தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான் !

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள்...!


பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகளாக அமைகின்றன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால் உபயோகப்படுத்தப்படாமல் பின் அவை தொப்பையாகவும், உடல் பருமன் அதிகரிப்பாகவும் வெளிப்படுகிறது.

தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே பலவிதமான நோய்களுக்கு அடித்தளமாகிவிடுகின்றன. உடலின் மற்ற பாகங்களில் தங்கும் கொழுப்பு மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்வதால் இரத்தக் கொழுப்புப் பிரச்சனை (கொலஸ்ட்ரால்), இளநரை, முடி உதிர்தல், சர்க்கரை நோய், வாதம், இதய நோய்கள், இளமையிலேயே முதுமையடைதல், குடலில் புண்கள், மாரடைப்பு போன்ற பலவிதமான நோய்களுக்கு தொப்பை ஒன்றே காரணமாகிவிடுகிறது.

தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் :

செரிமானம்

தாய்மை

ஹhர்மோன்

ஸ்ட்ரஸ்

கேஸ்

செரிமானம் :

செரிமானம் சார்ந்த பிரச்சனைகளினால் தொப்பை உண்டாகலாம்.

இவ்வாறு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு கலோரி குறைவான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் அவசியம் ஆகும்.

தாய்மை :

குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பெற்றவுடன் இயற்கையாகவே தொப்பை உருவாகும்.

இதனை குறைப்பதற்கு மசாஜ் அல்லது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதனை பின்பற்றுவது நல்லது.

ஹhர்மோன் :

ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் ஹhர்மோன்களின் மாற்றத்தினாலும் தொப்பை உருவாகும்.

இவ்வாறு ஏற்படும் தொப்பையை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும்.

மேலும் உங்களுடைய உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஸ்ட்ரஸ் :

தூக்கமின்மை அல்லது ஸ்ட்ரஸ்ஸினால் தொப்பை ஏற்பட்டிருக்குமானால் கீழ் வயிறு மட்டும் துண்டாக தெரியுமளவிற்கு தொப்பை இருக்கும்.

பிறர் ஏழு மணி நேரம் தூங்குகிறார்கள் என்றால் நீங்கள் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் தேவை.

காபி மற்றும் டீ அதிகப்படியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,504
Likes
35,500
Location
mysore
#2
Re: தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான&#302

Really very useful information you have posted. thank you @Durgaramesh!
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#3
Re: தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் இதுதான&

Thank u friend.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.