திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#71
தேவஸ்தான ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு

கருப்புப் பட்டை அணிந்து வந்த தேவஸ்தான ஊழியர்கள்.

தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக தேவஸ்தான ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

திருமலை ஏழுமலையானின் கைங்கர்யங்களில் குறைபாடுகள், ஆபரணங்கள் மாயம், வைரக்கல் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேவஸ்தான அதிகாரிகள் மீது தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுப்பினார். ஆனால், 'அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. ஏழுமலையானின் கைங்கர்யங்களில் குறைகள் வைக்கப்படவில்லை' என தேவஸ்தானத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும், திருமலை ஜீயர்களும் தெரிவித்தனர்.

அதனால் ரமண தீட்சிதரின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் 3 நாள்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட தேவஸ்தான ஊழியர் சங்கங்கள் ஒருமனதாக முடிவு மேற்கொண்டன.

அதன்படி வியாழக்கிழமை முதல் தேவஸ்தான ஊழியர்கள் தங்கள் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு கருப்புப் பட்டை அணிந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டது தேவஸ்தான வரலாற்றில் இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#72
திருப்பதி: தர்ம தரிசன நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டர்கள் திறப்புதிருமலையில் பக்தர்களின் வருகையையொட்டி தற்காலிகமாக மூடப்பட்ட தர்ம தரிசன நேர ஒதுக்கீடு கவுன்ட்டர்களை தேவஸ்தானம் திறந்துள்ளது.

கோடை விடுமுறையை ஒட்டி திருமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வரத் தொடங்கினர். அதனால் தர்ம தரிசன நேர ஒதுக்கீட்டின்படி தரிசன நேரம் 57 மணிநேரமாக உயர்ந்தது. இதன் காரணமாக, திருமலையில் செயல்பட்டு வந்த தரிசன டோக்கன் வழங்கும் நேர ஒதுக்கீடு கவுண்டர்களை தேவஸ்தானம் கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடியது.


அதன்பிறகு காத்திருப்பு நேரம் 28 மணிநேரமாகக் குறைந்ததை அடுத்து, 5 நாள்களுக்கு பின் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் திருமலையில் மீண்டும் தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டர்களை தேவஸ்தானம் திறந்துள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#73
திருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம், சிறப்பு வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் பல கோடிகள் வருமானம் கிடைக்கிறது. கோயிலுக்குச் சொந்தமான நகைகள், நிலங்கள், வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்துக்கான வட்டி ஆகியவற்றின் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது.

‘பணக்கார கடவுள்’ பாலாஜியைப் பார்த்துக்கொள்ளும் பட்டாச்சார்யர்கள் பலரும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாநில முதல்வர்கள், கவர்னர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர் - நடிகைகள் ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தால், கோயிலில் உள்ள பட்டாச்சார்யர்களுக்கு ஏகக் குஷிதான். இவர்களின் காட்டில் வருடம் முழுவதும் பண மழைதான் பெய்கிறது. இந்த நிலையில்தான், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகமவிதிகள் மீறப்படுகின்றன” என்று அங்கு தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதர் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்ப, “தலைமை அர்ச்சகராக இருந்தபோது ஆகம விதிகளை ரமண தீட்சிதர்தான் மீறினார்” என்று கோயில் நிர்வாகத்தினர் பதில் குற்றச்சாட்டை வீச, விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்துவந்த ரமண தீட்சிதருக்கு, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சமீபத்தில் கட்டாயப் பணி ஓய்வை அளித்தது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரமண தீட்சிதர், ‘‘கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுகின்றன. மடப்பள்ளி (கோயில் சமையல் அறை) புனிதமானது. அது 25 நாள்களாக மூடப்பட்டுள்ளது. வேறு இடத்தில் தயாரிக்கப்படும் பிரசாதத்தை சுவாமிக்கு வழங்குகின்றனர். அது மிகப்பெரிய பாவம்’’ என்று அதிரடி குற்றச்சாட்டுகளைக் கிளப்பினார். அது மட்டுமல்ல, ‘‘ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த வைர நகைகளையும் நவரத்தினங்களையும் காணவில்லை. இங்கிருந்து மாயமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனிவாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. லட்டு தயாரிப்புக்கூடம் தோண்டப்பட்டு, அங்கிருந்து பழங்கால ஆபரணங்கள் எடுக்கப்பட்டன. அவை எங்கே?’’ என அதிர்ச்சி தரும் பல கேள்விகளைக் கேட்டார்.

