தாலிக்கு அர்த்தம் என்ன?

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,654
Likes
78,027
Location
Hosur
#1
தாலிக்கு அர்த்தம் என்ன?

திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சள் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம். சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக கழுத்தில் தாலி அணிகிறார்கள், ஆண்களும் காலில் மிஞ்சி அணிவதற்கு பதிலாக வேறு ஏதாவது கழுத்தில் அடையாளமாக அணிந்திருக்கலாமே என கேள்வி கேட்பவர்களுக்காக பெண்கள் பொதுவாகவே (பழங்காலத்து பெண்கள்) தரையை பார்த்துதான் நடக்கிறார்கள் (இப்பொழுதுதான் இருவரும் சரிசமமாகிவிட்டோமே) அதனால் அவர்கள் திருமணமான ஆண்களை அடையாளம் கண்டுகொள்ளத்தான் ஆண்களுக்கு காலில் மிஞ்சி அணிந்தார்கள். ஆண்கள் எப்படி நடப்பார்கள் என்பதுதான் எல்லாருக்குமே தெரியுமே. அதனால்தான் பெண்களுக்கு கழுத்தில் தாலி.

மன்னிக்கவும் நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு எங்கோ செல்கிறேன். இப்பவும் ஆண்கள் திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் தாலி கட்டுகிறோம். அந்த தாலிக்கு சில அர்த்தங்கள் இருக்கின்றன. நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்திகொள்ளவும், தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் தான் இந்த பதிவு.

தாலியை நன்கு கவனித்து பாருங்கள் அதை சுற்றி மொத்தம் ஒன்பது இழைகள் உள்ளது போல தோற்றமளிக்கும். கவனிக்காதவர்கள் பார்த்துக்கொள்ளவும். அந்த ஒன்பது இழைகளும் வெறும் வடிவமைப்புக்காக செய்யப்பட்டதல்ல. அவை ஒவ்வொன்றிற்கும் காயத்திரி மந்திரத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்மையும் பொதிந்துள்ளது.

தாலியின் இழைகள்:
1)வாழ்க்கையை உண்மையாக புரிந்துகொள்ளவேண்டும்
2)மேண்மை பெற வேண்டும்
3)ஆற்றல் மிக்கவராய் இருத்தல் வேண்டும்
4)தூய்மை அவசியம் வேண்டும்
5)தெய்வீகம் தேவை
6)உத்தம குணம் தேவை
7)விவேகம் முக்கியம்
8)தன்னடக்கம் கட்டாயம் தேவை
9)தொண்டு மனப்பாண்மை வேண்டும்

மேற்சொன்ன இத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தாலி. அதுவே பெண்களை காக்கும் வேலி


Regards
Sumathi Srini
 
Last edited:

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi sumathi,
naan thedi paarthen no 9 leaves. illaye.... i think ovvoru thaaliyum differsnu. neenga sonnadhu enakku pidichirundhadhu. but idhellam ponnungalukku thaana? andha thaaliyai kattum maappillaikku illaya? -Anitha Gowrisankar.
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,334
Location
Trichy
#5
தாலியில் உள்ள இலைகள் இல்லை அது, திருமணத்தின் போது கட்டும் மாங்கல்யத்தில் உள்ள 9 இழைகள்... சரிதானே சுமதி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.