நம்பிக்கை ஒளி

Status
Not open for further replies.

girija chandru

Penman of Penmai
Blogger
#1
நம்பிக்கை ஒளி - Part 1

"கால அரசன் மன
காயங்களை ஆற்றுவானா ?
காலம் காட்டும் வழியில்
கண் மூடி பயணம் செய்கிறாள் தலைவி"

அழகான ஊர் பாண்டிச்சேரி. அன்னையின் ஆஸ்ரமம் அழகோ அழகு. மலர்கள் மணம் வீசி வாழ்வின் பிரச்னைகளை குறைக்கும் அற்புத ஸ்தலம்.
பாண்டிச்சேரி முக்கிய சர்ச் ஒட்டிய பள்ளியில் பிரெஞ்சு, ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியை தான் நமது கதாநாயகி.பெயர்? மதுமதி.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்த மதுமதிக்கு இரவே மும்பை செல்லும் ரயிலில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். மனதின் உள்ளில் சோகங்களை சுமந்தாலும் வெளி காட்டாத இருபது வயது அழகு மங்கை அவள். தந்தை கர்னல் ராகவனை சந்திக்க மும்பை செல்கிறாள். மூன்று வயதில் சந்தித்த அப்பாவிற்கு தன்னை நினைவு இருக்குமா என்று தெரியாத நிலை. பத்து நாட்களுக்கு முன்பு இறந்த தாய் கரோலின்
நினைவலைகள் மனதில் அடித்தது.

தந்தைக்கு வருவதாக தந்தி கொடுத்து விட்டாள். நிரந்தரமாக மும்பையில் தங்குவதாக முடிவு இல்லை. அவளுக்கு எது நிரந்தரம்? தாயின் பாசமா? தந்தையின் அன்பா? தாய், அவளை உடன் வைத்து பராமரிக்காமல் ஆஷ்ரமத்தில் சேர்த்து, தந்தை உதவி செய்யவில்லை என்று அழுதது நினைவுக்கு வந்தது. எதுவுமே இல்லாத நிலையில் அனாதை ஆஸ்ரமத்தில் படித்து ஆங்கில பட்டதாரியானவள் ஆயிற்றே அவள்!

ஆனாலும், தந்தையை ஒரு முறை நேரில் காண வேண்டும். தாயை பற்றிய அவருடைய நல்ல நினைவுகள் பாதிக்காத வண்ணம் கண்டு பின்பு பாண்டிச்சேரி திரும்ப வேண்டும் என்பது அவள் ஆசை.

மும்பை ரயிலுக்கு முன்பாக அவள் மனம் மும்பைக்கு சிறகடித்து பறந்து விட்டது. தந்தை ஆவலுடன் ரயிலடிக்கு வருவதாகவும், அவளை கொஞ்சுவதாகவும் கனவு தான்.!

இதோ... மும்பை ரயிலடி வந்துவிட்டது. மதுமதி இறங்குகிறாள். முன் பின் தெரியாத ஊர். எப்படியாவது அப்பா வந்து விட்டாள் பரவாயில்லை என்று மனதில் நினைத்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய பெயர்,ஊர் தாங்கி ஒரு அழகான ஆடவன் நின்று இருந்தான்.

அவள் அவனை நோக்கி சென்றாள்.
அவன் "நீங்கள் மதுமதியா?" என்றான்.
அவள் "ஆமாம்...நீங்கள்?" என்றாள்.
"என் பெயர் வேணுகோபாலன். என்னை ராகவன் மாமா அனுப்பினார். அவர் எனக்கு நல்ல நண்பர். அவருடைய மது சில்க்ஸ் கம்பனியில் நான் ஜெனரல் மேனேஜர். உங்களை அழைத்து போக வந்திருக்கிறேன். என்ன விஷயமாக வருகை என அறியலாமா?" என்றான்.
மது சிடுசிடுப்புடன் "அதை நான் அப்பாவிடம் சொல்லிகொள்கிறேன்" என்றாள்.
வேணு "உங்கள் இஷ்டம். ஒன்றே ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன். இத்தனை நாட்களாக ராகவன் மாமா நிம்மதியாக இருந்தார். அவர் நிம்மதி கெடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். என்ன திடீர் பாச பந்தம் என்று தான் கேட்டேன். உங்கள் தாய்க்கு மாதா மாதம் முப்பது ஆயிரம் கொடுத்த கொடுமை போதாதா?" என்று சீறினான்.
மதுமதியின் முகம் கோபத்தில் ரத்த
சிவப்பாக மாறியது.

................ தொடரும் (அடுத்த விழாயன்)..... கிரிஜா சந்துரு 15.12.2011.

expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.htmlboost me up......
bear me dears


 
Last edited by a moderator:

girija chandru

Penman of Penmai
Blogger
#2
Re: girija's serial story

நம்பிக்கை ஒளி - பாகம் - 2
"மன அழுத்தங்கள் அதிகம் ஆகும்போது
மனம் விட்டு பேச வராது;
மனம் விட்டு பேச முடியாது"

மதுமதியின் முகம் சிவந்தது. வேணுவை பார்த்து " என் குடும்ப விஷயத்தில் தலையிட நீங்கள் யார்? please, mind your business" என்றாள். வேணு " எனக்கு ஒன்றும் உங்க விஷயத்தில் தலையிடனும் நு ஆசை இல்லை. ஆனா, எங்க ராகவன் மாமாவை மனசு கஷ்டபடுத்த வந்திருந்தா , பத்ரம். நான் பொல்லாதவன் ஆயிடுவேன்" என்று கூறி கார் ஸ்டார்ட் செய்தான். பேசமால் பின் சீட்டில்
ஏறினாள் மது.

வீடு வாசலில் அப்பா காத்திருந்தார். "மது... அப்படியே உன் அம்மாவை போல் இருக்கிறாய். வா, வா" என்று அணைத்து உள்ளே அழைத்து சென்று "மரியம், இவள் தான் என் மகள் மது. மது, இவங்க தான் நம்ம வீட்டிலே ரொம்ப நாளா சமையல் செய்தது வராங்க. வேணு, வா,வா " என்றார். வேணு "மாமா, நான் சாயங்காலம் வரேன். வேலை இருக்கு" என்றான். ராகவன் "இல்லை. இல்லை. வந்து, டிபன் சாப்பிட்டு போனா போதும்" என்றுவற்புறுத்தினார்.பின், "மது, சென்று குளித்து வா. சாப்பிடலாம்". என்றார்.

