திருமணத்தோல்விக்கு நீங்கள் காரணம் அல்ல!!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தோல்விக்கு நீங்கள் காரணம் அல்ல


`வாழ்க்கை என்பதுதான் மிகக் கடினமான தேர்வு. இதில் பலரும் தோல்வியே அடையக் காரணம், அடுத்தவரை காப்பி அடிப்பதாலேயே... பாவம்... ஒவ்வொருவருடைய கேள்வித்தாளும் வேறு வேறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்!’

‘கணவர் நல்லவர்தான்... மனைவி கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தா, பிரிவுங்கிறதே வந்திருக்காது...’ என பெண்ணையும்... `மனைவி தங்கமானவங்க... கணவருக்குத்தான் அனுசரிச்சுப் போகத் தெரியலை...’ என ஆணையும்... `ரெண்டு பேர் தரப்புலயும் கோளாறுகள் இருந்தது. ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திருக்கணும்...’ என இருவரையும் குறை சொல்லித்தான் நமக்குப் பழக்கம்.

கணவன், மனைவி இருவரையும் தாண்டி, அவர்களது பிரிவுக்குப் பின் சமூக, வரலாற்று, உயிரியல் மாற்றங்களே முக்கிய காரணங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நம்முடைய குடும்ப அமைப்பே கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய மாறுதல்களை சந்தித்திருக்கிறது. மனிதர்களின் மனப்போக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமூக அமைப்பே மாறியிருக்கிறது. உணர்வுரீதியாக ஒட்டுதல் இல்லாமல் வாழும் தம்பதியர், உயிர்ப்பில்லாத உறவில் இணைந்திருக்கிற தம்பதியர் என ஒரு பெருங்கூட்டமே நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்குக் காரணமே விஞ்ஞானிகள் சொல்கிற சமீபத்திய சமூக, வரலாற்று, உயிரியல் மாற்றங்கள்தான்.

சில 100 வருடங்களுக்கு முன், வாழ்ந்த தம்பதியரை கவனித்தால், உயிருள்ள வரை ஒன்றாக இணைந்திருந்த கதைகளை எல்லாம் கேள்விப்படலாம். ஆனால், அவர்களது வாழ்நாளே அதிகபட்சம் 30 வயது வரைதான். கடந்த நூற்றாண்டில், தொற்றுநோய், பஞ்சம், உயிர்க்கொல்லி நோய்கள் போன்றவற்றால் இளவயது மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தன.

பெண்களைப் பொறுத்த வரை பிரசவத்தின் போதான உயிரிழப்பு மிக சகஜமாக இருந்திருக்கிறது. கணவன்-மனைவி இருவருமே 30 வயதுகளில் இறந்து போயினர். அதாவது, இருவரும் காதலுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோதே இறந்தார்கள். `உயிருள்ள வரை உன்னோடு’ என்கிற வாசகம் அப்போது பிரபலமாகவும் சாத்தியமாகவும் இருந்தது. வாழ்வதே போராட்டமாக இருந்த அந்தக் காலத்தில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு, ஒருவர் மீது ஒருவருக்கு திருப்தியின்மை போன்ற புகார்களுக்கு எல்லாம் இடமிருக்கவில்லை.

வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமில்லாதது போல உணர்ந்ததோ, தன் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று மாறி மாறிப் புலம்பிக் கொண்டதோ இல்லை. அந்தக் காலத்து தம்பதியரை மரணம் மட்டுமே பிரித்தது. மணமுறிவு பிரிக்கவில்லை.

இன்று மனித வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்தல் என்பது இலகுவாகி இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். தத்தம் கால்களில் நிற்கிறார்கள். இருவரும் சமம் என உணர்கிறார்கள். மருத்துவ முன்னேற்றங்கள், உணவு போன்ற பல காரணங்களால் மனிதர்களின் வாழ்நாள் நீடித்திருக்கிறது. நீண்ட காலம் வாழ்வதென்பது சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் மனரீதியான திருப்தி என்பது ஒரு முக்கியமான விஷயமாக தலைதூக்கியிருக்கிறது. திருமண உறவில் திருப்தி என்பது மிக மிக முக்கியம் என நினைக்கிறார்கள்.

கணவனின் தவறுகளை அது எப்படிப்பட்ட தவறானாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்த காலமெல்லாம் மாறிவிட்டது. ‘நாளைக்கே இறந்து விடுவோமோ... நடுத்தெருவுக்கு வந்து விடுவோமோ’ என்கிற பயங்கள் இன்று இல்லை. அதிலும் வேலைக்குச் செல்கிற மனைவிகளின் மனநிலை இன்னும் பலமடங்கு முன்னேறியிருக்கிறது. எதற்காகவும் கணவரை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை.

எல்லாவற்றையும் கடந்து திருமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக மட்டுமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதையும் கணவனின் நிழலில் வாழ்வதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட பெண்களின் மனநிலை தலைகீழாக மாறியிருக்கிறது.

