையஅளவுகளில் நான்கு கிராம் ஆகும்.குண்டலினி.... நாடிகளின்சூட்சுமம்!!குண்டலினி தொடரின்நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதாரசக்கரங்களில் இருந்து தாமரை இதழைப்போல வெளிக் கிளம்பும் நாடிகளைப்பற்றி பார்த்தோம்.இதன் பின்னே இருக்கும்சூட்சுமத்தை தொடரின் இறுதியில்பகிர்வதாக கூறியிருந்தேன். தொடரின்போக்கில் இந்த குறிப்பை அவதானிக்கதவறி விட்டேன். நிறைய நண்பர்கள் இதைக்குறிப்பிட்டு மின்னஞ்சல்அனுப்பி இருந்தனர்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....குண்டலினி யோகத்தின்போது மூலாதாரத்தில்நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில்ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில்பத்து இதழ்களும், அநாகதத்தில்பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில்பதினாறு இதழ்களும், ஆக்ஞையில்இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப்பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும்போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள்என்பது மிக நுட்பமானது, சூட்சுமம்நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம்என்பது ஐம்பத்தியோரு தமிழ்எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பரசக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின்உயிர் நாடியாகவும் இந்தஎழுத்துக்களே விளங்குகிறது.அகத்தியர் துவங்கி திருமூலர்,பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர்போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்தஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின்மகத்துவத்தை பாடியுள்ளனர்.திருமூலர் தனது திருமந்திரமாலை என்னும் நூலில்பின்வருமாறு குறிப்பிடுகிறார்."பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங்கானதே"- திருமூலர்.மேலும் திருமூலரே தனது திருமந்திரம்என்னும் நூலிலும் பஞ்சாக்கரம்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும்அமர்ந்ததே.- திருமூலர்.அருணகிரி நாதரும் தனது திருப்புகழில்பஞ்சாக்கரத்தை இவ்வாறுகுறிப்பிடுகிறார்."அகர முதலென உரைசெய்ஐம்பத்தோரட்சரமும்"-அருணகிரிநாதர்.இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின்பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்தஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிகமுக்கியமானதாகவும், உயர்தனித்துவமானவை என்றுபோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இப்போது மீண்டும்குண்டலினிக்கு வருவோம்.குண்டலினி யோகத்தில் ஏழு முக்கியஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும்நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும்ஒலிகளை தமிழ் எழுத்துக்களாககுறித்திருப்பது உங்களுக்கு இப்போதுநினைவுக்கு வரலாம்.நண்பர்களே, குண்டலினி யோகத்தில்ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும்போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும்ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கரஎழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும்ஐம்பது நாடிகளின் சப்பதங்கள்அய்ம்பது எழுத்துக்களாகவும், துரியநிலை சித்திக்கும் போது உருவாகும்உருவாகும் பேசாமொழியானஓரெழுத்தும் சேரஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன.இந்த பேசா மொழியைப் பற்றி முந்தையபதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன்.இதனை நாயோட்டு மந்திரம் என்றும்அழைப்பர்.வேறெந்த மொழிக்கும் இல்லாதசிறப்பு இது. இதனை மனதில்கொண்டே நம் பெரியவர்கள்தமிழை அழுத்தம் திருத்தமாய்உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம்சிறக்கும் என கூறியிருக்கின்றனர்.நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல்பிறமொழி மோகத்தில்உழன்று கொண்டிருக்கிறோம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
பகிர்வுக்கு நன்றி . பலருக்கும் உதவியாக இருக்கும்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.