மது வேகமாக சென்று குளித்து ஒரு வெளிர் பச்சை சுடியில் சாப்பிட வந்தாள். மரியம் "ரொம்ப ஒல்லியாக இருக்கிறாய். நன்கு சாப்பிடவேண்டும்" என்று அன்புடன் கூறியபடி தோசைகளை எடுத்து வைத்தாள். வேணுவை பார்க்காமல் சாப்பிட்டாள். ராகவன் "என்ன அம்மா, திடீர் விஜயம்? அம்மா எப்படி இருக்கிறாள்?" என்றார். மது தலை குனிந்தபடியே " ஒன்றும் இல்லை. சும்மா உங்களை பார்க்கலாம் என்று தான். நான் ஒரு பட்டதாரி. பாண்டிச்சேரியில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் கற்பிக்கும் ஆசிரியராக வேலை பார்க்கிறேன்." என்றாள். அப்பா, "ரொம்ப சந்தோஷம். அம்மா உன் கூட தான் இருக்கிறாளா? " என்றார். வேணு கை அலம்ப வெளியே சென்றான். மது மெதுவாக"அப்பா, அம்மா இறந்து பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று" என்றாள். அதிர்ச்சியுற்ற ராகவன் "மது, என்ன, என்ன, உண்மையாகவா?" என்று கத்தி, அழுதார்.

உள்ளே வந்த வேணு, எரிச்சலாக "வந்த உடனே ஏதோ பேசி அழ வைச்சாச்சா?மாமா, பேசாம இருங்க. மருந்து சாப்பிட்டீங்களா ?" என்றான். மது "ஏன், அப்பாவுக்கு என்ன? " என்றாள். வேணு "ரொம்ப அக்கறை. அவருக்கு ரெண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்திருக்கு." என்றான். ராகவன் " வேணு, அவள் அம்மா இறந்து விட்டாளாம்" என்றார். மது மெதுவாக சப்தம் இன்றி அழுதாள். வேணு " சாரி. மாமா, எதையும் மனசிலே வைக்க வேண்டாம்" என்றான்.
மது "அம்மாவுடைய கடன் அடைக்க பொருட்கள், அவள் நகைகள் எல்லாம் விற்று விட்டேன். உங்களை நேரில் பார்த்து ஒரு பாத்து நாள் உங்களுடன் இருந்து விட்டு பாண்டி போகலாம் என்று தான்...." என்றாள். வேணு. "என்ன, இன்னும் கடனா? உன் அம்மா என்ன பண பிசாசா? மாதம் முப்பது ஆயிரம் மாமா அனுப்புவது போதாதா உங்க ரெண்டு பேருக்கு?" என்றான். மது "அப்பா எதுவுமே அனுப்புவதில்லை என்று, என்னை கூட, ஆஷ்ரமத்தில் சேர்த்தாளே. அனாதையை போல் வளர்ந்தேனே?" என்றாள். ராகவன் "பார்த்தாயா வேணு, என் மகளை .... அவள் எவ்வளவு பாவங்கள் செய்திருக்கிறாள். சரி மா, மது, நீ சென்று ஒய்வு எடுத்து கொள். சாயங்காலம் எங்காவது வெளியில் போகலாம்" என்றார்.
வேணு, "மாமா, உங்க உடம்பை பார்த்து கொள்ளுங்கள். மகளோடு லஞ்ச் சாப்பிட்டு இருங்கள். சாயங்காலம் பார்க்கலாம்" என்று நடந்தான்.


ராகவன் முகத்தில் கவலை வரிகள்....... பழைய நினைவுகள்.....


தொடரும் அடுத்த விழாயன் by கிரிஜா சந்துரு.
22.12.2011


 

girija chandru

Penman of Penmai
Blogger
#3
நம்பிக்கை ஒளி - பாகம் 3

"தாய் பாம்பு விஷமே கக்கினாலும்
குட்டி பாம்புக்கு பாசம் ஜாஸ்தி தான்"ராகவன் கவலை வரிகளுடன் பழைய கால நினைவுகளை அசை போட்டார். ஆங்கிலோ இந்தியன் பெண் caroline-yai காதலித்ததும், நண்பர்கள் "கலாச்சாரம் ஒத்து வராது டா" என்று எச்சரிக்கை செய்தும் கூட அதை நிர்தாட்சண்யமாக மறுத்து அவளை மணம் முடித்ததும் நினைவு கூர்ந்தார். திருமணத்திற்கு பின்? அவள் சாயல் எப்படி மாறி விட்டது? மது ரசமும், சூதாட்டமும் ஒரு பெண்ணுக்கு அழகு ஆகுமா? என்று எத்தனை முறை தான் அறிவுரை கூறியதும், அவள் எதிர்த்து வழக்கு ஆடியதும், ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றியதும் நினைத்தார். அனால், மது பிறந்த போது, அவர் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது. சரி, குறைந்தது குழந்தைக்காகவாவது மனைவி திருந்துவாள் என்று தப்பு கணக்கு போட்டார். மனைவியின் நடத்தையில் எந்த வித்தியாசமும் இல்லை. செவிலி தாயின் அரவணைப்பில் மூன்று வயது வரை வளர்ந்தாள்.


ஒரு நாள் மனைவி, "நிரந்தரமாக பிரிகிறேன். விவாக ரத்து வேண்டும்" என்றதும் ராகவன் திடுக்கிட்டார். எவ்வளவோ தடுத்தார். பணம் பொருட்டல்ல அவருக்கு. வாழ்க்கையில் மன நிம்மதியும், சமூகத்தில் ஒரு நல்ல பேரும் முக்கியம் அல்லவா? வேதனையுடன், வழக்காட விருப்பம் இன்றி விவாக ரத்துக்கு ஏற்பாடு செய்தார். அவள் பாண்டி செல்வதாக கூறி குழந்தயை இரவோடு இரவாக தூக்கி சென்றதில் மனம் நொந்தார்.


எத்தனை முறை கெஞ்சி இருப்பார்... "ஒரு முறை வருகிறேன்... குழந்தையை பார்க்க". முடியாது என்று அரக்கி கூறினாளே. மாதம் பணமா கறக்கும் மரமாக மட்டும் அவரை பயன்படுத்திக்கொண்டு... குழந்தையையும் காயபடுத்தி, பெண்ணா அவள்? என்று எண்ணியவர் மதுவின் அறைக்கு சென்றார்.


