தினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
செயல் ஒன்று... எண்ணம் வேறு!

ஒரு தெரு வழியே பிச்சைக்காரன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு வீட்டின் முன் நின்றான்.

வீட்டுக்குள் இருந்து ஓர் அம்மா குழந்தையோடு வந்தாள். குழந்தை கையில் அரிசியைக் கொடுத்துப் பிச்சை போடச் சொன்னாள். அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டின் முன் வந்து நின்றான் பிச்சைக்காரன். அந்த வீட்டுப் பெண்ணும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையைக் கூப்பிட்டு, அந்தக் குழந்தை கையால் பிச்சை போடச் செய்தாள்.

கொஞ்ச காலம் கழித்து, இரு பெண்களும் இறந்து மேல் உலகம் போனார்கள். முதல் பெண்ணை சொர்க்கத்துக்கும் இரண்டாவது பெண்ணை நரகத்துக்கும் அனுப்பச் செய்தார் நீதி தேவன்.
இரண்டாவது பெண், “என்னை மட்டும் ஏன் நரகத்துக்குப் போகச் சொல்கிறீர்கள்? அந்தப் பெண், தன் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரிதானே நானும் செய்தேன்?” என்றாள்.

அதற்கு நீதிதேவன், “நீங்கள் இருவருமே குழந்தை கையால் பிச்சையிட்டாலும், உங்கள் இருவரின் நினைப்பும் வேறு மாதிரி இருந்தது. அந்தப் பெண், குழந்தை கையால் பிச்சை போட்டால், அந்தப் புண்ணியம் தன் குழந்தைக்குக் கிடைக்குமே என்று நினைத்தாள். அதனால் அவளுக்குச் சொர்க்கம். ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால், அதிக அரிசி போடவேண்டியிருக்குமே என்று நினைத்து, குழந்தையின் கையால் பிச்சை போட்டாய். உனது இந்தக் கெட்ட எண்ணத்தாலேயே உனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை” என்றார்.

1529044040201.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரு கப்பலை மூழ்கடிக்க முடியாது; கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்! அதுபோல், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் உங்களைப் பாதிக்காது; நீங்கள் அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளாத வரையிலும்!

1529044114082.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
பலசாலியும் முதலையும்!

ஓர் ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். அவன், தன்மீது ஊராருக்கு இருந்த பயத்தையும் மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்த விரும்பினான். ஏதேனும் பயங்கரமான பிராணியை எடுத்து வளர்த்து வந்தால், ஊரார் மத்தியில் தன் மீதான பயமும் மரியாதையும் அதிகரிக்கும் என்று கருதினான்.

ஒருநாள் அவன் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, முதலைக் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது. ஆவலுடன் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் பலசாலி. முதலைக் குட்டியைக் கண்டு அவனது வீட்டார் பயந்தார்கள். பலசாலிக்கோ, அப்போதே தனது எண்ணம் நிறைவேறிவிட்டதாக பெருமிதம். முதலையை மிக செல்லமாக வளர்க்கத் துவங்கினான். எங்கு சென்றாலும் முதலைக் குட்டியையும் எடுத்துச் சென்றான். ஊரார் அவனை நெருங்கவே பயந்தனர். தெருமுனையில் அவனைக் கண்டதுமே விலகி ஓடினார்கள். பலசாலிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி!

நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும், அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை. அதனால் அவனது வீட்டாரும் அவனை விட்டு விலகிச் சென்றார்கள். ஆனாலும் மற்றவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது. நன்கு வளர்ந்துவிட்ட முதலையின் வலிமையோடு அவனால் போராட முடியவில்லை. இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது.

தீய பழக்கங்களும் இப்படித்தான்... முதலில், ஆபத்து இல்லாததுபோல் நமக்குள் நுழைந்தாலும், பிறிதொருநாள் நம்மையே அது விழுங்கி விடும்!

1529204837618.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
சுவாமி விவேகானந்தர்

உன்னால் சாதிக்க இயலாதது என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், எவரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டுதான் இருக்கிறார்.

* நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவை, நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

* விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர அழுவதற்காக அல்ல.

* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

* மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

1529205009970.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
எப்படி ஜபிக்க வேண்டும்?



ருத்திராட்சம், துளசி, ஸ்படிகம், மிளகு, தாமரை விதை ஆகியவற்றாலான ஜப மாலையைப் பயன்படுத்தி ஜபம் செய்வார்கள். வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்தி நகர்த்தவேண்டும்.