இவரது குற்றச்சாட்டால் அதிருப்தி யடைந்த கோயில் நிர்வாகத்தினர், ரமண தீட்சிதர் வகித்துவந்த தலைமை அர்ச்சகர் பதவியைத் தன் மகனுக்கு வழங்க வேண்டுமென்று அவர் கோரியதாகவும், அது கிடைக்காததால்தான் தேவஸ்தானம்மீது அவர் அவதூறுகளை வீசுகிறார் என்றும் பதிலடி கொடுத்தனர்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய திருப்பதிக்குச் சென்றோம். அங்கு, ஆகம பிரவரா ஆலோசகர் என்.ஏ.கே.சுந்தரவரதன் பட்டாச்சார்யரைச் சந்தித்து, ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டோம்.

‘‘தேவஸ்தானத்தில் காலம் காலமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் மூலவருக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வருகின்றனர். அவை கொல்லப்பள்ளி குடும்பம், பைடப்பள்ளி குடும்பம், பெத்தண்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் ஆகியவை. கொல்லப்பள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமண தீட்சிதர். இவர், கடந்த 30 வருடங்களாக கோயிலில் பணியாற்றி வருகிறார். 10 வருடங்களுக்கு முன்பு தலைமை அர்ச்சகரானார். அப்போது முதல், கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக அவர்தான் செயல்பட்டு வந்தார்.

70 வயதான ரமண தீட்சிதர், கர்நாடக மாநிலம் முளபாகலு பகுதியைச் சேர்ந்தவர். மூலவர் சந்நிதிக்குச் சேவை செய்பவர்களைத் தவிர மற்றவர்களை அழைத்துவரக்கூடாது. ஆனால் இவரோ, தன் பேரனை அழைத்து வந்தார். ஆகம விதிப்படி அது தவறு. ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்துச்சென்று யாக பூஜை செய்தார். அதுவும் ஆகம விதிகளுக்கு எதிரானது. திருப்பதிக்கு அம்பானி வந்தபோது, அவர் தங்கியிருந்த இடத்துக்கே சென்று பூஜை புனஸ்காரங்களைச் செய்து ஆசீர்வாதம் செய்தார். மேலும், தேவஸ்தானத்துக்குத் தெரியாமல், தேவஸ்தானத்தின் அனுமதி பெறாமல் வெளியூர்களுக்குச் சென்று கல்யாண உற்சவங்களை முன்னின்று நடத்தி, பணம் சம்பாதித்தார். இவற்றையெல்லாம் அவர் தேவஸ்தான அனுமதியுடன்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. அது, மிகப்பெரிய குற்றம். இன்றைக்கு அவரின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும். ஸ்ரீகிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த வைர நகைகள் மற்றும் நவரத்தினங்களைக் காணவில்லை என்பதற்கு தற்போதைய நிர்வாகம் காரணமல்ல. ஆங்கிலேயர் காலத்தில், கோயில் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் மும்பையைச் சேர்ந்த ‘மகந்து மட’த்தினர்தான். அவர்களிடம்தான், கோயில் நகைகள் இருந்தன. அந்த நகைகளைக் கோயில் நிர்வாகத்திடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை’’ என்றார்.

“அந்த நகைகளின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?’’ என்று என்.ஏ.கே.சுந்தரவரதனிடம் கேட்டதற்கு, “யாரும் அந்த நகைகளைப் பார்த்ததில்லை” என்றார். ‘கோயில் மடப்பள்ளியை 25 நாள்கள் மூடிவிட்டதாகவும், அங்கிருந்து புதையல் எடுக்கப்பட்டதாகவும், சுவாமிக்கு நைவேத்தியம் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் ரமண தீட்சிதர் கூறுகிறாரே’ என்ற நம்முடைய கேள்விக்கு, ‘‘சாமிக்கு நைவேத்தியம் செய்வதில் எந்தக் குறையும் இல்லை. அந்தக் கட்டடத்தை இடிக்கவும் இல்லை. சமையல் கூடத்தில் புகையும் அழுக்கும் படிந்திருந்தன. அதனால், சமையல் அறையில் உள்ள மேடைகளைப் புதுப்பித்தோம். அவ்வளவுதான். அங்கு எந்தப் புதையலையும் எடுக்கவில்லை. ரமண தீட்சிதர் சொல்வதுபோல ரூ.500 கோடி மதிப்புள்ள வைரம் இங்கு இல்லவே இல்லை.