பிறகு மதிய உணவு வரை , கிட்ட தட்ட மூன்று மணி நேரம் இருவரும் மனம் விட்டு உரையாடினர். அப்பா - பெண் உறவு நல்ல பிணைப்பாக பந்தபட்டது. ஆனால், மது "பாவம் பா அம்மா. அவளுக்கு என்ன வேதனையோ...இறந்தவர்களை பற்றி நாம் அவதூறாக பேச வேண்டாம். நிகழ் காலத்தை பார்க்கலாமே.
இறுதி நாட்களில் அவள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள்.ரத்த வாந்தி எடுத்த வண்ணம் நோயின் கடுமை உக்கிரம் " என்ற போது அவர் மகளின் பெருந்தன்மை எண்ணி எண்ணி வியந்தார்.


இருவரும் சந்தோஷமாக மதிய உணவு உட்கொண்டனர். மாலை ஐந்து மணி வரை நல்ல ஹிந்தி பாடல்கள் கேட்டு மகிழ்ந்தனர். பழைய கால பாடல்கள் - எவ்வளவு இனிமை...!! அதுவும், "ஜோ வாதா கியா" மனதை இதமாய் தொட்டு தடவும் பாடல்....


மாலை வேணு வந்தார். மூவருமாக அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்றனர். மது red pattu saree katti ஒரு குட்டி தேவதையை போல இருந்தாள். வேணு ஓர கண்ணால் பார்த்தார். மது கண்டு கொள்ளவில்லை. ராகவன் திரும்பி வந்ததும், "வேணு, மது பாவம். அவளுக்கு அவள் அம்மா எந்த உன்மையையும சொல்லவே இல்லையாம். அவளை தப்பாக நினைக்காதே" என்றார். வேணு லேசாக சிரித்தார்.


மது மனதில் சின்ன மத்தாப்பூவாய் ஒரு அழகு புன் சிரிப்பு. அப்பாவின் அன்பும் நம்பிக்கையும் கிடைத்ததால் இருக்குமோ? இல்லை.... வேறு என்ன?


தொடரும்... அடுத்த விழாயன் by கிரிஜா சந்துரு..
29.12.2011
 

sumathisrini

Super Moderator
Staff member
#4
Dear writer!

Amidst of your busy schedule you are writing Serial Stories in 'Penmai'. So many readers are liking your story & eagerly waiting for subsequent updates till it's completion.

Now-a-days episodes are not updated in regular intervals. This makes the readers disappointed.

Hence, we are constrained to close the incomplete serial story threads as on date & also hereafter will close the threads which are not updated with in a month's period. If any writers like to post the episode in their closed thread, pl. send a PM to the Forum Moderator, who will open the thread. 

girija chandru

Penman of Penmai
Blogger
#5
நம்பிக்கை ஒளி - பாகம் 4
========================

"காதல் அரும்பாகி மொட்டு விட்டதோ
கனியும் பேச்சுகள் இனிக்கின்றதோ "

வேணு முதன்முறை தன்னை நோக்கி சிரித்ததை எண்ணி தான் மது மனம்
மகிழ்கிறாள். மூவரும் அந்த மாலை வேளையில், அருகாமையில் உள்ள ஒரு
தேவி கோயிலுக்கும் ஜுஹு கடற்கரைக்கும் சென்றனர்.

ராகவன் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன், பழைய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே வந்தார். வேணுவும் அவர் பேச்சுக்கு தகுந்த பதிலை அவ்வப்போது சொல்லிகொண்டு சந்தோஷமாக, அவ்வப்போது மதுவை கீழ் கண்ணால் பார்த்து ரசித்து கொண்டு வந்தான்.

மது, இயற்கை காட்சிகளில் தன்னை மூழ்கடித்தவள், வேணுவின் பார்வை கணைகளையும் கண்டு கொள்ள தவறவில்லை, மது மனதின் உள்ளில் சந்தோஷமே பட்டாள். "அப்பாடா.... வேணு என்னை பற்றி தவறாக நினைக்கவில்லை.... தாயின் மீது தான் வெறுப்பு" என்று நினைத்தாள் .

சிற்றுண்டி நிலயம் சென்று உணவு அருந்தி விட்டு அவர்கள் இல்லம் சேர்ந்த போது மணி 8.ராகவன் "நான் சென்று படுக்கிறேன்.. வேணு,மது" என்று படுக்க சென்றார்.

வேணு மதுவிடம்,"கடுமையாக பேசி விட்டேன். மன்னிக்கவும்.உங்கள் தாயால் எங்கள் மாமா மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதனால் தான்... " என் இழுத்தான்.

மது "நீங்கள் மாமா என்கிறீர்களே?? எப்படி? உறவு முறையா?" என்று கேட்டாள்

வேணு,"இல்லை. மது ராகவன் மாமாவும், என் அப்பா சிவனும் நண்பர்கள். இருப்வரும் சேர்ந்து சேலைகள் விற்பனை நிலையம் துவங்கினர். அப்படி பழக்கம். இப்போது என் தாயும் தந்தையும் இல்லை. கடந்த ஆண்டு ஒரு கார் விபத்தில் இறந்து விட்டனர். என் சொந்தம் எல்லாம் மாமா தான்" என்றான்.

மது ..."அச்சோ... சாரி... பழைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டேனோ?" என்று கேட்டாள்

வேணு "இல்லை. வாழ்வை அதன் போக்கிலே வாழ பழகியவன் நான். உன் அப்பா மதியம் போன் செய்து உன்னை பற்றி எல்லாம் சொன்னார். என்னை மன்னித்து கொள்.இனி கடுமையாக உன்னிடம் பேச மாட்டேன் பேச முடியாதே..." என்று புன்னகையோடு கூறி சென்றான்.

படுக்க சென்ற மதுவின் மனம் இனிமையின் !!!கனவில் !


(அடுத்த வாரம் (கிழமை சொல்ல மாட்டேனே... சொன்னா ராசியா இல்லை.......புதன்,விழாயன்,வெள்ளி ) கண்டிப்பாக தொடரும்...)

......... ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
dated 21.08.2015 (fri)
 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#6
நம்பிக்கை ஒளி - பாகம் - 5
=========================

"விருந்து என்று சொன்னால் மனமே குழையும்
விழையும் மனங்கள் இணைதலே விருந்து அன்றோ?"