* 108 மணிகள் கொண்ட மாலையைப் பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72,000 நாடிகள் இணைவதால், அந்தப் பகுதியைத் தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் என்பார்கள் பெரியோர்கள்.

* ஜபிக்கும்போது, `கிருஷ்ண மணி' எனப்படும் 109-வது மணியைத் தாண்டக்கூடாது. மீண்டும் ஜபித்த வழியே மாலையைத் திருப்பி ஜபிக்கவேண்டும்.

* வெறும் தரையில் அமர்ந்து ஜபம் செய்யக்கூடாது. தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித் துண்டின் மேல் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து, அதன் மீது அமர்ந்து ஜபம் செய்யவும்.

* ஜபிக்கும்போது, ஜப மாலை வெளியே தெரியாதபடி ஒரு துணியால் மூடியபடியோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து, அதன் உள்பகுதியிலோ வைத்து ஜபிக்கவேண்டும்.

* மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் - அந்த மந்திரத்துக்குரிய தெய்வத்திடம் நிலைநிறுத்தி, உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும்.

* தீட்சை பெற்ற மந்திரத்தைச் சத்தமாகச் சொல்லக்கூடாது. உதடுகள் அசையக்கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும்.

* குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தைச் சத்தமாக ஜபிப்பது, வெளிநபர்களுக்குக் கூறுவது, எழுதிவைப்பது ஆகியன, மந்திர யோகத்துக்கு எதிரானவை.


* வீட்டில் அமர்ந்து ஜபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜபம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜபித்தால் 1000 மடங்கும், மலை மீது அமர்ந்து ஜபித்தால் 10,000 மடங்கு பலனும் கிடைக்கும்.

* திருக்கோயிலில் அமர்ந்து ஜபம் செய்தால், லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாதக்கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜபம் செய்தால், கோடி மடங்கு பலன் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

* சந்தியா காலமாகிய சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வேளையில் ஜபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும்.

* மந்திர ஜபம் செய்து வருபவர்கள், எளிமையாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், மெல்லிய ஆடைகளை அணிவதும் சிறப்பு.

* மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஞான மந்திரங்களை வடக்கு நோக்கியும், இல்வாழ்வுக்கு உரியவற்றைக் கிழக்கு நோக்கியும் அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு.

* மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்கவேண்டும். வீட்டில் வைத்து ஜபிப்பதாக இருந்தால், பூஜையறையில் வைத்து ஜபிக்கலாம்.

* ஜபிக்கும்போது, அறையில் தூப மணம் நிறைந்திருப்பது சிறப்பு. சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷண சக்தி உள்ளதால், சாம்பிராணி தூபம் உபயோகிப்பது மிகவும் சிறப்பானது.

* பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி ஆகிய தினங்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர ஜபத்துக்குச் சிறப்பான நாள்களாகும். அனுதினமும் ஜபிக்க இயலாத அன்பர்கள், இதுபோன்ற விசேஷ தினங்களில் இறை நாமங்களை ஜபித்து திருவருள் பெறலாம்.

* மந்திர ஜபத்துக்குமுன், விநாயகரை தியானித்து வழிபட்டு, ஜப வழிபாட்டுக்கு எவ்விதத் தடங்கலும் நேராமல் காத்தருளும்படி வேண்டிக்கொண்டு, ஜபம் செய்ய ஆரம்பிக்கலாம்.

* மந்திரத்துக்கு உரிய தெய்வத்துக்கு மலர், தூப-தீப, நைவேத்திய ஆராதனைகளைச் செய்தபிறகு, மந்திரங்களை உருக்கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். உரிய எண்ணிக்கையில் உருக் கொடுத்த (ஜபம் செய்த) பிறகு கற்பூர ஆரத்தி காட்டிப் பூஜையை நிறைவு செய்யவேண்டும். ஜபிக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக்கொள்ள, உரிய ஜப மாலையை உபயோகிக்கலாம்.

* மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜபிப்பதே சிறப்பானதாகும். தகுந்த குருநாதரால் மட்டுமே, ஜபம், தியானம் குறித்துச் சரியான வழிகாட்டலை வழங்கமுடியும்.

1529639491629.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
meaning of the word avatara !!

