தூத்துக்குடினா என்ன நினைத்தீர்கள்...??

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,943
Location
CVP
#1
தூத்துக்குடினா என்ன நினைத்தீர்கள்...??
உலகத்திற்கு முதல் உயிரையும்
பண்பாட்டை வழங்கிய ஊரு இது!

அடங்க மறுத்த ஊரு இது!
அன்னியனை அடித்த விரட்டிய ஊரு இது!
வீரம் விளைஞ்ச ஊரு இது!
வெள்ளையனை விரட்டி அடிச்ச ஊரு இது!
அன்பால் உருவான ஊரு இது!
அண்ணன் தங்கை பாசத்தில் சிவந்த ஊரு இது!
பாசத்தை பங்கு வைச்ச ஊரு இது!
பகைவனையும் பாசத்துடன் பார்க்கும் ஊரு இது!
ஆட்டுகறிக்கு அடிவைத்துக்கொள்வோம் கோழிகறிக்கு கூடிக்கொள்வோம்! ஏனென்றால்?
கொண்டன் கொடுத்தான் பரம்பரை இது!

எமனே எருமைமீது வந்தாலும்
எதிர்த்து நிற்கும் ஊரு இது!

நம்மவூரு மல்லிகை பூ கமகமக்கும்!
தாய்மாமன் சீரு தகதகக்கும்!
அவன்விடும் வானவோடிக்கைக்கு உலகமே கிடுகிடுக்கும்!

மும்பைல மெட்ராஸ்காரன்னா பயப்புடுவான்,
அந்த மெட்ராஸ்லயே தூத்துக்குடி காரனா தெறிச்சு ஓடுவான்.

நானும் தூத்துக்குடி காரன் என்பதிலஏராளமாக பெருமை படுகிறேன.
தாகத்துக்கு "தாமிரபரணி"
கருப்பட்டிக்கு "உடன்குடி"
பக்கடாவுக்கு "சாத்தான்குளம்"
காராசேவுக்கு "அம்மன்புரம்"
சில்லுக்கருப்பட்டிக்கு "திருச்செந்தூர்"
மக்ரூன்க்கு "தூத்துக்குடி"
கடலை மிட்டாய்க்கு "கோவில்பட்டி"
புரோட்டாவுக்கு "குரும்பூர்"
மலைக்கு "வல்லநாடு"
சிவனுக்கு "நவகயிலாயம்"
பெருமாளுக்கு "நவத்திருப்பதி"
அம்மனுக்கு "குலசை"
முஸ்லீம்க்கு "காயல்பட்ணம்"
கிறிஸ்த்துவத்துக்கு "மணப்பாடு"
படிப்புக்கு "நாசரேத்"
போர் அடிச்சா "தேரிக்காடு"
தரைப்பாலத்துக்கு "ஏரல்"
ஆட்டுக்கறிக்கு "ஆழ்வார் திருநகரி"
தமிழ் நாட்டின் நுழைவுவாயில் "தூத்துக்குடி"
புரட்சி புரிந்த பாரதி பிறந்த "எட்டையாபுரம்"
கப்பல் ஓட்டிய தமிழன் பிறந்த "விளாத்திகுளம்"
கட்டபொம்மனின் "பாஞ்சாலங்குறிச்சி"
ஆங்கிலேயரை சுட்டு கொன்ற "வாஞ்சி மணியாச்சி"
சிந்து பாடிய அண்ணாமலையார் பிறந்த "கழுகு மலை"
பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரர் பிறந்த "ஸ்ரீவைகுண்டம்"
இன்னும் நிறைய சொல்லலாம்....
கடைசியா ஒன்னு விலையுயர்ந்த முத்து விளையிர "தூத்துக்குடி"
"பழகிப் பார் பாசம் தெரியும்
பகைத்து பார் வீரம் தெரியும்"

மூன்று மதம், பல ஜாதி இப்படி எத்தனை பிரிவு இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம்ல
இது தாம்லே எங்க தூத்துக்குடி சீமை..!
மற்ற ஊர் காரர்கள் நம்ம ஊரின் பெருமையை தெரிந்து கொள்ளட்டும்.......
 

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
166
Likes
318
Location
Melbourne
#2
உலகத்திற்கு முதல் உயிரையும்
பண்பாட்டை வழங்கிய ஊரு இது!

இதை கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா எனக்கு என்னன்னு புரியல.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,638
Location
Madras @ சென்னை
#3
Super friend.

:thumbsup​
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,943
Location
CVP

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,943
Location
CVP
#7
அருமை பொன்ஸ்.
இது எல்லா ஊருக்கும் .......மாற்றி போடுறாங்க ஸ்ரீ .
நல்லா இருக்கேன்னு பகிர்ந்தேன் .நன்றி.
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,943
Location
CVP
#8
super pons...:thumbsup
நன்றி கா .....
பாசத்தில் கொஞ்சம் நாங்க spl தான் கா.
 

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,036
Likes
29,943
Location
CVP
#9
உலகத்திற்கு முதல் உயிரையும்
பண்பாட்டை வழங்கிய ஊரு இது!

இதை கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா எனக்கு என்னன்னு புரியல.
கடல் பாசி தானே முதலில் தோன்றியே உயிரினம் ......கடல் இருப்பதால் சொல்லி இருக்கலாம்.
பண்பாடு ......நகரத்து வாழ்க்கை போல இருக்காது ....பக்கத்து வீட்டை உறவு சொல்லி அழைப்போம் .........அத்தை ,மாமா .......
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.