மறு நாள் காலை, மது குளித்து ஒரு மலையில் கழுத்து நிற சுடி
அணிந்து கொண்டு காலை உணவுக்கு இர்னகி வந்தால். அப்பா ஏற்கெனவே அவளுக்காக காத்து கொண்டு இருந்தார்.

ராகவன் அவளிடம் "மது , இன்று மாலை நாம் ஒரு விருந்துக்கு போகிறோம்.
நம்முடைய மரியம் இருக்கிறாள் அல்லவா? அவள் மகன் திருமண விருந்து."
என்றார்.

மது உடனே "ஓஹ் த்... மரியம் ஆன்டி, சொல்லவே இல்லையே , உங்கள் மகனுக்கு
திருமணம் ஆகி விட்டதா?" என்று கேட்டாள் .

மரியம், "மது மா , என் மகன் 8வது வரை தான் படித்தான்.. பிறகு கார் ஓட்டும் வேலை கற்று கொண்டு
அவன் வெளிய செய்த பணக்காரர் வீட்டு பெண்ணையே விரும்பி திருமணம் செய்து கொண்டான்.
அவர்களுக்கு இதில் இஷ்டம் இல்லை. நாங்கள் மலை வாழ் மக்கள் என்று எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள்." என்றால்.

மது "இது என்ன கொடுமை? மலை வழ மக்கள் என்றால் மனிதர்கள் இல்லையா? என்னை கேட்டால்,
இயற்கையை கொண்டாடும் மனம் அவர்களுக்கு தான் இருக்கிறது என்பேன். அவர்கள் வெகுளிகள். படித்த திமிரோ, பகட்டோ கிடையாது" என்றாள்.

மரியம்," கண்ணு, நீயும் உன் தந்தையை போலவே நினைக்கிறாய். இன்று இரவு கண்டிப்பாக வா." என்றாள்.

உள்ளே நுழைந்த வேணு "மரியம் ஆன்டி , எங்கே கண்டிப்பாக வர வேண்டும்??? உங்கள் மகன் திருமண
விருந்துக்கா? நான், ராகவன் மாமா, மது மூவரும் வருகிறோம். இல்லையா மாமா?" என்பர் கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்தான்.

ராகவன் "மரியம், வேணுவுக்கு தோசை எடுத்து வை" என்றார்.

வேணு "மரியம் ஆன்டி , இல்லை. நான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன். காபி மட்டும் போதும்" என்றான்.
பிறகு மதுவை நோக்கி, "மது, இவர்கள் நடனம் பார்த்து இருக்கிறாயோ? மிகவும் அருமையாக இருக்கும்" என்றான்.

மது "இல்லை" என தலை அசைத்தாள்.

வேணு "இன்று மதுவை நாம் ஆபீஸ் கூட்டி போகலாமா மாமா?" என்று கேட்டான்.. ராகவன்,"போகலாமா மது? வேறு என்ன செய்வதாக உனக்கு திட்டம்?" என்று கேட்டார்.

மது மெதவாக"இல்லை அப்பா... நான் ஒரு திட்டமும் போடவில்லை" என்றாள் .

காபி அருந்தியபின் மூவரும் காரில் "மது சில்க் சென்டர்" சென்றார்கள். அயிந்து மாடி கட்டிடம் முழுவதும் சுற்றி பார்த்து கீழே வரும்போது வேணு, "மது, எனக்கு ஒரு ஆசை" என்றான் சிரித்தபடி.'உனக்கு ஒரு பட்டு சேலை வாங்கி தரவா?ஏன் மாமா ? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"என்று கேட்டான்.

ராகவன் சிரித்தபடி "உன் இஷ்டம் அப்பா... நான் என்ன வேண்டாம் என்று மறுக்கவா போகிறேன்? நீ வாங்கி கொடுத்தால் எனக்கும் சந்தோஷம் தான் " என்றார்.

கீழ் தளத்தில் தான் பட்டு சேலை பிரிவு இருந்தது. வேணு ஒரு அழகான மாம்பழ நிற பட்டு சேலையின் மீது கை வைத்து,"இது மதுவுக்கு அழகாய் இருக்கும். எடுக்கவா? மது " என்பர் கேட்டான்.

மது "சரி" என்று தலை அசைத்தாள். ராகவன் "எதுதுகோல் மது. இதற்கு ஏற்றார் போல மரகத பச்சையில் ஒரு நெக்லஸ் அணிந்து இன்று மாலை விருந்துக்கு இதை உடுத்து வா" என்றார்.

மது பதறி, 'அப்பா, நான் தங்கம் போடுவது இல்லை. என்னிடம் முத்து மாலை இருக்கிறது.போதுமே !!! " என்றாள்.

ராகவன் "இல்லை டா ... ஒரு பெரிய சேலை கடை அதிபதியின் மகள் நீ ...சிம்பிள் ஆகா இருக்கலாம் சாதாரண நாளில் .... ஆனால் விடுன்ஹ்டுக்கு அப்படி வந்தால் நல்லா இருக்காது டா " என்றார்.

மது சிணுங்கியபடி காரில் ஏறினாள் . வேணு, 'மாலை பார்ப்போம்" என்பர் கூறி சிரிக்கவும் மது அழகாக அவனிடம் இருந்து கண்ணாலே விடை பெற்றாள் .

மாலை 6 மணி அளவில், மது மாம்பழ பட்டு சேலை, அதற்கு ஏற்றார்போல ரவிக்கை இட்டு,கண்ணுக்கு மை தீட்டி, ஜிமிக்கி அணிந்து கீழே வந்த போது, ராகவன் அவளிடம் ஒரு மரகத பச்சை நெக்லஸ் கொடுத்தார். ஏனோ தெரியவில்லை, அப்போதும் மது தயங்கினாள்.

ராகவன் "என்னம்மா தயக்கம், எல்லாம் உனக்கு உரியஹ்டு தானே??? போட்டு கொள் " என்பர் நிர்பந்தித்து அணிய செய்தார்.

வேணு மிக டிப்டாப் ஆகா ப்ளூ சபாஅரியில் வந்து இருந்தான். ராகவன், பட்டு சட்டை வேஷ்டி என பெரியவராய் லட்சணமாய் காட்சி அளித்தார். மூவரும் வ்காரில் ஏறி விருந்து நடக்கும் மண்டபத்திற்கு சென்றனர்.