கணவனையும் மனைவியையும் பல்லாண்டு காலம் இணைந்து வாழச் செய்த, ஒட்ட வைத்த அந்தப் பசை பொருளாதார சார்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கு இன்று தேவையே இல்லாமல் போய் விட்டது. கணவனை விடவும் புத்திசாலியான, அதிகம் சம்பாதிக்கிற பெண்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். சந்தோஷம் தராத மண வாழ்க்கையை விவாகரத்தின் மூலம் முடித்துக் கொள்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
`யார் கைகளில் தங்கம் இருக்கிறதோ, அவரே விதிகளை உருவாக்குபவராக இருக்கிறார்’ என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அந்தக் காலத்தில் அது ஆண்களின் கைகளில் மட்டுமே இருந்தது. இன்று நிலைமையே வேறு.

பெரும்பாலான விவாகரத்துகளுக்கு இன்னொரு முக்கிய காரணம், பணத்தின் மீதும், உயிரற்ற உடைமைகளின் மீதும் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மோகம் என்கிறது ஓர் ஆய்வுத் தகவல். முடிந்த வரை பணம் சம்பாதிப்பதும், அதே வேகத்தில் செலவழிப்பதும்தான் இன்றைய வாழ்நாள் லட்சியமாக இருக்கிறது. எதையாவது வாங்க நினைத்து, அதற்காக பணம் ஈட்ட அதன் பின்னால் விரட்டிக் கொண்டே ஓடுவது அதிகரித்திருக்கிறது. லேட்டஸ்ட் மாடல் கார், சொகுசான அபார்ட்மென்ட் என சமூக அந்தஸ்து குறித்த கவலை கணவன்-மனைவி இருவருக்குமே மிக அதிகமாக இருக்கிறது.

சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்வதையே இருவரும் விரும்புகிறார்கள். அந்தத் தேடலும் ஆசையும் இருவருக்கிடையிலான நெருக்கத்தைக் குறைக்கிறது. இருவரும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தாலும், `நான் செலவழிப்பது உபயோகமானது... நீ செலவழிப்பது வீணானது’ என்கிற குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசிக் கொள்கிறார்கள். நம் கையில் உள்ள பணத்தை செலவழிக்காமல் விட்டால், நம் துணை செலவழித்துவிட்டு, நம்மை ஏமாற்றி விடுவாரோ என்கிற எண்ணத்தில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்கிறார்கள். சேமிப்பைக் கரைக்கிறார்கள்.

கடன் மேல் கடன் வாங்குகிறார்கள். பணத்துக்கும் உடைமைகளுக்கும் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பவர்களே அதிகஅளவிலான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது லேட்டஸ்ட் மருத்துவத் தகவல். இந்த மன அழுத்தம் அவர்களுக்கு இடையிலான மனிதத்தை, பாசத்தை, காதலைக் குறைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை மனிதகுலம் நீண்ட நாள் திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கத் தேவையான அடிப்படைத் தகுதியை இழந்து விட்டதோ, அந்தப் புரிதல் இல்லாமல் போய்விட்டதோ என நினைக்கச் செய்கிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும், வாழ்நாள் நீட்டிப்பையும் பார்க்கும் ேபாது, 70 வயதுக்கும் மேல்கூட தம்பதியர் திருமண உறவில் இணைந்திருக்கலாம் இன்று. அது சாத்தியமாகாமல் போனது ஏன்? என்ன செய்வது?

நீண்ட காலம் திருமண உறவில் இணைந்திருக்கிற திறமை இங்கே யாருக்கும் இல்லை. அப்படியொரு உறவை அமைத்துக் கொள்ளவோ, அதற்கான ஒரு வடிவத்தை உருவாக்கவோ யாரும் தயாராகவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தலைமுறை கணவன்-மனைவிக்கு திருமண பந்தத்தை நீண்டகாலத்துக்குத் ெதாடரச் செய்வதும், அதில் சந்தோஷத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் புரியாத புதிராக மட்டுமின்றி, மிகப் பெரிய சவாலாகவும் முன் நிற்கிறது என்பதே உண்மை.

(வாழ்வோம்!)

 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
Re: திருமணத்தோல்விக்கு நீங்கள் காரணம் அல்&#299

முற்றிலும் உண்மை .
 

pet

Friends's of Penmai
Joined
Mar 28, 2012
Messages
303
Likes
360
Location
cochin
#4
Re: திருமணத்தோல்விக்கு நீங்கள் காரணம் அல்&#299

Factu factu :)
 

sharamsn

Commander's of Penmai
Joined
Aug 4, 2015
Messages
1,344
Likes
2,124
Location
puducherry
#5
Re: திருமணத்தோல்விக்கு நீங்கள் காரணம் அல்&#299

factu.......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.