தெய்வம் என்ன செய்கிறது?

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,764
Likes
2,622
Location
Bangalore
#1
FB_IMG_1526725446753.jpg

தெய்வம் என்ன செய்கிறது?

நமக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்கின்ற செயல்கள் அனைத்தும் தெய்வத்தின் செயல்கள் அல்ல என்றே வைத்துக் கொள்வோம்.

இரவில் தாயின் அருகே படுத்து உறங்கும் குழந்தை, திடீரென கண் விழிக்கிறது. அப்போது சுற்றும் முற்றும் சூழ்ந்திருக்கிற இருளைக் கண்டு அது அச்சம் அடைகிறது. அச்சம் தோன்றியதும் உடனே அதற்குத் தாயின் நினைவு வருகிறது. அந்தத் தாய் எங்கே இருக்கிறாள் என்று தன் கைகளால் தடவிப் பார்க்கிறது. அவள் தன் அருகிலேயே படுத்திருக்கிறாள் என்பதைக் கண்டதும் அது அச்சம் நீங்கி ஆறுதல் அடைகிறது. அப்போது அந்தத் தாய் என்ன செய்துவிட்டாள்? அவள் ஒன்றுமே செய்யவில்லை. அந்தக் குழந்தை கண் விழித்ததோ அல்லது கைகளால் அது தன்னைத் தடவிப் பார்த்ததோ எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவள் தன்னையும் தன் குழந்தையையும் மறந்தவளாய் உறங்கிக்கொண்டுதான் இருந்தாள் என்றாலும் #அவள்தன் அருகில் #இருக்கிறாள் என்ற #உணர்வுஒன்றே, #குழந்தையின் #அச்சத்தைபபோக்கி அதற்கு #ஆறுதலை அளித்து விட்டது.

‘#தெய்வம் நமக்கு எதுவுமே #செய்ய வேண்டாம்; #தெய்வம்நமக்குத் #துணையாகஇருக்கிறது’ என்ற #உணர்வு ஒன்றே நம்முடைய #அச்சங்களைப் போக்கும் #ஆறுதலை #நமக்கு #அளிக்கும்!

#ஸ்ரீராமஜயம்
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,579
Likes
11,644
Location
Chennai
#2
உண்மை தானே!!!!
மல்லிகைப்பூ கண்ணு முழிச்சி பாக்குற பார்க்கும் சிறுகுழந்தை விழிகள் போல அவ்ளோ அழகா இருக்கு படத்தில்:):)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.