தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
993
Location
Switzerland
#1
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மவுனம் கலைத்தது மத்திய அரசு


ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை கோரியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தொடர்புடையவை
3 மாநிலங்கள் நிராகரித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்த தமிழகம்: சுற்றுச்சூழல் அமைப்பு குற்றச்சாட்டு

இதுதொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
மக்கள் அமைதி காக்க வேண்டும். அந்த பகுதியில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், தூத்துக்குடியில் நிலைமை மோசமடைந்தது தொடர்பாகவும் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை கோரியுள்ளோம்’’ எனக் கூறியுள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.