When elephant Gajendra’s foot was firmly grabbed by a crocodile, the elephant cried out in pain. The Lord came to His rescue at once. When in pain, the elephant must have screamed ‘Aah.’ The Lord took this to be a reference to Him. The first letter in the Tirumantra is ‘a.’ This refers to Lord Narayana’s role as protector. So, when the elephant gave out a loud ‘aah’ in pain, the Lord felt that Gajendra was reminding Him of His role as protector!

As soon as he heard the elephant’s cries, the Lord rushed to save Gajendra. When the Lord arises from His throne, Visvaksena holds His hand and the Lord rises. This is does not mean that He needs anyone’s support or help. This is one of the ways in which respect is shown to the Lord by Visvaksena. But when He wanted to save Gajendra, He did not wait for such formalities, said M.A. Venkatakrishnan in a discourse. He mounted Garuda and took off at great speed. Parasara Bhatta, in his Sri Rangarajastava, says that he salutes the Lord’s speed! One of the names of the Lord in the Sahasranama is Sisirah, which means the One who moves speedily to help those in distress.

When He reached the spot where Gajendra was, and had saved him, the Lord consoled Gajendra and felt sorry that He had been far away when His devotee was in distress. The name dakshiNah in the Sahasranama indicates this. The name vidvattamah means that He knew how to treat the elephant’s injuries. Veetabhayah shows that His very speed rid the elephant of its fear.

Lord’s avatara shows the meaning of the word avatara. It does not just mean His descent in a physical form. It shows that He does not hesitate to descend to our level. Disregarding His greatness, He is by our side, to comfort and help us.

1529764916631.png
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,411
Likes
553
Location
chennai
அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!

கயிலாயத்தில் ஒரு நாள் நந்தி பகவானுக்கு தன் மீதும் தன் சிவ பக்தியின் மீதும் அதிக கர்வம் ஏற்பட்டது. உலகத்திற்கே படியளக்கும் எம்பெருமானுக்கு இது தெரியாதா என்ன. நந்தியின் கர்வத்தை அடக்க நினைத்த ஈசனும், நந்தியின் மேல் அமர்ந்தபடி ஒரு முறை பூமியை வலம் வந்தார்.

அவரைச் சுமந்து சென்ற நந்தீஸ்வரர்க்கு மூன்று லோகங்களையும் தாங்குகின்ற இறைவனையே நான் தாங்குகிறேன். ஆகா! என்னே என் திறமை? என்ற எண்ணத்துடன் நந்தி இறைவனைச் சுமர்ந்து வந்தார். இறை தொண்டு செய்கின்றவர்களுக்கு இந்த மாதிரி எண்ணம் வந்தால் அது பாபம் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நந்தியின் கர்வத்தை அடக்கும் நேரமும் வந்தது. இறைவன் தன் ஜடா பாரத்திலிருந்து ஒரு முடியை எடுத்து தாம் அமர்ந்திருந்த நந்தி முதுகில் வைத்துவிட்டு இறங்கிக் கொண்டார்.

அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் நான்கு கால்களும் பின்னலடைய நந்தி அப்படியே நாக்குத் தள்ளியபடியே நின்றுவிட்டார். மொத்த சடாமுடியும் சுமக்கும் போது பாரம் இல்லை. ஏனென்றால் இறைவன் அப்போது நந்தியுடன் இருந்தார். ஆனால் ஆணவம் உண்டாகி, இறைவனை விட்டு பிரிந்த போது ஒரு முடியின் பாரம் கூட தாங்க முடியவில்லை.

தனது வல்லமையின் மீது கர்வம் கொண்டிருந்த நந்தீஸ்வரரும் தனது தவறை உணர்ந்து கர்வம் நீங்கினார். அவனன்றி இவ்வுலகில் எது அசையும்!
1529921469535.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
தியானம்!


சபர்மதி ஆஸ்ரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியிருந்த ஆச்சார்ய வினோபாபாவே, எவருடனும் அளவுக்கு அதிகமாகப் பேச மாட்டார்; தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பார். ஓய்வு நேரங்களில் பகவத் கீதை படிப்பார்.

ஒரு நாள், சபர்மதி ஆஸ்ரமத்துக்கு ஆச்சார்ய கிருபளானி வந்தார். காந்திஜியை சந்தித்த அவர், ''பாபுஜி, தியானம் என்றால் என்ன?'' என்று கேட்டார்.


உடனே, ''வாசலில் உட்கார்ந் திருக்கிறார் பார், வினோபா. அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்'' என்றார் காந்திஜி.

