திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது தி

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,583
Likes
22,623
Location
Germany
#1
திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்
திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது.

திருமலையில் திருமணம் செய்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

அதனால், தேவஸ்தானத்தின் சார்பில் திருமலையில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது.

இங்கு, திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட சுப காரியங்கள் நடந்து வருகின்றன. இத்துடன், திருமலையில் உள்ள அனைத்து மடங்களிலும் திருமணங்கள் நடந்து வருகின்றன. திருமலையில், 500 முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான செலவில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. புரோகித சங்கத்தில் மட்டும், ஆண்டுதோறும், 5,000 திருமணங்கள் நடக்கின்றன.

ஆனால், இது குறித்து தகவல் அறியாத பக்தர்கள், திருமலையில் திருமணம் செய்ய இடைத்தரகர்களை நாடுகின்றனர். திருமணத்திற்கு தேவையான பொருட்கள், திருமண வீட்டார் தங்க வாடகை அறைகள், உணவு, தாம்பூலம், தரிசனம், என லட்சக்கணக்கில் திருமண வீட்டாரிடம்,

இடைத்தரகர்கள் வசூலித்து விடுகின்றனர். இது குறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:திருமலையில், திருமணம் செய்ய புதிய திட்டம் துவங்கப்பட உள்ளது. இனி, திருமலையில் திருமணம் செய்ய விரும்புபவர்கள், இணையதளம் மூலம், வாடகை அறைகள், உணவு, திருமண பதிவு, லட்டு பிரசாதம் வாங்குவது உள்ளிட்ட அனைத்தையும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்யலாம்.

மேலும், திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும், தேவஸ்தானமே வழங்க ஆலோசனை நடந்து வருகிறது. அதனால், இனி பக்தர்கள் எளிதாக, வசதியாக, தங்கள் வீட்டு திருமணங்களை, இடைத்தரகர்களை நாடாமல் நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.என்னென்ன தேவை?

திருமலையில் திருமணம் செய்ய விரும்புபவர்கள், மணமகள், மணமகனின் பிறப்பு சான்றிதழ், இரண்டு ஆதார் அட்டை நகல்,

இரண்டு ரேஷன் கார்டு நகல்,

முகூர்த்த பத்திரிகையை இணைத்து, புரோகித சங்க அலுவலகத்தில் அளித்தால்,

அதை அவர்கள் பதிவு செய்து, திருமணம் செய்து கொள்ள அனுமதி
வழங்குவர். இதற்கு கட்டணமாக தேவஸ்தானம், 500 ரூபாய் வசூலிக்கிறது.

திருமணம் முடிந்தவுடன், திருமண பதிவு சான்றிதழையும், புரோகித சங்கத்தில் பெறலாம்.

அந்த சான்றிதழை காட்டினால், மணமக்கள், அவர்கள் பெற்றோர் என, ஆறு பேர் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,583
Likes
22,623
Location
Germany
#2
Re: திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது த&#3

திருமலையில் திருமணம் இலவசம்:தரிசனத்துக்கும் சிறப்பு ஏற்பாடு

'திருமலையில், திருமணத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம்' என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: திருமலையில் உள்ள புரோகிதர் சங்கத்தில், ஆண்டு முழுவதும், திருமணங்கள் நடந்து வருகின்றன. முகூர்த்த நாட்களில், 250க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.

திருமணத்திற்கு, திருமலையில் பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள புரோகிதர் சங்கத்தில், புரோகிதர்களுக்கு, 500 ரூபாய்; மேள வாத்தியத்திற்கு, 300 ரூபாய்; வீடியோ எடுக்க மின் கட்டணம், 60 ரூபாய் என, மொத்தம், 860 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது; தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி, இலவசமாக திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் முடிந்த அரை மணி நேரத்தில், திருமண பதிவு சான்றிதழ் கிடைக்கும். திருமலையில் திருமணம் முடித்த தம்பதியர், சுபதம் வழியாக தரிசனத்திற்கு அனுப்பப்படுவர். தற்போது, 300 ரூபாய் விரைவு தரிசன வழியில், பெற்றோருடன் சென்று இலவசமாக தரிசிக்கலாம். புதுமண தம்பதியினருக்கு, தேவஸ்தானம் சார்பில் மஞ்சள், குங்குமம், கங்கணங்கள், 10 சிறிய லட்டு பிரசாதமும், இலவசமாக வழங்கபடும். திருமணத்திற்கு, இணையதள முன்பதிவு வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,583
Likes
22,623
Location
Germany
#3
Re: திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது த&#3

திருமலையில் இலவச திருமணம்இணையதளத்தில் முன்பதிவ

திருமலையில், திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், திருமலைக்கு நேரில் வந்து, தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மே, 9 முதல், இணையதளத்தில் திருமண முன்பதிவு செய்யும் வசதியை, தேவஸ்தானம் அறிமுகம் செய்கிறது. திருமணத்திற்கான, 860 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ஏப்., 25 முதல், இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. புதுமண தம்பதியருக்கு, சிறப்பு தரிசனம் உள்ளிட்ட வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.