நன்றி நவிலுதல்

UPPILI SRINIVAS

Friends's of Penmai
Joined
Jul 23, 2013
Messages
288
Likes
1,163
Location
thanjavur
#1
பெண்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம். 2013 ஆம் ஆண்டிற்கான பத்து சிறந்த கலைஞர்கள் / கைவினை கலைஞர்களில் என்னையும் ஒருவராக தேர்ந்தெடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி. நல்ல அழகு நிறைந்த பொருட்கள் எதுவாயினும் வெளிவருவதற்கு அல்லது படைப்பதற்கு பாராட்டுகளும் ஊக்குவிப்பும் மிகச் சிறந்த காரணியாகும். உங்களுடைய பாராட்டும் ஊக்குவிப்பும் இல்லையெனில் கலைஞர்களின் படைப்புகளில் அவ்வளவு சிறப்பு இருக்காது. அதை பெண்மை மிகச் சரியாக செய்து வருகின்றது. எல்லோரும் திறன் வாய்ந்தவர்களே அவர்களுக்கு சரியான பாதை கிடைத்துவிட்டால் வானமே எல்லை. அதுபோல் நம் பெண்மை உறுப்பினர்கள் யாவரும் ஒவொருவரின் செயல்களுக்கும் பங்களிப்பிற்கும் நல்ல பாராட்டையும் ஊகத்தையும் அளித்து வருகிறார்கள் அதை தொடர்ந்து செய்து எல்லோருடைய செயலுக்கும் ஊக்க காரணியாக இருக்கவேணும் என்று இந்த நேரத்திலே அன்புடன் கேட்டுகொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் கலைப் பணி. பெண்மை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி நன்றி . வாழ்க வளர்க


அன்புடன்
முனைவர். கோ. உப்பிலி ஸ்ரீனிவாசன்
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
வணக்கம் திரு. உப்பிலி ஸ்ரீனிவாசன் அவர்களே!

தங்களின் ஓவியங்கள் பலவற்றை இந்தப் பெண்மையில் உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கண்டு களித்திருக்கிறோம். தங்களின் ஆக்கங்களையும், கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களின் கண்ணிற்கும் கருத்திற்கும் விருநதளித்தமைக்கு நாங்கள் தான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து உங்களின் ஆக்கங்களை எங்களுடன் பகிர்ந்து எங்களை மகிழ்விக்குமாறு பெண்மை உறுப்பினர்களின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.