தாய் மடி!

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
தாய் மடி!

thai.jpg

ஒரு பெண் தாய் ஆகிற தருணம்... அற்புதம்.
ஒரு பெண் கருவுற்ற நாளில் இருந்து அவளுக்குள் நடக்கும் மாற்றங்கள், அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தையி-டமும் பிரதி-பலிக்கும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று எடுப்பதற்கான சரியான வழியை மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரஷாத் இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
‘‘அறிவியல்ரீதியாகச் சொல்வதானால், வயிற்றில் இருக்கும் வரை ஒவ்வொரு குழந்-தை--யும் ஒரு ஒட்டுண்ணிதான்.... தனக்குத் தேவை-யான ஊட்டச் சத்தை, தாயின் உதிரத்---தி-ல் இருந்து அது உறிஞ்சிக்கொள்-கிறது. இதனால் தாயின் ரத்தத்தில் இருக்கும் ஹீமோ-குளோபின் அளவு குறைகிறது. இதை ஈடுகட்ட டாக்டரின் அறிவுரைப்படி இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம், ரத்தசோகைப் பிரச்னையில் இருந்து தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும். மேலும், ஃபோலிக் அமிலம் மாத்திரையை கருத்தரிப்பதற்கு முன்பிருந்தே எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தை-களுக்குப் பிறவியிலேயே ஏற்படக் கூடிய மூளை மற்றும் முதுகுத்தண்டு சம்பந்தமான சில குறை--பாடுகளைத் தவிர்க்கமுடியும்.
கருத்தரிப்பதற்கு முன்பே கண்டிப்பாக ருபெல்லா தடுப்பூசி (ஸிuதீமீறீறீணீ க்ஷிணீநீநீவீஸீமீ) போட்டுக்--கொள்ள வேண்டும். இது தாய்க்கும் சேய்க்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு, ஹீமோகுளோபின், உடல் எடை போன்றவை சரியான அளவில் உள்ளனவா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதேபோல, தாயின் உடல்நலம் எவ்வளவு முக்கியமோ, மனநலமும் அவ்வளவு முக்கியம். அதனால், பேறுகாலத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மன அதிர்வு, குழப்பம், மன அழுத்தம் போன்ற-வற்றுக்கு தாய் ஆட்பட்டால், சேயும் அவற்றின் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.
மசக்கை சமயத்தில் வாந்தி ஏற்படுவது இயற்கை. அதற்காக சாப்பி-டாமல் இருப்பது உடல் சோர்வைத்-தான் ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, ஒரு இட்லி, ஜூஸ் என்று கொஞ்சம், கொஞ்சமாக இடை-வெளிவிட்டு சாப்பிடலாம்.
‘எங்கள் பரம்பரையிலேயே யாரும் ஸ்கேன் டெஸ்ட் செய்துகொள்ள மாட்டார்கள், அப்படி செய்துகொண்டால் குழந்தை பாதிக்கப்படும்’ என்கிற வாதங்கள் உதவாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், குழந்தைக்கு எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தாது. குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அதுவே நமக்குத் துணைசெய்கிறது.
மருத்துவர் அறிவுரை இல்லாமல் சாதாரண தலைவலி, காய்ச்சல்தானே என்று மாத்திரைகளைப் பயன்படுத்துவது தவறு.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தான்! முதலில் தாய்மையை முழுமையாக அனுபவியுங்கள். அதைக் கொண்டாடுங்கள். கொண்டாடக் கொண்-டாட அந்தக் குழந்தையும் குதூகலிக்கும்!

நன்றி : டாக்டர் விகடன்
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
post new thread il pakkam podhavillaiyendral ennaseivadhu eppadi katturaiyin thodarchiyai inaippadhu
Hi Sathya,

Then you can make it by two posts...after posting the new thread,click "reply to thread" and post the rest of the article..hope this clears you..
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.