அதேபோல, நைவேத்தியம் செய்யவில்லை என்று சொல்வது பெரிய பொய். ரமணாவின் மகனுக்கு தலைமை அர்ச்சகர் பதவியைத் தராமல், அவரின் தம்பி வேணுகோபால் தீட்சிதருக்கு அந்தப் பதவியைக் கொடுத்ததால்தான், நிர்வாகம்மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுகிறார். தற்போது நிர்வாகத்திடம் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் நகைகள் 150 கிலோ இருக்கும். அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். அவற்றை வருடத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்து, முறையாகக் கணக்குப் பராமரிக்கிறோம்.

எந்த ஆகம விதியும் இங்கே மீறப்படுவதில்லை. சுப்ரபாதம் இசைக்கப்படுவது பற்றி அவர் குற்றம் சொல்கிறார். இரவு 12 மணி முடிந்ததும் அடுத்த நாள் கணக்குதான். அதனால், 12 மணிக்கோ, 2 மணிக்கோ சுப்ரபாதம் ஒலிப்பதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத்தான் தற்போதும் நியமித்துள்ளோம். கொல்லப்பள்ளி குடும்பத்திலிருந்து வேணுகோபால் (ரமண தீட்சிதரின் தம்பி), பெத்தண்டி குடும்பத்திலிருந்து சீனிவாசன், பைடப்பள்ளி குடும்பத்திலிருந்து கிருஷ்ண சேக்ஷாசலம், திருப்பதி அம்மா குடும்பத்திலிருந்து கோவிந்தராஜ் ஆகியோரைத்தான் நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பற்றி ஊடகங்களுக்கு தவறான செய்தியைக் கொடுத்ததற்காக விளக்கம் கேட்டு ரமண தீட்சிதருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரது வீட்டுச் சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ரமண தீட்சிதருக்கு கட்டாய ஓய்வும் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அர்ச்சகர் பணி ஓய்வுக்கான காலத்தை 65 வயதாக நிர்ணயித்து, அதற்கான உத்தரவையும் கோயில் நிர்வாகம் பிறப்பித்துள்ளது” என்றார்.

இந்த சர்ச்சை பெரிதானதால், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் ஆகியோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைத்து விசாரணை நடத்தினார். திருமலையில் பொக்கிஷதாரர் (கணக்கு) குமாஸ்தா முந்தைய நாள் வருவாய் விவரங்களை, ஸ்ரீநிவாசமூர்த்திக்கு விவரமாகக் கூறி பக்தியோடு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விடைபெறுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வு. திருமலையில் என்ன நடக்கிறதென்பது வேங்கடேசப் பெருமாளுக்கே வெளிச்சம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,791
Location
Germany
#74
பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜர் உலா

மாட வீதியில் உலா வந்த கோவிந்தராஜர்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாள் காலையில் மோகினி அவதாரத்தில் பெருமாள் மாட வீதியில் வலம் வந்தார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிர்வகிக்கும் இந்தக் கோயிலில் கடந்த திங்கள்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன் 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கோவிந்தராஜர் மோகினி வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மாடவீதியில் வலம் வந்தார். மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க மதியம் பல்வேறு அபிஷேகப் பொருள்களால் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

அதன்பின் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் இரவு 8 மணிக்கு கருட சேவையும் நடைபெற்றது. கருடசேவையின்போது திருமலையிலிருந்து ஏழுமலையானுக்கு அணிவிக்கும் 1008 சகஸ்ரநாம மாலை, லட்சுமி ஹாரம் ஆகியவை கொண்டு வரப்பட்டு கோவிந்தராஜருக்கு அணிவிக்கப்பட்டன.

கருடசேவையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். இந்நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாகன சேவையின் முன்புறம் வேத விற்பன்னர்கள் நாலாயிர பிரபந்த பாராயணம் செய்தனர். சென்றனர். வாகன சேவையின் பின்னால் பக்தர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#75
பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள்: சூரிய, சந்திரப் பிரபை வாகனங்களில் கோவிந்தராஜர் வீதியுலா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளன்று பெருமாள் சூரிய, சந்திரப் பிரபை வாகனங்களில் வீற்றிருந்தபடி மாட வீதியில் வலம் வந்தார்.

திருப்பதியில் தேவஸ்தானம் நிர்வகிக்கும் இக்கோயிலில் கடந்த திங்கள்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் கோவிந்தராஜர் 7 குதிரைகள் பூட்டிய சூரியப் பிரபை வாகனத்தில் செந்திற மாலை அணிந்து மாடவீதியில் வலம் வந்தார்.

