திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .
பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்
எத்தனை சுமைகள்
எத்தனை எதிர் பார்ப்புகள் ?
எத்தனை தியாகங்கள்
எத்தனை ஏமாற்றங்கள்
நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..
குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..
உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..
இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..
இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..
நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..
சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!
உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது
உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..
ஆனால் அடுத்த கனமே
நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்
நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..
நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..என்று நினைத்து கொள்கிறேன் ..
அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..
அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது..
தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..
உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்
ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றிம்மா .
என்றும் அன்புடன்...!!
பெண் அன்பில் ஒரு தாய்
பெண் அழகில் ஒரு தேவதை
பெண் அறிவில் ஒரு மந்திரி
பெண் அதரவுயில் ஒரு உறவு
பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு
பெண் வெற்றிக்கு ஒரு மாலை
பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்
பெண் நட்பில் ஒரு நேர்மை
பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#2
Re: திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடித&#2

Wooow soooperr romba aumayana kaditham
Ovviru vaarthayum evlo unardhu azhaga wrte pannirukanga..:thumbsup :yo:
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Re: திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடித&am

Wooow soooperr romba aumayana kaditham
Ovviru vaarthayum evlo unardhu azhaga wrte pannirukanga..:thumbsup :yo:
yes dear, idhu ella pengalukkume porundhum
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.