தேன் துளிகள்! - Different Types Of Honey And Their Health Benefits

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தேன் துளிகள்!


தே
ன் உடலின் ஒவவோர் உறுப்புக்கும் ஊட்டத்தை அளிக்கக்கூடியது. அதனால்தான் தேனை அமிர்தத்துக்கு நிகராகச் சொல்கின்றனர்.

தேனின் வகைகள்
எந்தப் பூவில் இருந்து தேன் எடுக்கப்படுகிறதோ, அந்தப் பூவின் தன்மையைப் பொருத்து தேனின் தன்மையும் குணமும் மாறுபடும். அதற்குக் காரணம் அதன் மகரந்த போலன்.

நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, பூர்க்கு, புளியம், துளசி, பூண்டு மற்றும் வெங்காரமது போன்ற 300-க்கும் அதிகமான தேன் வகைகள் உள்ளன. பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை ஐந்தாகப் பிரிக்கின்றனர்.

மலைத் தேன்: மலைகளில் கிடைப்பது. அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக, கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.

கொம்புத் தேன்:மரத்தில் கிடைப்பது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

பொந்துத் தேன்: மரப்பொந்துகளில் கிடைப்பது. எடை சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுத் தேன்: மலைப் புற்றுகளில் கிடைப்பது. குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.

மனைத் தேன்:வீடுகளில் கிடைப்பது. முடி சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும்.

தேனில் உள்ள நீர் அளவு குறையும்போது, தேன் கற்கண்டு உருவாகும். தேன் கற்கண்டு (டெரிஜியம்) கண்புரை மற்றும் கண்சதை வளர்வதைத் தடுக்கும்.

*பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும்.

*பால், பாசிப்பயறு மற்றும் தயிரைத் தேனுடன் சேர்த்து முகத்தில் பூசிவர முகப் பொலிவு கூடும்.

*கிரீன் டீ உடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.

*தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தலையில் தடவி, ஓரு மணி பின் குளிக்க,முடிக் கொட்டுதல் நிற்கும்.

*தேனை, சுண்ணாம்புடன் சேர்த்துப் பத்து போட்டால், வலி, வீக்கங்கள் குறையும்.

*தூதுவளைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்க, சளியைக் குணப்படுத்தும்.

*கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்தசோகைப் போகும்.

*தேங்காய்ப்பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

*பார்லி அரிசிக் கஞ்சியைத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, அல்சர் குணமாகும்.

*தேனுடன் ஆமணக்கு 15 மி.லி சேர்த்துச் சாப்பிட, குழந்தைகளுக்கு சிறுநீர் பிரிவது சீராகும்.

*பூண்டு, தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால், தொண்டைப் புண் சரியாகும்.

*தேனை வெந்நீர் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு
சரியாகும்.

*துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.

*இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு பலன் தரும்.

*தேன், மிளகுடன் சேர்ந்துச் சாப்பிட, தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

*பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல சக்தி உண்டாகும்.

*பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.

*40 வயதைக் கடந்தவர்கள், நீர் அல்லது பாலுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், கால்சியம் சத்தின் அளவு கூடும்.

*தேனை, தீப்புண்களின் மீது தடவிவர புண்கள் ஆறும்.

*ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.

*நெல்லிக்காய் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.

*எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.

*இஞ்சிச் சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் தீரும்.

*ரோஜாப்பூ, கல்கண்டு, தேன் கலந்து சாப்பிட்டால், உடல் வெப்பம் தணியும்.

மாதுளை மனப்பாகு - மூன்று மாத கர்ப்பிணிகள், மாதுளம் பழச்சாறு, தேன், பன்னீர் ரோஸ், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல் குறைவதுடன், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். மேலும், வாந்தி வருவது போன்ற உணர்வு குறையும்.

தேனை யாருக்குக் கொடுக்கக் கூடாது
*ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குத் தேன் கொடுக்கக் கூடாது.

*சர்க்கரை நோயாளிகள் தேன் அதிக அளவு எடுத்துக்கொள்ளக் கூடாது.

*போலன் அதிகம் உள்ள தேனைத் தொடர்ந்து சாப்பிடும்போது, தொண்டை அடைத்து, மரணம் ஏற்படக்கூடும்.

தேனை எப்படிச் சாப்பிடக் கூடாது
*தேனை சூடுபடுத்தக் கூடாது.

*தேனை நெய் மற்றும் எண்ணெய் உடன் சம அளவு சேர்த்துச் சாப்பிடக் கூடாது.

*போலன் அதிகமாக உள்ள தேனைச் சாப்பிடக் கூடாது.


 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.