நடப்பதும் நல்லதுதான்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
நடப்பதும் நல்லதுதான்

ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் நடந்தால் போதும், மாரடைப்பு கேன்சர் போன்ற ஆபத்து நம்மை நெருங்காது என்று புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்துக்கு நூற்று ஐம்பது நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது வாழ்க்கைக்கு அவசியம் என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதைவிட குறைவாக ஓடியாடினால் போதும் என்ற தகவல் தைவான் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு லட்சம் பேரை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

இந்த ரீதியில் போனால் உடற்பயிற்சியே அவசியமில்லை என்ற செய்தி வரலாம் என்று சிலர் எதிர்பார்க்கக்கூடும். நடப்பது, ஓடுவது, படி ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது போன்ற எந்த விதமான உடற்பயிற்சியும் இல்லாதிருப்பது நோய்களுக்கு விடுக்கும் அழைப்பு என்பதில் டாக்டர்களிடையே மாறுபட்ட கருத்து இல்லை. தினசரி அல்லது வாரத்துக்கு எத்தனை நிமிடம், என்ன விதமான பயிற்சி அவசியம் என்பதில் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகின்றன.

வாரத்தில் ஐந்து நாட்கள் முப்பது நிமிடங்கள் மிதமான பயிற்சியும், மூன்று நாட்கள் இருபது நிமிட கடும் பயிற்சியும் தேவை என்பது பெரும்பாலான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிபாரிசு செய்யப்படுகிறது. நடப்பதற்கே தயங்கும் சோம்பேறிகளை ஓடச் சொன்னால் பலிக்குமா? அத்தகையவர்களுக்கு ஆறுதல் தருகிறது தைவான் ஆய்வு. லான்செட் போன்ற பிரபலமான மருத்துவ இதழ்களில் வராத கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன.

கீழே விழுந்த பென்சிலை குனிந்து எடுப்பது, பேட்டரி தீர்ந்த ரிமோட்டை கடாசிவிட்டு டீவியில் சேனல்களை கையால் மாற்றுவது, லிப்ட் இருந்தாலும் இறங்கிவர படிகளை பயன்படுத்துவது, சனிக்கிழமை நவக்கிரகம் சுற்றுவது & இந்த மாதிரியான அலட்டல் இல்லாத அசைவுகளும் ஆரோக்யத்துக்கு பெரிதும் உதவுகின்றன. சாராம்சம் என்னவென்றால் உடல் அசைந்துகொண்டே இருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக டீவி பார்ப்பதும் கம்ப்யூட்டரில் வேலை செய்வதும் உடல் அசைவுக்கு உதவாது என்பதால் தவிர்க்க வேண்டியவை. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதுபோல் கைகால்களை ஆட்டி நடிப்பதுகூட நல்லது. நாள்போக்கில் நிஜமாகவே சுறுசுறுப்பாகி விடுவோம். கொடிய நோய்கள் நம்மை நெருங்காமல் புதிய சோம்பேறிகளை தேடிப் போகும்.

Dinakaran
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#3
Ganga... Vamma walking poyittu varalam.... thanks for sharing....
Vanga pokkalam...naanga solradhu mattum illa followum pannuvom....i walk min 45mints everyday....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.