திருநீற்றுப் பச்சிலை சிறப்பு! - Health Benefits of Sweet Basil

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
திருநீற்றுப் பச்சிலை!
பூ
க்களுக்கு மணம் உண்டு. சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இதன் பயன்களும் பல!

* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

* இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

* திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

* காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.

* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.

* திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

* 5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.

source vikatan
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.