தேங்காய் பால், மஞ்சள், இஞ்சி பானம்

#1
இரவு உறங்குவதற்கு முன் தேங்காய் பாலில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

மஞ்சள் மற்றும் இஞ்சி, இவை இரண்டுமே சிறந்த மூலிகை உணவு பொருட்கள். இந்த இரண்டையும் நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வந்தால் எந்தவித நோய் பாதிப்புகளும் உண்டாகாது என்பது அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

தேங்காய் பாலுடன் இஞ்சி மற்றும் மஞ்சளை சேர்த்து இரவு உறங்கும் முன்பு குடித்து வந்தால் நமது உடலுக்கு பல அற்புத ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இனி, இந்த பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் இதை தினமும் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கோல்டன் மில்க்!
ஹால்டி கா தூத் என இந்தியில் கூறப்படுவது தான் இந்த கோல்டன் மில்க். தமிழில் நாம் மஞ்சள் பால் என்று கூறுகிறோம். மஞ்சள் ஒரு மூலிகை உணவுப் பொருள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.

பண்டைய காலத்தில் இருந்தே இந்திய ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்மைகள்!
தேங்காய் பாலில் மஞ்சள் மற்றும் இஞ்சியை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்:
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற
கல்லீரல் நோய் குணப்படுத்த
சுவாச மண்டலத்தை வலுப்படுத்த
தூக்கமின்மையை சரி செய்ய
சரும குறைபாடுகளை குணப்படுத்த
இரைப்பை குடல் பிரச்சனைகள் சரிசெய்ய
தசை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த

தேவையான பொருட்கள்!
மஞ்சள் பால் தயாரிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் - 2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேன் - 1 டீஸ்பூன்
இலவங்க பட்டை - பாதி டீஸ்பூன் அளவு
மிளகு - ஒரு சிட்டிகையளவு


செய்முறை!
இந்த அனைத்து பொருட்களையும் கடாயில் இட்டு சூடு செய்யவும். பத்து நிமிடங்கள் சூடு செய்யுங்கள். இலவங்க பட்டை பொடியை கடைசியில் தூவவும். இந்த கோல்டன் மில்க்கை நீங்கள் ஐந்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்துக்கள்!
தேங்காய் பால் : மெக்னீசியம், வைட்டமின் பி, கொல்லுப்பு அமிலங்கள், எலக்ட்ரோலைட்.

தேங்காய் எண்ணெய் : இதயம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

மிளகு : சளியை போக்கும், செரிமானத்தை சீராக்கும், இரத்த சோகையை எதிர்த்து போராடும்.

இஞ்சி : இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

தேன் : உறக்கத்தை மேம்படுத்தும், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.