இவ்வாறு பவனி வந்த களைப்பைப் போக்க மதியம் பால், தயிர், தேன், பழரசங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

அதன்பின் மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் இரவு 8 மணிக்கு சந்திரப் பிரபை வாகனச் சேவையும் நடைபெற்றது. குளிர்மிக்க சந்திரனின் கதிர்கள் ஜொலிக்கும் சந்திரப் பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்தபடி கோவிந்தராஜர் மாடவீதியில் வலம் வந்தார்.

வாகனச் சேவையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். இந்நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாகனச் சேவையின் முன்புறம் நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணமும், பின்புறம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#76
பிரம்மோற்சவ விழா 8-வதுநாள்: தேரில் கோவிந்தராஜசாமி பவனி
1527568727389.png


திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9.30 மணிவரை குதிரை வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி உதயபிரகாஷ்ரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ்ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,791
Location
Germany
#77
ரூ.1.75 கோடி மதிப்புள்ள 'சூரிய கட்டாரி' நன்கொடை

1527624295185.png

திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, சூரிய கட்டாரியை தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கினார்.தமிழகத்தின், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த தங்கதுரை, நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை சுப்ரபாத சேவையில், ஏழுமலையானை தரிசிக்க சென்றார்.
அப்போது அவர், 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 16 கிலோ எடைஉள்ள, தங்கத்தால் செய்யப்பட்ட சூரிய கட்டாரியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்க எடுத்துச் சென்றார்.கோவிலுக்குள் சென்றதும், அதை அவர், தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார். அதை பெற்ற அதிகாரிகள், விசேஷ நாட்களில் ஏழுமலையானுக்கு அணிவிப்பதாக தெரிவித்தனர்.

கடந்த, 1989ல் கர்நாடக முதல்வராக, வீரேந்திர பாட்டீல் பதவி வகித்தபோது, அம்மாநில அரசு சார்பில், இதே போல் ஒரு சூரிய கட்டாரி, ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.குத்து வாள் என்பது தான், சூரிய கட்டாரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#78
தீர்த்தவாரியுடன் கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் நடைபெற்ற திருமஞ்சனம்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதியில் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இக்கோயிலில் கடந்த 21ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாளான செவ்வாய்கிழமை காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அதற்காக உற்சவ மூர்த்திகள் சக்கரத்தாழ்வாருடன் காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு கபில தீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் குளத்தை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு தயிர், தேன், பழரசங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

அதன்பின் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின் மாலை உற்சவ மூர்த்திகள் அங்கிருந்து ஊர்வலமாக கோவிந்தராஜர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையொட்டி கொடிமரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருடக் கொடி இறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#79
திருப்பதி: நாளை பக்தர்கள் குறைகேட்பு

தொலைபேசி மூலம் பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து தெரிவிக்க, மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில், தேவஸ்தானம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் காலை 8.30 மணிமுதல், 9.30 மணிவரை 'டயல் யுவர் இ.ஓ' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கை ரூ. 3.71 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.71 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்த பின்னர், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ. 3.71 கோடி வசூலானது.

ரூ. 4.66 லட்சம் நன்கொடை
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 2.16 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 50 ஆயிரம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என ரூ. 4.66 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

80,716 பக்தர்கள் தரிசனம்
ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 80,716 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 42,199 பர் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை நேர ஒதுக்கீட்டு முறை மூலம் தரிசன நேரம் 8 மணி நேரமாக இருந்தது.
ஆனால் தர்ம தரிசனத்துக்காக வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்கள் 24 மணி நேரத்துக்குப் பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் 32 காத்திருப்பு அறைகளைக் கடந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு தரிசன வரிசையில் காத்திருக்கின்றனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) பக்தர்கள் திவ்ய தரிசன டோக்கன் பெற்று, ஏழுமலையானைத் தரிசித்தனர்.
விரைவு தரிசனம், தர்ம தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள், டோக்கனில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்றால், அவர்கள் 4 முதல் 5 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,859
Likes
20,791
Location
Germany
#80
திருமலையில் மே மாதத்தில் மட்டும் 86 கோடி உண்டியல் வசூல்!


திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் ரூ.86 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும், பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதன் காரணமாக உண்டியல் வசூலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலர் அணில் குமார் சிங்கால் அளித்த பேட்டியில்,
கடந்த மே மாதத்தில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் 86 கோடியை 46 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 49 ஆயிரத்து 60 டிக்கெட்கள் இன்று முதல் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த டிக்கெட்களை பெற பக்தர்கள் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.