மணமேடையில் ராஜ் அவன் மனைவி அங்கெஇன் அமர்ந்து இருந்தனர். மரியம் முன் வரிசையில் அமர்ந்து இருந்தவள், இவர்களை வரவேற்க ஓடி வந்தாள் . நல்ல கூட்டம்.

சிறிது நேரத்தில், நடன நிகழ்ச்சி துவங்கியது.மலை வாழ் நடனத்தை நளினமாக 10 பெண்கள் ஆடுவதை கண்டு பரவசத்தோடு ரசித்து கொண்டு இருந்த மதுவின் கையை ஆர்வமுடன் பிடித்து அருகில் அமர்ந்தான் வேணு.(ராகவன் அப்போது வேறொரு நண்பரிடம் பேச நாலு வரிசை தள்ளி பொய் இருந்தார்.)

மது தயக்கத்துடன் "என்ன இது, விடுங்கள்" என சிணுங்க வேணு மெல்ல "ஏன், எனக்கு உரிமை இல்லையா? நான் தொடாமல், உன்னை வேறு யார் தொடுவார்?" என்று வினவ, மதுவின் முகம் குங்குமமாய் சிவந்தது.

இன்ப பரவசத்தில் இருவரும் இருந்த போது விருந்துக்கு அழைத்தனர். சென்று உணவருந்தி அனைவரிடமும் விடை பெற்று கொண்டு காரில் ஏறும்போது, யதேச்சையாக ,மது கழுத்தை தொட்டு பார்த்தவள் திடுக்கிட்டாள்.

காரணம்???

மரகத பச்சை நெக்லஸ் ...... அவள் அப்பா அவளுக்கு ஆசையோடு கொடுத்தது காணவில்லை...!!!!!!

(தொடரும் ........அடுத்த வாரம்)

...ஆக்கம் கிரிஜா சந்துரு.....(ரா. கிரிஜா).....

:typing:
 

girija chandru

Penman of Penmai
Blogger
#8
நம்பிக்கை ஒளி :- பாகம் 6
========================

"கசப்பு விதைகளாய் வார்த்தைகள் விதைத்தால்
களமாய் நெஞ்சம் ஆறா காயம் ஆகும் "

மது பதட்டத்துடன் "அப்பா, நன் ஓடி சென்று உணவு அருந்திய இடத்தில் பார்த்து வருகிறேன்" எண்டு வேகமாக சென்றாள் . சென்ற வேகத்திலேயே விரைவாக கார் அருகில் வந்தாள் "ஐயோ அப்பா, எங்கும் காணோமே" என்று கூறும்போது அவள் குரல் கம்மியது. விழிகளில் நீர் மழை.

அப்பா ,"மது, அது உன் பாட்டி பல காலம் ஆசையாக அணிந்தது ஆயிற்றே..... சரி... இப்போது என்ன செய்வது? போலீஸ் இல் கம்ப்ளைன்ட் கொடுப்போமா?"

வேணு, "ஏன் மாமா, அந்த நகை ஒரு ரெண்டு லட்சம் இருக்குமா?இவ்வளவுவிலை உயர்ந்த பொருளை பத்திரமாக வைக்க வேண்டாமா?" என்பர் கேட்டு கொண்டே மதுவை நோக்கிய அவன் விழிகளில் தீ கனல்கள்.
ராகவன் "இருக்கும் வேணு.... அதை விட பாரம்பரிய நகை என்பதில் தான் எனக்கு கவலை".

மது , "இல்லை... உணவு அருந்தும்போது கூட ...... கழுத்தில் இருந்ததே" என்று கூறி தன் நெற்றியை தேய்த்து விட்டு கொண்டு யோசித்தாள் வேணு "சரி, மது, இப்போ அழுது என்ன லாபம். கார் இல் ஏறு. போலீஸ் ஸ்டேஷன் போகலாம்" என்று கூறியபடி கார் எடுத்தான்.

மது "ஐயோ அப்பா, நான் வேண்டாம் என்றேனே... தயங்கினேனே...எ வ்வளவு தயங்கினேன்??? ஏன் அப்பா எனக்கு கொடுத்தீர்கள்?' என்று அழுதாள்.

வேணு "சரி.சரி. கண்ணை கசக்காதே.... நடக்க வேண்டியதை பார்ப்போம்" என்பர் கூறிய சொற்களில் இனிமை நிச்சயமாக இல்லை.

அப்பா, "மது மா, அழாதே.... இனி என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்" என்று கூறினார்.

மூவருமாக போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து வந்தனர்.

அன்று இரவு மதுவுக்கு உறக்கமே இல்லை.

அடுத்த நாள் காலை மரியம் ஆன்டி , ''மது மா, டிபன் சாப்பிட வரவில்லையா?" என்று அவள் அறை கதவு தட்டியவள், மதுவை கண்டு அதிர்ந்தாள்.... கண்கள், முகம் வீங்கி ஜுரத்துடன் மது !!!!

மது மெதுவாக, "இல்லை ஆண்டி, எனக்கு உடம்பு சரி இல்லை... எனக்கு வேண்டாம்" என்று கூறினாள் . .மரியம் "மாத்திரை சாப்பிட்டியா மது மா?" என்று கேட்க மது, வெறுமனே"உம்ம்ம்ம் "
என்று கூறி, கதவை தாழிட்டாள்.

அப்பா விஷயம் அறிந்த போது, "மரியம், கொஞ்சம் அவள் ஒய்வு எடுக்கட்டும்.... அவளை தொந்திரவு செய்யாதே. ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து அவள் உடல் சீர் இல்லை என்றால் என்னை போன் இல் கூப்பிடு " என்று கூறி உண்டு அலுவலகம் சென்றார்.


மதியம் அவர்கள் குடும்ப டாக்டர் வந்து பரிசோதித்து மருந்து எழுதி கொடுத்தார்.

மூன்று நாள் காய்ச்சல்..... உடல் காயப்படவில்லையே... வேணுவின் கண்களாலும், பேச்சாலும் மனம் அல்லவா கயப்பட்டிருக்கிறது.....மது இந்த மூன்று நாட்களிலேயே இளைத்தாற் போன்று இருந்தது.

