திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,804
Location
Germany
#61
திருமலையில் கனமழை: முடி காணிக்கை செலுத்துமிடத்தில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி

|பக்தர்கள் தங்கும் மூன்றாவது மண்டபத்தில் தேங்கிய மழைநீரில் நின்றபடி முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள்.

திருமலையில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் முடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டம் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

வானிலை மாற்றம் காரணமாக திருமலையில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லவும், தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் தங்கள் அறைக்குத் திரும்பவும் முடியாமல் சிரமப்பட்டனர்.

கனமழை காரணமாக தேவஸ்தான ஊழியர்கள் குடியிருப்பு அருகில் ஒரு மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டது.

அந்த மரத்தை தேவஸ்தான ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலையில் அகற்றி மின்கம்பத்தை சீர்செய்தனர். அதன்பின் திருமலையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் தங்கும் மூன்றாவது மண்டபத்தில் கனமழை காரணமாக மழைநீர் புகுந்தது. மண்டபம் முழுவதும் மழை நீர் தேங்கியது. அதனால் பக்தர்கள் அதில் தங்க முடியாமல் சிரமப்பட்டனர். அங்குள்ள முடி காணிக்கை செலுத்துமிடத்திலும் மழை நீர் தேங்கியதால் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

இரவு முழுவதும் மழைநீர் அகற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து தேவஸ்தான ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலையில் மழை நீரை அகற்றினர். பக்தர்கள் தங்கும் மண்டபத்திற்குள் மழைநீர் புகுவதைத் தடுக்க தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#62
ஏழுமலையான் தரிசனம்: டோக்கன் முறையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

1526108174738.png

திருமலையில் நேர ஒதுக்கீட்டு முறை குறித்து விளக்கம் அளிக்கும் செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் தற்போது வழங்கி வரும் நேர ஒதுக்கீட்டு தரிசன டோக்கன் முறையை பக்தர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு கேட்டுக் கொண்டார். தமிழக பக்தர்களுக்காக அவர் தமிழில் உரையாடினார்.

திருமலையில் அனுமந்த ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த அவர் அதன் பின் பக்தர்களிடையே பேசியதாவது:

திருமலைக்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர்.

பக்தர்களின் இந்த சிரமத்தைக் குறைக்க தேவஸ்தானம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.300க்கு விரைவு தரிசனத்தை அமல்படுத்தியது. அதன்பின் இணையதளம் மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் தாங்கள் விரும்பும் தேதியில் விரும்பும் நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்தது.

அதன்படி விரைவு தரிசன முன்பதிவு மூலம் டிக்கெட் பெற்று வந்தவர்கள் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். அதனால் அவர்களுக்கு வாடகை அறை தேவையும் அவசியமில்லாமல் போனது. தேவஸ்தானம் இந்த முறையை அனைவரும் அமல்படுத்த முடிவு செய்து. கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடைபாதை மூலம் வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறையை தேவஸ்தானம் அமல்படுத்தியது.

அவர்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் அவர்கள் தரிசன வரிசைக்குள் செல்வதன் மூலம் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பினர்.
இந்த நடைமுறை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்ததால் தர்ம தரிசன பக்தர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சோதனை முறையில் நேர ஒதுக்கீடு டோக்கன் அளிக்கும் நடைமுறை தொடங்கியது.

அதற்கு பக்தர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தர்ம தரிசன பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீட்டு முறையை முழுவதுமாக அமல்படுத்தினோம். இந்த டோக்கனைப் பெற பக்தர்கள் தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

அதன்படி தற்போது ஒரு நாளைக்கு 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 20 ஆயிரம் நடைபாதை தரிசன டிக்கெட்டுகள், 20 ஆயிரம் தர்ம தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு, 60 ஆயிரம் பேர் எளிதாக அதிக காத்திருப்பு இல்லாமல் 2 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டர்களுக்கு செல்லும்போது 10 மணி நேரத்திற்குப் பின் தரிசன நேரம் ஒதுக்கப்பட்டால் வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு சென்று காத்திருந்தால் விரைவில் ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கருதுகின்றனர்.

வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்கும் நேரமும், நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டர்களில் அளிக்கப்படும் தரிசன நேரமும் ஒன்றாக இருக்கும். அதில் மாற்றம் இருக்காது.
உதாரணத்திற்கு ஒரு பக்தர் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டருக்கு சென்று தரிசன டோக்கன் பெற்றுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரது டோக்கனில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தரிசனம் என்று குறிப்பிட்டிருக்கும். எனினும், அவர் வெள்ளிக்கிழமை காலை வரை காத்திருக்க விரும்பாமல் நேரடியாக திருமலைக்கு சென்று தர்ம தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்கிறார். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காத்திருப்பு அறைகள் திறந்து அவர் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.
அதனால் டோக்கனில் குறிப்பிட்ட நேரமும், வைகுண்டம் காத்திருப்பு அறையிலிருந்து அவர் தரிசனத்திற்கு திறந்து விடப்பட்ட நேரமும் ஒன்றுதான். ஏனென்றால் ஏழுமலையான் கோயிலில் தினசரி நடக்கும் கைங்கர்யங்கள், இதர தரிசன டிக்கெட் நேரங்கள் இவற்றைக் கணித்து நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டர் ஊழியர்கள் தரிசன டோக்கன்களை வழங்குகின்றனர்.

தரிசன டோக்கன் பெற்ற அவர், வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருந்த நேரத்தில் திருமலையில் உள்ள கோயில்கள் மற்றும் புனித தீர்த்தங்கள் அல்லது திருப்பதியில் உள்ள கோயில்கள் அல்லது நேரம் அதிகமாக இருந்தால் காணிப்பாக்கம், காளஹஸ்தி போன்ற கோயில்கள் அல்லது ஆர்.டி.சி (ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம்) வழங்கும் ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம்.

அறையில் காத்திருப்பதால் பயனில்லை. எனவே, திருமலைக்கு வரும் பக்தர்கள் இனி இந்த நேர ஒதுக்கீட்டு டோக்கன் முறையைத் தவறாமல், பயன்படுத்திக் கொண்டு விரைவில் ஏழுமலையானைத் தரிசிப்பதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வரும் வகையில் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#63
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 25 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையான அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த நேர ஒதுக்கீடு திட்டம் கடந்த 2-ம் தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் நேற்றிரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்டவெளியிலும் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது.

எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள நேரத்திற்கு தரிசனத்திற்கு வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#64
உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' திருமலைநம்பியின் அன்பில் நெகிழ்ந்த ராமாநுஜர்!


திருவரங்கத்தை வைணவத்தின் தலைநகராகக் கொண்டு `உடையவர்' எனும் ராமாநுஜர் ஆற்றிய தொண்டுகளும், ஆகமப் பணிகளும் அளவிட முடியாதவை. வைணவத் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று, மக்கள் மனங்களில் பக்தியுணர்வை ஏற்படுத்தி, பக்தி மார்க்கத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். திருமலையில்கூட ராமாநுஜர் வகுத்துத் தந்த வைகாநச ஆகமப்படித்தான் நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
ஒருமுறை கீழ்த்திருப்பதிக்கு ராமாநுஜர் வந்து சேர்ந்தார். நீண்ட நாளாகத் தன் சீடர்களுடன் பல திவ்ய தேசங்களுக்குப் பயணம் செய்து வந்த களைப்புக்கு இளைப்பாறுதலும் மன உற்சாகமும் தரும் இடமாக திருப்பதி அமைந்தது. முன்னதாகவே அவரது அணுக்கத் தொண்டரான அனந்தாழ்வான், உடையவரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு ஏற்கெனவே திருமலைக்கு வந்து நந்தவனம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

திருப்பதிக்கு வந்த ராமாநுஜரை அன்புடன் வரவேற்று, அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவளித்து உபசரித்தார். ``தங்களின் வருகையை நோக்கி திருமலையில் பலரும் காத்திருக்கிறார்கள்'' என்ற கோரிக்கையையும் உடன் வைத்தார்.

``திருவேங்கட மலை நாராயணன் லக்ஷ்மி தேவியுடன் உறையும் மகிமை பொருந்திய மலை.

