நடந்ததெல்லாம்... நடப்பதெல்லாம்...‘தேஜாவூ

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நடந்ததெல்லாம்... நடப்பதெல்லாம்...‘தேஜாவூ

முருகன் - மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர்

சில சமயங்களில், ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே இது ஏற்கெனவே நடந்ததுதான் என்பதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதை ‘தேஜாவூ’ என்கிறது மருத்துவ உலகம். (‘நண்பன்’ படத்தில் சத்யன் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்.)

நாம் பார்க்கும், கேட்கும், உணரும் விஷயங்களை, ஹார்டு டிஸ்க் போல சேகரித்து, நமக்குத் தேவைப்படும் நேரத்தில் நினைவாகத் தருகிறது மூளை. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் பல பிரச்னைகளை நாம் சந்திக்கலாம், ஒருவேளை, அதில் உள்ள தகவல்களைத் திரும்பப் பெற முடியாமலும் போகலாம். இது போன்று பிரச்னைகளை மூளை சந்திக்கும்போதுதான், மறதி, சோர்வு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. இதில் விநோதமான பிரச்னைதான் தேஜாவூ.
உலகில் 15 முதல் 25 வயது வரை உள்ள 70 சதவிகிதம் பேருக்கு, தேஜாவூ சில முறை நிகழலாம். இதை உணரும் நம்மில் பலர், இதை ஒரு வகை சக்தி என்று நினைக்கிறோம். ஆனால், இதுவும் ஒரு வகைக் குறைபாடே. இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கு, இரண்டு வகைக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்வினை மூளை சேகரித்துவைக்கும் முன்பே, மூளையின் நரம்பு மண்டலங்கள் அதை உணர ஆரம்பித்துவிடுகின்றன. பிறகு, அதே தகவல் மூளையில் பதியும்போது, ‘முன்னரே இது நமக்கு நிகழ்ந்தது’ எனும் ஒரு பிரமை ஏற்படுகிறது. மூளை சோர்வாக இருப்பதால், இந்தப் பிரச்னை ஏற்படலாம். சில சமயங்களில் ஒரு நிகழ்வை, ஒரு கண்ணைவிட மற்றொரு கண், மிக வேகமாகப் பதிவுசெய்கிறது. இது மில்லியன் செகண்டு வேகத்தில் நடப்பதால், மற்றொரு கண் அதைப் பதிவுசெய்யும்போது, நமக்கு ‘ஏற்கனவே இது நிகழ்ந்திருக்கிறது’ எனும் உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இந்தக் காரணத்தைப் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களும் இதை உணர்வதாக ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.


தேஜாவூக்கு எதிர்ச் சொல் ‘ஜமாய்ஸ்வூ’. பிரெஞ்சு மொழியில் இதற்குப் ‘பார்த்தது இல்லை’ (Never Seen) என்று பொருள். நாம் நன்கு, பார்த்து, பழகிய பெயர்கள், இடங்களை, நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, அதைப் பற்றிய ஒரு விவரமும் சிறிது நேரம் நமக்குத் தெரியாமல் இருப்பதுபோலவோ அல்லது மறந்து விட்டதுபோலோ இருக்கும். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தை அல்லது பெயரை நமக்குள்ளே சொல்லிப்பார்த்தாலும், சட்டென்று ஒன்றும் தோன்றாமல் இருக்கும். வலிப்புநோய் உள்ளவர்கள், இதை அடிக்கடி உணர்வார்கள் . இது சாதாரணமாக வந்து போனால், பயப்படத் தேவை இல்லை. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டால், தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.