மதுவின் மனம் வேணுவையே வட்டம் இட்டது.. "இவர் வரவும் இல்லையே... போன் செய்யவில்லையே....
எனக்கு உடல் நிலை சரி இல்லை என அறிந்து இருப்பாரா?"என்று எல்லாம் பல வாறு சிந்தித்து மன உளைச்சல் பட்டாள் .

அப்பா ராகவன் துடித்தே விட்டார்... "மது மா, விடு... அந்த நகையை பற்றியே நினைத்து உன் உடல் நிலையை வருத்தி கொள்ளாதே.... " என்று பல முறை கூறவும் செய்தார்.


மதுவின் மனம் காயத்தில் ரணப்பட்டது.

வேணுவும் வந்தான்..... ஐந்து நாள் கழித்து.....

வந்தவன் அவள் மன புண்ணில் அடுத்த அம்பை பாய்ச்சினான்......

தொடரும்......

ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html

Bye
 

girija chandru

Penman of Penmai
Blogger
#9
நம்பிக்கை ஒளி :- பாகம் 7
========================

"காதல் சிறகுகள் அக்னியில் விழுந்தால்
கவலை உறாதா மனம்?"

ஆமாம்... வேணு உள்ள வந்தவன், ராகவனும், மதுவும் காபி குடித்து கொண்டு
இருப்பதை பார்த்தான். அருகில் வந்து அமர்ந்தான்.

"ஏன் மாமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை அழைத்து இருந்தார். அவ்வளவு தூரம் நெக்லஸ் விழுவது கூடவா தெரியாமல் மது இருந்தாள் என்று கேட்கிறார். முன்னே பின்னே நெக்லஸ் போட்டது இல்லை போலே இருக்கு..." என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.

மது "உண்மை தான்... நான் ஏழை தானே... அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள் தானே....இது போன்ற நெக்லஸ் எல்லாம் நான் கண்ணால் பார்த்தது கூட கிடையாது" என்று கூறி கண் கலங்கினாள் .

ராகவன், 'விஷயத்துக்கு வா வேணு. ஏன் அவளை கண் கலங்க விடுகிறாய்..? இப்போது தான் ஏதோ ஜுரம் கொஞ்சம் சரி ஆகி இருக்கிறது...."

வேணு, "ஏன் மாமா? இப்போது எல்லாம் உங்களுக்கு என்னை விட மது தான் முக்கியம் அல்லவா?
கொஞ்சம் கூட பொறுப்பு உணர்ச்சி இல்லை. எப்படி தொலைத்து நிற்கிறாள் பாருங்கள்.என்ன விஷயம் சொல்வது? ஒன்றும் இல்லை. ஏதாவது துப்பு கிடைத்தால் சொல்கிறார்களாம்" என்று கிட்டத்தட்ட வெறுப்பாக பேசினான்.

பிறகு ராகவனிடம் , "உங்களிடம் கொஞ்சம் அலுவலக விஷயம் பேசணும். வரீங்களா நாம் நமது
அறைக்கு போகலாம் " என்பர் அழைத்தான். ராகவன் எழுந்து, 'மது நான் போகிறேன் டா.... நீ ச்னெற்று தோட்டத்தில் சிறிது நேரம் கிளிகளை பார்த்து கொண்டு இரு..." என்றார். மது சரி என தலை அசைக்க வேணு அவளிடம் , "சீக்கிரம் சென்று ஓய்வு எடு... ஜுரம் திரும்பி விட போகிறது" என்றான். மது அவனை ஒருமுறை முறைத்தாள்.

இருவரும் அலுவலக அறைக்கு சென்றனர்.

மது, "பாவம் மரியம் ஆன்டி ... எவ்வளவு வேலைகள் செய்கிறார்.... நாம் சென்று, இந்த காபி கோப்பைகளை தேக்க போடுவோம்" என்று எண்ணியபடி சமையல் அறைக்கு செல்ல முற்பட்ட மது அரை வாசலில் அப்படியே நின்று விட்டாள்.

ஏன்? சமையல் அறை கதவு சாத்தி இருந்தது...!! அதன் உள்ளில் இருந்து மரியம் "எடிசன், நீ செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை" என்று கத்தினாள் .

எடிசன் என்பவன், "அம்மா.... சும்மா கத்தி ஊரை கூட்டாதே.... உன் பெரிய மகன் ராஜ் என்ன செய்தாலும் சரி.. நான் என்ன செய்தாலும் தவறா? அவன் ,அவன் இஷ்டத்திற்கு ஏ ஞலின் கல்யானம் செய்வான்... அன்ன ஏதோ கொஞ்சம் குடிக்கிறேன் நு இந்த கத்து கத்தறியே அம்மா !" என்றான்.

மரியம் , "ஆனால், நீ உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறாயே டா! பாவம் அந்த பொண்ணு மது... நம் வீடு திருமப்ன விருந்துக்கு வந்தவளை ஜூஸ் இல் மயக்க மறுந்து லாலான்ஷு கொடுத்து அவள் பாத் றோம் போன பொழுது பின்னாடியே பொய் வால் மயங்கியபோது அவள் கழுத்து நேச்க்ளசே உறவி விற்று இருக்கிறாயே!!! வெட்கமாக இல்லை உனக்கு? நான் எப்படி ராகவன் அய்யா முகத்தில் முழிப்பேன்? இதோ, இப்போ அவர்கள் போலீஸ் கீலிஸ் நு பேசறாங்களே.... நான் என்ன செய்வேன்???இது வரை சிறு சிறு தவறுகள் செய்து வந்தாய்... இப்போது லட்ஷ கணக்கு நகையில் கை வைத்து மாட்டி கொள்ள போகிறாயே டா" என்று அழுதாள்.

இதை கேட்ட அதிர்ச்சியில் மதுவின் மனம் உறைந்து நின்றாள்.

மரியம் கதவை திறந்து வெளியில் வந்தவள் மதுவை கண்டு அதிர்ந்தாள். "மது மா, என்ன டா?" என்று கேட்டல் ஒன்றுமே அறியாத மாதிரி.... பிறகு எடிசன் பக்கம் திரும்பி, "எடிசன், இவங்க தான் மது... ராகவன் ஐயாவுடைய மகள்" என்று அறிமுகப்படுத்தினாள்.

எடிசன் "வணக்கம்" என்று பல்லை காட்டினான்.