வெங்கடேசப்பெருமாள் குடிகொண்டிருக்கும் ஏழு மலைகளுமே திவ்யமானவை. அதில் எனது பாதங்கள் படக் கூடாது'' எனக் கூறி திருமலைக்கு வர ராமாநுஜர் மறுத்தார். கீழ்த்திருப்பதியிலேயே தங்கியிருந்தார். திருமலையிலும் திருப்பதியிலும் உள்ள கோயில்களில் எப்படி பூஜைகள் நடக்கவேண்டுமென வழிவகைகளை வகுத்துக்கொடுத்தார்.
1526538592485.png
ஆனால், திருமலையில் தங்கியிருந்த தவசிரேஷ்டர்களுக்கும், சாதுக்களுக்கும், ராமாநுஜரின் இந்த முடிவு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மகா புருஷரான தாங்களே இப்படிக் கூறினால், பின்னாளில் வரும் பக்தர்களும் இதையே சொல்லிக்கொண்டு பெருமாளை தரிசிக்க வராமல் போகும் அபாயம் ஏற்படும் எனக் கூறவே, ராமாநுஜரும் ஒருவாறாக திருமலைக்குப் புறப்பட்டார்.

திருமலை முழுவதும் பச்சைப் பசேலென இருந்த மரங்களும், மலர்களின் நறுமணமும் காற்றில் தவழும் குளிர்த்தன்மையும் ராமாநுஜரின் மனதில் விவரிக்க முடியாத பரவசத்தை ஏற்படுத்தின. சீனிவாசனின் ஆளுமைமிக்க சாம்ராஜ்யம் அல்லவா? அந்தப் பரவச அனுபவத்துடனே தமது சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மிகப்பெரும் கூடை ஒன்றினைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு ஒரு பெரியவர் அவர்கள் எதிரே வந்து நின்றார்.

அவரைப் பார்த்ததும்,ராமாநுஜர் கூடையை இறக்கி வைத்துவிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டார். ராமாநுஜரின் கண்கள் குளமாகி கண்ணீர் வடித்தன.

அவர், `சைலப்பூரணர்' என்றழைக்கப்படும் திருமலைநம்பிதான். அவர் வேறு யாருமல்ல.

ராமாநுஜரின் தாய்மாமன். உடையவருக்குக் குருவாக பல வகையிலும் திகழ்ந்தவர். அவருடைய பொறுப்பில்தான் திருமலையின் பூஜைகள் அத்தனையும் விடப்பட்டிருந்தன.

திருமலைக்குத் தனது சீடர்களுடன் வரும் ராமாநுஜருக்கு, தானே பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து, அமுது படைத்த பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் திருவமுதாகப் படைக்க விரும்பியே தன் தலையில் சுமந்து வந்திருந்தார்.

அப்போது ராமாநுஜர், திருமலைநம்பியிடம், ``சுவாமி இத்தனை சுமையை நீங்கள்தான் சுமந்து வரவேண்டுமா? வேறு சிறியவர்கள் எவருமில்லையா?'' எனக் கேட்டார்.
``ராமாநுஜா! நானும் அப்படித்தான் ஏதேனும் உபாயம் செய்யலாமென யோசித்தேன். இந்த மலை முழுவதும் தேடிப்பார்த்தேன். எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் பெரியவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் நானே கொண்டுவரத் தீர்மானித்தேன்'' எனக் கூறினார்.


``திருவருளும் குருவருளும் மிக்க திருமலைநம்பியே! உம்மைவிட உயர்ந்தவர் வேங்கடமுடையான்தான்'' என்று பெருமைப்படுத்திவிட்டு அவர் அளித்த பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தார். ராமாநுஜரும் அவரது சீடர்களும் உண்டு முடித்து, இளைப்பாறி பயணக் களைப்பைப் போக்கிக்கொண்டனர்.

திருமலைநம்பியின் பணிவான பதிலால் ராமாநுஜர் மிகவும் நெகிழ்ந்துபோனார். திருப்பதியில் ஓராண்டு காலம் தங்கி இருந்தார். திருமலையிலும் திருப்பதியிலும் உள்ள கோயில்களில் எப்படி பூஜைகள் நடக்கவேண்டுமென விதிமுறைகளையும் வகுத்துக்கொடுத்தார். இப்போதும் பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாயிலின் வலதுபுறம் திருமலை நம்பிக்கு என இருக்கும் தனிச்சந்நிதியை தரிசிக்கலாம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#65
71,318 பக்தர்கள் தரிசனம்ஏழுமலையானை புதன்கிழமை 71,318 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 71,318 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 37,288 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். திருமலை, திருப்பதி, நடைபாதை மார்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டதால் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை காலை தர்ம தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன் 27 மணிநேரத்திற்குப் பின் வழங்கப்படுகிறது. நடைபாதை மார்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர்.

