தினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
ஆத்ம ஞானம் அருளும் லலிதா சகஸ்ரநாமம்

1526968449626.png

லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்லி வந்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்று ஹயக்ரீவர் கூறியுள்ளார். அகத்தியருக்கு லலிதா சகரஸ் நாமத்தை சொல்லும் போது அவர் இந்த தகவலை கூறினார். அவர் கூறி இருப்பதாவது:-

“ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தேவிக்கு மிகப் பிரியமானது. காலைக்கடன் முடித்து, ஸ்ரீசக்ரத்தைப் பூஜித்து, மூல மந்திரத்தை ஜபித்துத் தினந்தோறும் ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது எல்லா நன்மைகளையும் அளிக்கும். நோய்களை அகற்றி ஆயுளைத் தரும் என்று கல்பங்கள் கூறுகின்றன.

ஜ்வரம் உள்ளவன் தலையைத் தொட்டுப் பாராயணம் செய்தால் ஜ்வரம் அகலும். விபூதியை ஜபித்து இட்டால் நோய்கள் நீங்கும். கலசதீர்த்தத்தில் ஜபித்து அதை அபிஷேகம் செய்தால் கிரஹ பீடைகளும், ஆபசார தோஷங்களும் நீங்கும்.

ஸ்ரீவித்தைக்குச் சமமான மந்திரமும், ஸ்ரீ லலிதாவிற்குச் சமமான தேவதையும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குச் சமமான ஸஹஸ்ர நாமமும் கிடையாது. ஸ்ரீ சக்கரத்தை ஆயிரம் நாமங்களால் தாமரை, துளசிப்பூ, செங்கழுநீர்ப்பூ, கதம்பம், சம்பகம், ஜாதி, மல்லிகை, அலரி, நெய்தல், பில்வம், முல்லை, குங்குமப்பூ, பாடலி, தாழை, வாஸந்தி முதலிய புஷ்பங்களாலும், பில்வ பத்திரத்தாலும், ஒன்றாலோ, பலவற்றாலோ அர்ச்சிக்க வேண்டும்.

நவராத்திரி மஹா நவமியிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆசையுடன் அர்ச்சிப்பவர் அம்பிகையின் அருளை விரைவில் பெற்று ஆசைகளின் பூர்த்தி எய்துவர். ஆசையின்றிப் பாராயணம் செய்பவர் ஆத்ம ஞானம் பெற்றுப் பேரின்பமடைவர்.

தேவி ஸஹஸ்வ நாமங்களில் சிறந்தது பத்து:- கங்கா, காயத்ரீ, சியாமளா, லஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேசுவரீ, ஸரஸ்வதீ, பவானீ, அவற்றுள் இது மிகச் சிறந்தது.

அகஸ்தியரே! இங்ஙனம் உமக்கு ரகசிய ஸஹஸ்ர நாமத்தைக் கூறினேன். இதைப் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. நானும் உமக்கு என் இஷ்டப்படி இதைக் கூறவில்லை. ஸ்ரீலலிதா தேவியின் உத்திரவினால் கூறினேன்” என்றார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
அகம் புறத்தை மாற்றுகிறது , புறம் அகத்தை மாற்றுகிறது !


சோக மரத்தடியில் அமர்ந்திருந்த சீதாதேவி ஆச்சரியத்துடன் ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே... மரக் கிளையில் ஒரு குளவி, சின்னஞ்சிறு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து, அதைத் தன் கொடுக்கால் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருந்தது.

''திரிஜடா! என்ன செய்கிறது இந்தக் குளவி?'' என்று, தனக்குக் காவலாக நியமிக்கப்பட்டிருந்தவளும், தனது தோழியுமான திரிஜடையிடம் வியப்புடன் கேட்டாள் சீதா.

திரிஜடை சொன்னாள்... ''தாயே! அந்தக் குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி, ஒரு கட்டத்தில் அதைத் தன்னைப் போன்றதொரு குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப் பதால், அந்தப் புழு தானும் குளவியாகவே உருமாறிவிடும்!''

இதைக் கேட்ட சீதா யோசனையில் ஆழ்ந்தாள். பின்னர் கவலையுடன் கேட்டாள்... ''அடியே திரிஜடை! நான் எப்போதும் ராமபிரானையே

நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் விரைவில் நானும் ராமனாகவே மாறிவிடுவேனா? அப்படி மாறிவிட்டால் என்ன செய்வது? அப்போது உலகில் இரண்டு ராமர்கள் அல்லவா இருப்பார்கள்?''

திரிஜடை கலகலவெனச் சிரித்தபடி சொன்னாள்... ''அப்போதும் உலகில் ஒரே ஒரு ராமர்தான் இருப்பார், அம்மா! நீங்கள் ராமராக உருமாறியது போன்று, உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீராமர், சீதாதேவியாகஉருமாறிவிடுவார், இல்லையா?''

1527047592858.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

அகத்தில் நினைக்கும் எண்ணங்கள் புறத்தில் பற்பல விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இது என்றும் மாறாத உளவியல் விதி.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி, இந்த விதியை விளக்க எழுந்த முதுமொழிதான்.அதிலிருந்தே இன்னொரு விதியும் உருவாகிறது.