மதுவிற்கு அவனை பார்த்ததும், அவனை பாத் ரூம் சென்று திரும்பி வரும்போது அன்று விருந்தில் பார்த்தது ஞாபகம் வந்தது. எப்பேர் பட்ட திருடன் என்று மனதிற்குள் கருவியபடி, "மரியம் ஆன்டி ,நீங்களும் உங்கள் மகனும் ஒரு நிமிடம் என் அப்பா அறைக்கு வாருங்கள் " என்று கூறி விட்டு "அப்பா" என்று அழைத்தபடி ராகவன் அறை நோக்கி நடநதாள்

பின்னாடியே.... திகிலுடன் மரியம், அலட்சியமாய் எடிசன்................(தொடரும்)

ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html


 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#10
நம்பிக்கை ஒளி :- பாகம் 8
==================

"வார்த்தை அம்புகள் மனதை குத்தும்போது
வான மழையையும் மிஞ்சுமே கண்ணீர் "

அறை வாசல் கதவை மது தட்டியதும், வேணு வந்து திறந்தான். மது "அப்பா, இந்த மரியம் ஆன்டி மகன் எடிசன் என் ஜூஸ் இல் ஏதோ கலக்கி கொடுத்து என் நெக்லஸ் திருடி இருக்கான். அவனும் ஆன்டி யும் பேசியதை நான் காதால் கேட்டேன்" என்று கூறினாள் .

உடனே எடிசன் "மாமா, என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா? ஏதோ ஊரில் இருந்து வந்த உங்க பொண்ணு அரை குறையா சுர வேகத்தில் ஏதோ உளறுது...நீங்க அவளை ஒரு நல்ல டாக்டர் கிட்டே காட்டலாமே" என்று நக்கலாக கூறி சிரித்தான்.

மரியம் "ஏன் மது மா? உங்க ஜுரம் இன்னும் தீரலையா? ஏதேதோ பேசறீங்க??" என்று கேட்க மதுவின் ஆத்திரத்திற்கு எல்லை கடந்தது.

வேணு, "என்ன நாடகம் இது? மது வாட் இஸ் திஸ்?" என்று கோபமாக கத்தினான்.

ராகவன் "மது என்ன அம்மா இது எல்லாம்?" என்று சாந்தமாக கேட்டார்.

மது, "ஐயோ, இங்கே என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா?நிஜமா தான் சொன்னேன். சமையல் அறை பக்கம் போனேன். கதவு உள்ளில் தாழ் இட்டு இருந்தது. உள்ளே இவர்கள், அம்மாவும், மகனும் பேசியதை நான் கேட்டேன். உங்கள் நகைக்காக தான் உங்களிடம் கூற வந்தேன் அப்பா" என்றாள் .

எடிசன்,"மது மா, எனக்கு புரியுது. நீங்க சின்ன வயசில் இருந்தே கஷ்டப் பட்டுட்டீங்க... நகை பார்த்த உடனே ஒரு சபலம் வந்த்டு ச் சி.ஆனா, அதுக்காக, உங்க அப்பா கிட்டேயே திருடறதா? செய்யறதையும் செயஞ்சுட்டு என் மேலே பழி போடறீங்களே மா.....இது நல்லாவா இருக்கு" என்று கண்கள் உருக கேட்டான்.

வேணு, "எடிசன்... வாயை மூடு! கண்டபடி உளறாதே. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கி பழகு.... " என்று நாக பாம்பு போலசீறினான். மது கண் அகல வேணுவை பார்த்தாள் .மேலும் வேணு, "என்ன செய்ய வேண்டும்? எப்படி என்று எங்கள் மாமாவுக்கு நன்றாக தெரியும் .... யாரிடம் பேசுகிறோம் என்று தெரிந்து பேசு"என்றான்.

மேலும் எடிசன், "வாங்களேன்... வேணு சார், நம்ம மது அம்மா ரூம் லே தேடுவோம். இன்ச் இன்சா தேடினா, நகை கிடைக்காதா என்ன?" என்று கேட்டான்.

மதுவிற்கு தலையே சுற்ற ஆரமபித்தது.அவள், "அப்பா, என்னை யா சந்தேகப்படுகிறீர்கள்? சரி. வாருங்கள்... போய் தேடுவோம் என் ரூம் இல். மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும்? நான் எந்த தப்பும் செய்யவில்லை. வாங்க அப்பா..." என்று அழைத்தாள்.

மரியம் "எதுக்கு மது மா, இது எல்லாம்?" என்று இழுத்தா ள் .

மது,"இல்லை, ஆன்டி ...... எதுவும் பேசாதீர்கள்... மகனே ஆனாலும் தப்பு தப்பு தான் என்று நீங்கள் பேசுவீர்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்களோ, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் உங்கள் சிறிய மகனுக்கு துணை போகிறீர்கள்....தேடட்டும். எனக்கு ஒன்றும் இல்லை" என்று கூறி தோளை குலுக்கி முன்னே நடந்தாள் .

வேணு முகம் கருத்து, உதடு துடிக்க ,கோபத்தில் நடக்க, ராகவன் தளர்ந்த .நடையோடு ..பின்னால். நடக்க.... ..
எடிசன் எகத்தாளமாக,மரியம் கவலையும் திகிலும் ...கலந்து. ..... நடந்தனர்.

இனி என்ன நடக்கும்?

(தொடரும்)

ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html
 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#11
.நம்பிக்கை ஒளி :- பாகம் 9
==================
"குறைகளை சுமத்துவது எளிது -குணமாம்
குன்றினை அறிவது தான் கடினம்"

அனைவரும் அறையினுள் சென்றனர். ஒரு ஒரு மூலை யாக தேடினர் அனைவரும்.

எடிசன் அப்போது மெதுவாக அவன் அம்மாவிடம் "கட்டிலுக்கு கீழே" என்றான்,
மது மிக அழகாக தன ,கை பேசியில் அதனை ரெகார்ட் செய்தாள் அவள் மனம் கொதித்தது.

உடனே மரியம் "அய்யா .,கட்டிலுக்கு கீழே பார்க்கட்டுமா?" என்று கேட்டபடி கீழே குனிந்தாள்.

ஆமாம்...ஆமாம்...

அந்த பச்சை மரகத நெக்லஸ் கட்டிலுக்கு கீழே ஒளிர்ந்தது..... !!!

வேணு ஆத்திரத்துடன் "மது , ???" ?என் கத்தினான்.
மது " ,நிஜமா, எனக்கு தெரியாது....நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..."