விரைவு தரிசனம், தர்ம தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்றால் அவர்கள் 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிலாம். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால், 2 மணிநேரம் தற்போது 4 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#66
மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு திருமலையில் சிறப்பு தரிசனம்

ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்.

திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு தேவஸ்தானம் சிறப்பு தரிசனங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள் (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்), மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி, நாள்தோறும் 1,400 பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

காலை 10 மணிக்கு 700 பேர், மாலை 3 மணிக்கு 700 பேர் என ஏழுமலையான் கோயில் முன் வாசல் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்காக திருமலையில் உள்ள எஸ்.வி. அருங்காட்சியகத்துக்கு எதிரில் தேவஸ்தானம் 7 கவுன்ட்டர்களை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்த கவுன்ட்டர்களுக்குச் சென்று ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் காண்பித்து தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். அதனுடன் 2 மானிய விலை லட்டு டோக்கன்களும், 2 கூடுதல் லட்டு டோக்கன்களும் வழங்கப்படும். இங்கு காலை 7 மணிமுதல் குறிப்பிட்ட எண்ணிக்கை முடியும் வரை டோக்கன்கள் வழங்கப்படும்.

காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி தரிசனத்துக்கான டோக்கன் காலை முதல் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களை கோயில் அருகில் உள்ள காத்திருப்பு அறைக்கு அழைத்துச் செல்ல ஒரு பெரிய வாகனம், 2 சிறிய பேட்டரி வாகனங்களை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் காத்திருப்பு அறைகளில் 3,000 பேர் வசதியாக அமர்வதற்கு வசதி உள்ளது. அவர்களுக்கு தேநீர், காபி, பால், சிற்றுண்டி, அன்னப் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்படும். கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், காலை 10 மணிக்கு வழங்கப்படும் தரிசனத்தை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கைக்குழந்தைகளின் பெற்றோர்: அதேபோல், திருமலைக்கு வரும் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் 'சுபதம்' தரிசன வரிசையில் தினசரி காலை 9 மணிமுதல் காத்திருக்கலாம்.

அவர்களுக்கு மானிய விலை லட்டு டோக்கன் மற்றும் கூடுதல் விலை லட்டு டோக்கன் இரண்டும் வழங்கப்படும். அதற்குப் பின் அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மதியம் 1 மணி வரை கைக்குழந்தைகளின் பெற்றோர் தரிசனத்திற்கு செல்லலாம்.

மாதம் இருமுறை தரிசனம் ரத்து
இதனிடையே, திருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகன் பெற்றோருக்கு தேவஸ்தானம் மாதம் இருமுறை சிறப்பு தரிசனங்களை வழங்கி வந்தது.

ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் என மாதத்துக்கு இரு நாள்களில் மொத்தம் 8 ஆயிரம் பேர் இந்த தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

அந்த இரு நாள்களிலும், 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருமாலை தரிசித்து வந்தனர்.

எனினும், தற்போது கோடை விடுமுறை என்பதால் பொது வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பாத்ல, மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த சிறப்பு தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#67
அர்ச்சகர்களின் ஓய்வு உச்ச வரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்: ரமண தீட்சிதர்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பு நிர்ணயத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

உச்சநீதிமன்றம் கடந்த 1996ஆம் ஆண்டில் வாரிசு அர்ச்சகர் பணி நியமனத்தை ரத்து செய்தது. ஆயினும் அதற்கென இயற்றப்பட்ட சட்டப் பிரிவு 144இன்படி அவர்களின் பணிக்கும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பாவனை மற்றும் மரியாதைக்கு எவ்விதக் குறைவும் இருக்கக் கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
மேலும் அர்ச்சகர்கள் முதுமையில் தங்களைக் காத்துக் கொள்ள ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் அர்ச்சகர்களையும் தேவஸ்தான ஊழியர்கள் போல் நடத்தி வருகின்றனர். அர்ச்சகர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதைகளை அளிப்பதில்லை.
விரைவாக பூஜை கைங்கர்யங்களை செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் ஏழுமலையான் கைங்கர்யங்களிலும் குறைபாடு ஏற்படுகிறது. அர்ச்சகர்களுக்கும் பதிவேடு ஏற்படுத்தி 8 மணிநேரம் பணி வழங்குகின்றனர். இதுகுறித்து நான் வெளியில் தெரிவித்தவுடன் அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 ஆக நிர்ணயித்து உத்திரவு பிறப்பித்துள்ளனர்.

