திருமணத்தின் அவசியம் - Necessity of Marraige

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பமாகும்.


சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் ...... அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரியவிக்கின்றன.


மனித வாழ்க்கையில் திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக திருமண தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.


திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.
 

Attachments

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#2
கல்யாணத்திற்கு பின் ஆண்களுக்கு மனச்சோர்வு குறைவதற்கு காரணம்:


எதிரி யார்ன்னு தெரியாம இருந்த மனச்சோர்வு, தெரிந்த பின் குறைவது இயற்கை தானே - யார்ட்ட அடி வாங்கப் போறோம்ன்னு சுத்துறத விட, இவங்கட்ட தான் வாங்கப் போறோம்ன்னு தெரிஞ்சா மனசு லேசாயிடும்ல :)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
கல்யாணத்திற்கு பின் ஆண்களுக்கு மனச்சோர்வு குறைவதற்கு காரணம்:


எதிரி யார்ன்னு தெரியாம இருந்த மனச்சோர்வு, தெரிந்த பின் குறைவது இயற்கை தானே - யார்ட்ட அடி வாங்கப் போறோம்ன்னு சுத்துறத விட, இவங்கட்ட தான் வாங்கப் போறோம்ன்னு தெரிஞ்சா மனசு லேசாயிடும்ல :)
crt bro yedhiriya yeppavum namma kan paarvaikkul vachukanum.......appodhan udanukkudan kankaanichu nadavadikkai yedukka mudiyum.......:cool:
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#4
crt bro yedhiriya yeppavum namma kan paarvaikkul vachukanum.......appodhan udanukkudan kankaanichu nadavadikkai yedukka mudiyum.......:cool:
ஆட்டோவுல ஏறி சந்து சந்தா போயி அடி வாங்கற செலவு மிச்சம் :)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
ஆட்டோவுல ஏறி சந்து சந்தா போயி அடி வாங்கற செலவு மிச்சம் :)
aaha .....always adi vanngum sangamaa neenga.....;)

Appa vidunga.....sandhula vaanginaa yenna......sandhiya kitta vaangina yenna.....not much diff.......;)
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#8
சூப்பர் ஜெயா... ஆக இப்ப எல்லாம் உங்க ஆராய்ச்சி இந்த ரீதியில் தான் போயிட்டு இருக்குன்னு சொல்லுங்க ஜெயா :p.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.