வாசலுக்கு வந்த கிருபளானி, வினோபாவை பலமுறை அழைத் தும் அவர் கண்டுகொள்ளவில்லை. கிருபளானி தன்னை அழைப்பதை கவனியாமல், பகவத் கீதை படிப்பதில் மும்முரமாக இருந்தார் வினோபாஜி.

இதனால் கிருபளானி சலிப்படைந்தார். அவர் மீண்டும் காந்திஜியிடம் சென்று, ''நான் வந்ததையே வினோபாஜி கண்டுகொள்ள வில்லை. நான் அழைப்பதைக்கூடக் கவனிக் காமல், படித்துக்கொண்டே இருக்கிறார்!'' என்றார்.

காந்திஜி புன்சிரிப்புடன் சொன்னார் ''தியானம் என்றால் என்னவென்று கேட்டாயே, அது இதுதான். மனத்தில் சிறிதுகூட சஞ்சலம் ஏற்படாமல், கவனத்தை ஒரே விஷயத்தில் செலுத்தியிருக்கிறாரே, அதுதான் தியானம்!''

1530049969749.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
தனியே வா!'

வியாச முனிவரின் மகன் சுக முனிவர். அவரை எல்லோரும் 'சுக பிரம்ம மகரிஷி' என்றே அழைப்பர்.

ஒருநாள் தன் தந்தையிடம், ''பிரும்ம ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள்'' எனக் கேட்டார் சுக முனிவர்.

''மிதிலைக்குச் செல். அரசர் ஜனகரே உனக்குப் பிரம்ம ஞானம் வழங்கத் தகுதி உடையவர்'' என்றார் வியாசர்.

அதன்படி மிதிலை அரண்மனையை அடைந்தார் சுக முனிவர். காவலர்களிடம், ''உங்கள் அரசரிடம் போய் சுக பிரம்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள்'' என்றார்.

காவலாளிகளும் ஜனகரிடம் சென்று, சுக பிரம்ம மகரிஷி வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு ஜனகர், ''அவருடன் வந்திருக்கும் மற்ற இருவரை விட்டுவிட்டு, அவரை மட்டும் தனியாக வரச் சொல்லுங்கள்'' என்றார்.

''அரசே! அவர் தனியாகத்தான் வந்திருக்கிறார்'' என்றார்கள் காவலாளிகள்.

ஜனகர், ''நான் சொன்னதை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்!'' என்றார் கண்டிப்புடன்.

சுக முனிவரிடம் வந்த காவலர்கள், அரசர் கூறியதை அப்படியே அவரிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார் சுக முனிவர். பின்னர், காவலாளிகளுடன் சென்று அரசரைச் சந்தித்து, ''நான் சுக பிரம்மம் வந்திருக்கிறேன்'' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இப்போது ஜனகர் என்ன சொன்னார் தெரியுமா? ''உங்களைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்..! இப்போதும் துணைக்கு ஒருவரை வைத்துக்கொண்டிருக்கிறீரே?'' என்று கேட்டாராம்.

சுகருக்கு இப்போதுதான் தனது தவறு புரிந்தது. அவர் சொன்னார்... ''மன்னிக்கவும். நான் சுகன் வந்திருக்கிறேன்!''

ஆம்... பிரம்ம ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கு, அகங்காரம் அறவே கூடாது!

1530050150317.png
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
மனக்கட்டுப்பாடு

தம்மிடம் சீடனாகச் சேர வந்திருந்த சுவாமி விவேகானந்தருக்கு சிறிய சோதனை ஒன்று வைத்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

விவேகானந்தரின் நாக்கை நீட்டச் சொல்லி, அதில் சிறிய வெல்லக்கட்டி ஒன்றை வைத்து, வாயை மூடிக்கொள்ளச் சொன்னார். சிறிது நேரம் கழித்து நாக்கை நீட்டச் சொல்லி, வெல்லக்கட்டியைப் பார்த்தார். அது, அவர் வைத்தது போலவே, சிறிதும் கரையாமல் இருந்தது.

எவராக இருந்தாலும் வெல்லத்தை வாயில் போட்டதும் எச்சில் ஊறும்; வெல்லக்கட்டி சிறிதாவது கரையும். விவேகானந்தர் விஷயத்தில் அப்படி நடக்காதது கண்டு, பரமஹம்சருக்கு ஆச்சரியம்!

''இந்த அளவுக்கு உன்னிடம் மனக்கட்டுப்பாடு உள்ளதே... உன்னை சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார்.

1530050352521.png
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.