தொப்பை குறையணுமா - To reduce your Belly Fat!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
தொப்பை குறையணுமா?


நார்ச்சத்து

நார்ச்சத்துகள் நம் ஆரோக்கியத்துக்கு எத்தனை அவசியமானவை என்பது நமக்குத் தெரிந்ததுதான். இப்போது அந்த கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல், ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன், ஜர்னல் ஆஃப் யூராலஜி உள்பட பல்வேறு மருத்துவ இதழ்களில் நார்ச்சத்து தொடர்பான ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வழக்கத்தைவிட 10 சதவிகிதம் கூடுதலாக நார்ச்சத்து எடுத்துக் கொண்டால் மரணத்தையே இன்னும் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட முடியும் என்பது உள்பட ஆச்சரியமான காரணங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன! தினசரி வாழ்வில் 25 கிராம் அளவாவது நார்ச்
சத்துகள் வேண்டும் என்பதற்காக கீழே 7 ஆய்வுகளின் முடிவுகள் பட்டியல் இடப்பட்டிருக்கிறது.

மூளை தினமும் 7 கிராம் அளவு நார்ச்சத்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கு பக்கவாதம் வருகிற வாய்ப்பு 7 சதவிகிதம் குறைவு. இதயம்தினமும் 7 சதவிகிதம் நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் இதய நோய்கள் வருகிற அபாயமும் 9 சதவிகிதம் குறைகிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் வீரியத்தைக் குறைக்கும் ஆற்றல் நார்ச்சத்துக்கு உண்டு என்பதே இதன் காரணம்.வயிற்றுப் பகுதியின் சதைகள்குறைவதற்கு...

தினமும் 30 கிராம் அல்லது அதற்கும் மேல் நார்ச்சத்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு வயிற்றுப் பகுதியின் சதைகள் பெரும் அளவு குறைகிறது. டயட் என்ற பெயரில் கலோரி அளவுகளைக் குறைத்துக் கஷ்டப்படுத்திக் கொள்ளும் முறையை விட இது எளிதானது. சிறுநீரகங்கள் தினமும் 21 கிராம் நார்ச்சத்து எடுத்துக் கொள்கிறவர்கள், சிறுநீரகக் கற்கள் வருகிற பிரச்னையில் இருந்து 22 சதவிகிதம் தப்பிக்கிறார்கள்.

நுரையீரல்COPD என்கிற க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ் என்ற நுரையீரல் நோயை நார்ச்சத்துகள் தடுக்கின்றன. க்ரானிக் ப்ராங்கைட்டிஸ் மற்றும்
ஆஸ்துமாவை தடுக்கும் வல்லமையும் நார்ச்சத்துகளுக்கு உண்டு. குடல் பகுதிகள்செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை குடல் பகுதியில் தக்க வைக்க நார்ச்சத்து அவசியம்.

சர்க்கரை அளவு

சர்க்கரை அளவை உடல் கிரகித்துக் கொள்ளும் வேகத்தை நார்ச்சத்துகள் குறைப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதையும், நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.