அதனால் உச்சநீதிமன்றம் ஏற்படுத்திய சட்டப் பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை நிர்ணயிக்கக் கூடாது. அதனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறேன் என்றார் அவர்.

ராமாநுஜர் ஏற்படுத்திய விதிமுறைகளின்படியே கைங்கர்யங்கள்: ஜீயர்
ஏழுமலையான் கோயிலில் ராமாநுஜர் ஏற்படுத்திய விதிமுறைகளின்படி கைங்கர்யங்கள் நடத்தப்படுவதாக திருமலை ஜீயர் சுவாமிகள் தெரிவித்தனர்.
திருமலை தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் ஏழுமலையானுக்கு மேற்கொள்ளப்படும் நித்திய கைங்கர்யங்களில் குறைபாடு உள்ளதாக எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு திருமலை பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர் மற்றும் சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜர் ஆகிய இருவரும் திருமலையில் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஏழுமலையான் கோயில் வைணவ மகா குரு ராமாநுஜரால் உருவானது. ஏழுமலையானுக்கு கைங்கர்யங்கள் நிர்வகிக்க அவர் திருமலையில் இரண்டு மடங்களை நிறுவி உள்ளார். இந்த மடங்களில் உள்ளவர்களுக்கு ஏழுமலையானின் கைங்கர்யங்களை குறைவின்றி நிறைவேற்றுவது மட்டுமே தலையாய கடமை. அதற்காக மட்டுமே அவர்கள் உள்ளனர். அதனால் ஏழுமலையானுக்கு தினசரி நடத்தப்படும் கைங்கர்யங்கள், நைவேத்தியங்கள் சமர்ப்பிப்பதில் எவ்விதக் குறையும் வைக்காமல் நிறைவாக நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்கள் கூறினர்.

திருமலை ஜீயர் சுவாமிகள்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,265
Likes
3,173
Location
India
#68
திருமலையில் வெப்ப நிலை அதிகரிப்பு

திருமலையில் கோடை காலத்தை முன்னிட்டு தற்போது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அதனால் பகல் நேரத்தில் வெப்பக் காற்றும் இரவு நேரங்களில் குளிர்காற்றும் வீசுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 33 டிகிரியும் குறைந்தபட்சமாக 23 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
#69
விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

1527074136526.png

கோடை விடுமுறையையொட்டி 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளிக்கின்றன. டைம் ஸ்லாட் கார்டு பெற்ற பக்தர்கள் திருமலையில் உள்ள கடைவீதிகளில் சுற்றித்திரிகிறார்கள்.

பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காததால் ஏராளமான பக்தர்கள் நாராயணகிரி பூங்காவில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள். கடந்த 2001 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் திருமலையில் இதேபோல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது இலவச தரிசனத்துக்கு 72 மணிநேரம் ஆனது. அதேபோல் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசன பக்தர்களுக்கு 58 மணிநேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கிறார்கள்.

திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தனித்தனி கவுண்ட்டர்களில் சென்று ஒரு இடத்தில் ஒன்றாக சேருகின்றனர். இதனால், தரிசன கவுண்ட்டர்களில் நெரிசல் ஏற்படுகிறது. ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் 3 நாட்கள் காத்திருக்க வேண்டி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் உள்ள நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை தற்காலிகமாக மூடியுள்ளது.

பக்தர்களின் வருகை குறைந்தவுடன் விரைவில் அவை மீண்டும் திறக்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 78 ஆயிரத்து 64 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,351
Likes
550
Location
chennai
#70
திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருவதை அடுத்து, இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், நேர ஒதுக்கீட்டின் படி டிக்கெட் வழங்கப்பட்டு அதே நாளில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 17 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை காண்பித்து இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.