நகங்களை அழகாக்கும் உணவுகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நகங்களை அழகாக்கும் உணவுகள்

நகங்களின் வளர்ச்சிக்கு கால்சியம், வைட்டமின் டி அவசியம். கால்சியம் பாலிலும், வைட்டமின் டி சூரிய ஒளியிலும் உள்ளன. இதன் குறைபாட்டால் நகங்களில் வெள்ளைப்பூ விழுதல், வறண்டு வெடித்து விடல், உடைதல் போன்றவை ஏற்படும்.

ஆரோக்கியமான நகத்துக்கு, பால், கேழ்வரகு, முருங்கைக்கீரை, பேரீச்சம் பழம், மாதுளை மற்றும் சிறுதானியங்கள் போன்ற கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். இரும்புச்சத்து குறைவால் நகங்கள் வெடித்தல், உடைதலுடன், வளைதல் போன்றவை ஏற்படும். இதற்கு நாவல் பழம், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி கீரை மற்றும் திரிபலா சூரணம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.