அகம் புறத்தை மாற்றுவது போலவே, புறமும் அகத்தை மாற்றுகிறது. புறத்தில் உள்ள விஷயங்களைச் சீராக்கினால், அகம் தானாக மாறுகிறது. உருவத்தை மாற்றினால், உள்ளமும் மாறிவிடுகிறது.


ராவணன் சீதையை ஏமாற்றித் தன் பக்கம் கவர்வதற்காக ஸ்ரீராமன் போல் தன் உருவை மாற்றிக்கொண்டான். ஆனால் ஸ்ரீராமனாக உருமாறியதும், அவனிடம் பிறன்மனைவியைக் கவரவேண்டும் என்கிற எண்ணமே தோன்றவில்லை. எனவே, மீண்டும் ராவணனாகவே தன் சுய உருவுக்கு மீண்டான் என்கிறது ராமாயணம்

1527048125258.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
புற விஷயங்கள் அக விஷயங்களை மாற்றுகின்றன என்பதற்கான அண்மைக்கால உதாரணம் ஒன்று.

காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட தம்பதி, அவர்கள். அன்புமயமாக வாழ்ந்து வந்தனர். பிறகு என்ன நேர்ந்ததோ, தெரியவில்லை; அவர்களுக்கிடையே சச்சரவுகள் ஆரம்பமாகி விட்டன. சில ஆண்டுகளாக அவர்களிடையே கடும் மனக்கசப்பு. இது விவாகரத்துச் சிந்தனை வரை கொண்டுவிட்டது.

ஆனால் மனைவிக்கும் சரி, கணவருக்கும் சரி... விவாகரத்தில் முழுச் சம்மதமில்லை. என்றாலும், ஒருகாலத்தில் மனப் பூர்வமாகக் காதலித்த தங்களால் ஏன் தற்போது அவ்வாறு ஒருவர் மீது ஒருவர் நேசம் கொள்ள இயலாமல் போனது என்றும் புரியவில்லை. இதுகுறித்து ஓர் உளவியல் நிபுணருக்குக் கடிதம் எழுதினர். தாங்கள் திரும்பவும் அன்பாக, அந்நியோன்னியமாக வாழ விரும்புவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். விரைவிலேயே அவரிடமிருந்து பதில் வந்தது.


'உங்கள் இருவரின் கையெழுத்தும் சாய்வாகவும் தெளிவில்லாமலும் இருக்கிறது. உள்மனமே கையெழுத்தை வடிவமைக்கிறது என, ஏற்கெனவே சித்தாந்தம் ஒன்று உண்டு. அதன்படி, கையெழுத்தின் மூலம் உள்மனத்தைச் சீர்செய்ய முடியுமா என ஆராய்ந்து வருகிறேன். நீங்கள் இப்போது விவாகரத்து செய்ய வேண்டாம். ஓர் ஆறு மாதம் இருவரும் கையெழுத்து நோட்டுப் புத்தகம் வாங்கிச் சீரான கையெழுத்து எழுதிப் பழகுங்கள். பிறகு, விவாகரத்தைப் பற்றி யோசிக்கலாம்.’


அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட அவர்கள், கையெழுத்து எழுதிப் பழகலானார்கள். மூன்றே மாதத்தில் நேரான தெளிவான கையெழுத்தில், தாங்கள் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தீவிர அன்பு செலுத்தத் தொடங்கிவிட்டதாகவும், விவாகரத்து யோசனையை அடியோடு கைவிட்டுவிட்டதாகவும் அவருக்கு பதில் எழுதினார்கள்.


உள்மனம் கையெழுத்தைத் தோற்றுவிப்பது போலவே, கையெழுத்தால் உள்மனத்தை மாற்ற முடியும் என்ற உளவியல் தத்துவம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

1527048598142.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
கனவுகளில் இருந்து விழித்தெழு. சோம்பலுக்கு இடம் தராதே. உண்மை உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்காக உன் இதயத்தை திறந்து வை. நன்னெறியைப் பின்பற்று. ஆனந்தம் தானாகவே உன்னிடம் அடைக்கலம் புகுந்துகொள்ளும்.

-புத்தர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,819
Likes
20,790
Location
Germany
பங்கஜ முத்திரை

1527109201009.png

நம் மனம் மலர் போன்று மென்மையாக, தன்னலமற்று, மலர்ச்சியாக இருந்தாலே போதும்; ஞானம் தானாகவே ஊற்றெடுக்கும். இந்த உலகையே பூலோகம் என்றுதான் அழைக் கிறோம். இப்பூலோகமானது தாமரை போல மெள்ள மெள்ள விரிந்து மலர்ந்து உண்டானதாக பத்ம புராணம் கூறுகின்றது.

