திருமணம் சுமையல்ல, சுகமே!

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#1
penmai1.jpg
திருமணம் சுமையல்ல, சுகமே!

நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது.

திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை.

திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள்.

அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது

திருமணத்தின் அவசியம்

மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Who-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.

அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…

பறந்துபோகும் மனச்சோர்வு

இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது.

அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது.

அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள்.

அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது.

டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,629
Location
karur
#3
hai uma its true da. gents mariageku appuram avanga santhosamathan irukunga. but ladies mentala disturb agaranga.
 

rameshshan

Commander's of Penmai
Joined
May 7, 2012
Messages
1,392
Likes
7,248
Location
Bangalore
#10
True statistics,

Men always fear of marriage due to responsibilities, but when they got married life looks beautiful coz someone came for sharing.

Womenku apdiye opposite..their time spend in their birth house cannot be compared with pugundha veedu coz of new relations, adjusting to values etc..ipdi lots of uncompatability features...n obviously it takes time for them to acclimatize there. Ellam set agradhukula baby vandhachu.....so the argument continues...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.