தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்&

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
எமது உடலில் தேமல் வந்தால் பார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள். நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும்.


  1. இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
  2. எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
  3. ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும்.
  4. மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
  5. ஒரு துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
இந்த மருத்துவக் குறிப்புக்களை செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு வந்த தேமல் மறைந்தே போய்விடும்.
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#2
Re: தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக&#30

வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

கை, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.