தைராய்டு நோயைப் பற்றிய விழிப்பு உணர்வு

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
நம் உடலில் பலவகையான நாளமில்லாச் சுரப்பிகள் இருக்கின்றன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அதைச் செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டைப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் 'தைராக்ஸின்' ஹார்மோன்தான் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைப்பது, எடை அளவைக் கட்டுக்குள் வைப்பது, தோலின் மென்மைத் தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி... இவை அனைத்தையும் பராமரிக்கிறது.

இந்த தைராய்டு சுரப்பியில் முழுமையாகவோ அல்லது சிறிதாகவோ கட்டிகள் ஏற்படும்போது, தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ சுரக்கும். விளைவு... மேற்சொன்ன அதன் பணிகளில் பாதிப்பு ஏற்படும்! இதுதான் தைராய்டு பிரச்னை! கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்களுக்குத்தான் இந்த தைராய்டு பிரச்னைகள் அதிகம் வருகிறது"

சில சமயங்களில் பிறக்கும்போதே தைராய்டு சுரப்பி இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது இருந்தும் பணி செய்யாமல் இருந்திருக்கலாம். இதை 'கான்ஜெனிடல் ஹைப்போதைராய்டிஸம்' என்பார்கள். அதனால் பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே நான்காம் நாள் தைராய்டை கண்டறிவதற்கான டி.எஸ்.ஹெச். டெஸ்ட் எடுத்து, தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்குரிய சிகிச்சை பெறலாம். கவனிக்காமல் விடும்பட்சத்தில், ஒரு வகை மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம். ஆனால், இது குணப்படுத்தக்கூடியதுதான்.

தவிர, நம் உடலில் சில சந்தர்ப்பங்களில் தைராய்டு சுரப்பிக்கு எதிரான ஆன்டிபயாடிக்ஸ் உற்பத்தியாகி, அது தைராய்டு சுரப்பியை பாதிக்கும். அதனால் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். அடுத்து, பிரசவிக்கும் தருணத்தில் சில பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு, சங்கிலி நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கப்படலாம். அதனாலும் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். அது மாதவிடாயை நிறுத்தலாம். எனவே, பிரசவம் முடிந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குப் பிறகு முறைப்படி மாதவிடாய் வரத் தவறினால், அது தைராய்டு பிரச்னையாலா என்பதைக் கண்டறிய வேண்டியது
அவசியம்.

குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு இயல்பாகவே 'போஸ்ட் பார்ட்டம் புளூஸ்' எனும் மன அழுத்தம் ஏற்படும். தைராய்டும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அந்த சமயத்தில் ஏற்படும் மன அழுத்தம் தைராய்டினாலா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.


குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணமாதலால், குழந்தை இல்லாதவர்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும், தைராய்டு பிரச்னை ஏற்படும். ஆனால், அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது என்பதால், ஐம்பது வயதுக்கு மேல் எல்லா பெண்களுமே தைராய்டு பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொண்டைப் பகுதியில் சிறு கட்டிகள் இருந்து, அவை பெரிதாக வளரும்போது, தசையுடன் ஒட்டிக் கொண்டிருந்தால், கேன்சராக மாறும் அபாயம் இருக்கிறது!"
ரத்தப் பரிசோதனையிலேயே தைராய்டு குறைபாட் டைக் கண்டறிந்துவிடலாம். அதில் தைராக்ஸின் குறைவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனி சிகிச்சையும், தைராக்ஸின் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனி சிகிச்சையும் உண்டு. தைராக்ஸின் குறைவாக சுரப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் என்று... இதில் சில பிரச்னைகள் ஏற்படலாம். சிகிச்சை எடுக்காமல் விடும்பட்சத்தில், உடல் எடை அதிகரிப்பால் இதயத்தைச் சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித் துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக்கூடும். ஏன்... கோமா நிலைகூட ஏற்படலாம்!


அதிகமான தைராய்டு சுரப்பால் எடை குறைதல், இதயத் துடிப்பு அதிகமாதல், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுப் போக்கு என பல உபாதைகள் ஏற்படும். இதற்கு 'கிரேவ் டிஸீஸ்' என்று பெயர். இந்த கிரேவ் டிஸீஸ் உள்ள பெண்கள் சிலருக்குக் கண்கள் பெரியதாகி, வெளியே வருவது போல தோற்றம் அளிக்கும். இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால், இதயத் துடிப்பு அதிகமாகி, நாடியில் மாற்றம் ஏற்பட்டு, இதயக் கோளாறுகள் ஏற்படலாம். நோயின் வீரியத்தைப் பொறுத்து... மாத்திரை, ரேடியோ அயோடின் தெரபி மற்றும் அறுவை சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
.

தைராக்ஸின் சுரப்பு குறைவுக்கு நோயாளியின் உடல் எடை மற்றும் நோயின் வீரியத்தைப் பொறுத்து, மருத்துவர் மாத்திரைகளை பரிந்துரைப்பார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... இந்த மாத்திரைகள் தைராய்டு சுரப்பியை சரி செய்யாது. பதிலாக, தைராக்ஸின் ஹார்மோன் செய்யும் பணியை இந்த மாத்திரை செய்யும். இதில் வருந்தத்தக்க விஷயம்.... தைராய்டுக்காக ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பிரசவ காலத்தில்கூட நிறுத்தக் கூடாது


"சாப்பிடும் உணவுக்கும் தைராய்டு பிரச்னைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, தைராய்டு நோயாளிகள் முறையான டயட்டால் தாராளமாக எடையைக் குறைக்கலாம்." தீர்ந்துவிட்டதுதானே தைராய்டு சந்தேகங்கள்?!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#2
தைராய்டை கண்டறியும் சுயபரிசோதனை!


கண்ணாடி முன் நின்று, ஒரு டம்ளர் தண்ணீரை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். கழுத்தை பின் நோக்கி லேசாக வளைத்தால், தொண்டைப் பகுதி கண்ணாடியில் தெளிவாகத் தெரியும். கழுத்தின் மேல் நேர்க் கோடாக இருப்பது ஆடம் ஆப்பிள் எனும் பகுதி. அதன் கீழ் இருப்பது கிரிகாய்ட் (Cricoid) வளையம். அதன் கீழ் உருண்டை வடிவில் இருப்பதுதான் தைராய்டு. தண்ணீரை விழுங்கும்போது இந்த உருண்டை மேலே சென்றால், உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்!


அயோடின் குறைபாடும் தைராய்டு வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அயோடின் குறைவாக உள்ள சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள், அதனை ஈடுகட்ட, அயோடின் கலந்த உப்பை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்!
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#3
useful information...Viji....
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.