படைப்புக் கடவுள் பிரம்மன், மகாவிஷ்ணு வின் நாபிக்கமலத்தில் (தாமரையில்)அமர்ந்திருக்கிறார். இதனை உணர்த்தவே தாமரைக்கு பங்கஜம் என்றும் பத்மம் என்று பெயர்கள் வந்தன. ஆன்மா, நம் உடலில் பங்கஜ வடிவில் இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன. இந்த பங்கஜம் போன்று மனதை மலரச்செய்வது பங்கஜ முத்திரை.

எப்படிச் செய்வது?:
சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று... அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).

இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும். தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

பலன்கள்:
சேற்றில் மலர்ந்தாலும் தூய்மை யாகவும் அழகுடனும் திகழும் தாமரை. அது நீரில் மிதந்தாலும் அதன் இதழ்களில் தண் ணீர் ஒட்டாது. பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

** மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

** தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

** மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,072
Likes
3,165
Location
India
மகிழ்வான வாழ்வுக்கு ஒரு மாய மந்திரம்..! “ஓம்”





ஓம் என்ற பிரணவ மந்திரம் உள்ளத்தில் ஒலித்தால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை தரும்.

அமைதியை தேடி அலைகின்ற மனங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம். ஒற்றைச் சொல்தான் என்றாலும் அதன் சக்தி சொற்களை கடந்தது. ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள் அனுபவ பூர்வமாக நாம் உணர வேண்டிய ஒன்று.
'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

மேற்கு வங்கமாநிலத்தில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியில் ஆடம்ஸ் உலக பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி அனேசா ராய் சௌத்ரி ஓம்' மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் லாக்டிக் அமிலத்தை குறைக்கிறது, இதனால் சோர்வு நிலை குறைகிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உடற்கூறியல் பேராசிரியர்களாலும் ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தினாலும் இது ஆய்வு செய்யப்பட்டது.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறை தலைவரான தேபாஷிஷ் பந்தபத்யாயி கூறும் போது அனேசா ராயின் கண்டுபிடிப்பு நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் தெளிவானதாக உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ஒலியைக் கேட்டறிந்திருந்தால் அல்லது சரியாக வாசிக்கப்பட்டால், செரோடோனின், டோபமைன், போன்ற நரம்பியக்கடத்திகள் மற்றும் ஹார்மோன்களின் நிலைகளை எழுப்புகிறது. அவற்றின் வேசோடைலேட்டரி செயல்களின் காரணமாக, இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. இது குறைவான லாக்டிக் அமிலத்தையும் உற்பத்தி செய்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். ஆனால் 'ஓம்' ஒலிப்பில் இந்த குறிப்பிட்ட கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது "என்று மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் ரினா வெங்கடராமன் தெரிவித்தார்.

'ஓம்' ஒலிப்பதன் மூலம் ஏற்பட்டும் இத்தகைய மாற்றத்தை யாரும் முன்கூட்டியே துள்ளியமாக சுட்டிக்காட்டவில்லை. மேலும் இதுகுறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி திப்பாங்கர் தாஸ் கூறினார்.

ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது அதோடு மட்டும் அல்லாமல் 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. தூயமையான எண்ணத்தோடு சாந்தமான ஆரோக்கியமான ஒரு வாழ்வு வாழ ஓம் என்று உச்சரிப்போம் உன்னத வாழ்வுதனை பெறுவோம்..!
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
லலிதா சகஸ்ரச நாமத்தை பாராயணம் செய்தால் கைமேல் பலன்

1527160524265.png

வாழ்க்கையில் சுகம் என்ன என்பதை மறந்தும்கூட காணாதவர்கள் லலிதா சகஸ்ரச நாம ஜெபத்தின் மூலம் சுகத்தை நிச்சயமாக அடையலாம். ஓம் க்லீம் சர்மதாயின்யை நம என்பது மந்திரம்.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஒளிவிடும் இந்த மந்திரம் மந்திரங்களின் ஆணிவேர் என்றும் கூறலாம். சுக்ல சதுர்தசியில் மாலை வேளையில் நாம பாராயண பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீசக்ர மேரு, பூபுரசக்கரம் இவைகளில் அருச்சிக்கலாம். சிறப்பாக நுனிகிழியாத ‘தாய் வாழை’ இலையின் நடுப்பகுதியில் கைப்பிடி அளவு சந்தன உருண்டையை வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது திரிகடிகை பிரமாணம் சந்தன உருண்டையை வைத்துக் கொள்ளலாம். இதைத் திரிகோணாகாரமாக கோபுரம் போல் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பூந்தளிர் திரிதளவில்வத்தின் மீது இதை வைக்க வேண்டும்.

ஆவாகன உபசாரங்கள் செய்து அர்ச்சனையில் ஸ்ரீமத் லலிதா சகஸ்ர நாம அருச்சனை செய்ய வேண்டும். இந்த பூஜை முடித்த பிறகு அந்த சந்தனத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் நெற்றியில் பஞ்சதசாட்சதி சொல்லித் தரித்துக் கொள்ள வேண்டும். இது முகவசீகரம் தரும். காரிய வெற்றி தந்து உதவும். செய்யும் பணியில் செல்வாக்கைத் தரும்.

பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு லலிதா சகஸ்ர நாமத்தை படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் கயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.