வேணு, "எனக்கு ,உன்னிடம் பேசவோ, கேட்கவோ ஒன்றுமே இல்லை.... ,மாமா, நான் அப்புறம் வருகிறேன்" என்று கூறி, புறப்பட்டு கோபத்தில் போயே போய் விட்டான்.

மரியம் "அய்யா, மது பாவம்.கஷ்டத்தில் வளர்ந்தவள்.. அவளை திட்ட வேண்டாம்" என்று கூற,மதுவின் கோபம் எல்லை கடந்தது.

மது "மரியம் ஆன்டி , உங்கள் சிபாரிசு எனக்கு வேண்டாம். அப்பா,நான் உங்கள் மகள். எனக்கு பணத்தின் மீது மோகமோ, ஆசையோ, வெறியோ, கொஞ்சம் கூட கிடையாது.இதை . நான் சூழ்நிலை கைதி ஆகி நிற்கிறேன். " என்று கதறினாள்.

எடிசன், " வா அம்மா, நாம் போகலாம்.... அது குடும்ப விவகாரம்" என்று விகாரமாக இளித்தபடி, மரியத்துடன் வெளியே நகர ந்தான்.
ராகவன், "மது, அழாதே அம்மா, நாம் இரவு பேசுவோம். நீ சற்று ஓய்வு எடு" என்று கூறி அவர் சென்றார்.

மது தன அறை கதவை தாழிட்டு, அங்கு இருந்த டேப் ரெகார்டர் எடுத்து கீழ் கண்டவாறு ரெகார்ட் .செய்யலானாள்.
"அன்புள்ள அப்பா ! சிறு வயது முதலே நான் .மகிழ்ச்சி என்பதை உணர்ந்தது கூட கிடையாது.இசை, நாட்டியம்,பிரெஞ்சு, ,ஆங்கிலம், பெய்ண்டிங் எல்லாம் .அம்மாவின் உடல் நிலை கவனித்தேன்.அம்மாவின் ஆட்டங்களால் நொந்தேன்.அம்மாவும் இறந்து விட, அம்மாவின் அனைத்து கடனையும் அடைத்தேன். இறக்கும் முன் தான் உங்களை பற்றி என்னிடம் விவரமாக கூறி, உங்கள் முகவரி கொ டுத்தாள் அம்மா.

உங்களை பார்க்க வேண்டும். உங்களுடன் கொஞ்ச நாள் தங்க வேண்டும் என்ற ஆசையில் தவிர,உங்கள் .சொத்துக்காக வரவில்லை. எனக்கு பாண்டிச்சேரியில் பிரெஞ்சு டீச்சர் வேலை காத்து இருக்கிறது. நான் ஜூலை 1 வேலையில் ; சேர வேண்டும். இன்று ஜூன் 25.அப்பா, நாளை காலை நான் உங்கள் பக்கத்தில். இருக்க .மாட்டேன்.

எடிசன் பேசியதை ரெகார்ட் செய்து .இந்த ரெகார்ட் .உடன் வைக்கிறேன்.

,நான் நிரபராதி என்று நம்பினால் நம்புங்கள். இல்லா விட்டால், .இறைவன் சித்தம்.
நல்ல வேளை , நெக்லஸ் கிடைத்தது.நானும் குற்ற உணர்ச்சியும், எப்படி
அடைப்பேன் என்ற .பயமும் இன்றி கிளம்புவேன்.

ஒரு 20 நாள் உங்கள் கூட இருக்க முடிந்தது என் பாக்கியம்.என் நமஸ்காரங்கள் அப்பா."

என்று பேசி ரெகார்ட் செய்து முடித்தாள்.

பிறகு , விரைவாக,ஒரு travel agency போன் இல் அழைத்து, அடுத்த நாள் பாண்டிக்கு பஸ் இல் போக புக் செய்தாள்.

இரவே எல்லா உடைகளையும் அடுக்கி வைத்து கொண்டாள் . இரவு உணவு வேண்டாம் என்பர் முடிவு செய்து படுத்து உறங்கினாள்.

அவள் எழுந்த போது மாலை 4.மணி. அறையினை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முடிவு செய்தாள் .

மன வேதனை தீர .பாடல்களை கேட்டாள் .செய்யாத குற்றங்கள் சுமத்தப்படுகின்றனவே என்ற ஆதங்கம் இருக்க தானே செய்யும்??


அவள் கேட்ட பாடல்கள் :-

1) உன்னை சொல்லி குற்றம் இல்லை
2) நா கோயி க ரங் ஹை
3) மன நாட்டிய மேடையில் ஆடினேன்....
4) மலரே மலரே தெரியாதோ....
5) மலருக்கு தென்றல் பகை ஆனால் ..........
6) நினைத்தால் போதும் ஆடுவேன்...
7) உன்னை தான் நான் அறிவேன்
8) தேன் உண்ணும் வண்டு
9) கண்கள் ரெண்டும் உன்னை
10) ஆசை பொங்கும் .அழகு ரூபம் ....

கொஞ்சம் மனகவளிகளும், காய்ங்களும் இனிய நல்லிசையால் ஆறியது என்றே கூறலாம்.

இரவு மணி 7.00 ஆகவே, சென்று ஒரு நல்ல குளியல் போட்டு புதிய
இரவு ஆடை உடுத்தி மனதை குளிர்வு செய்து கொண்டாள்,

இரவு உணவிற்கு அவள் அப்பா அவளை போன் இல் அழைக்க,
".வருகிறேன் " என்று உரைத்து மாடி படிக்கட்டுக்கள் இறங்கினாள்.


expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html

 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#12
நம்பிக்கை ஒளி :- பாகம் 10
=========================
' நினைவு அலைகளை மீட்டிடும் நேரம்
நெஞ்சம் அமைதி உறுமா?'

அடுத்த நாள் விடியற்காலையில் , எழுந்து குளித்து, ஒரு மஞ்சள் நிற சுடிதார் இட்டு, தன பையை சுமந்தபடி
அந்த வீட்டை விட்டு .வெளியேறினாள் மது.

கூர்க்கா ஆழ்ந்த உறக்கம்... மெதுவாக சிரித்தபடி மது வாசலில் ஒரு ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போனாள் . பிரயாணத்திற்கு வேண்டிய சிப்ஸ்,பிஸ்கட் , தண்ணீர் பாட்டில், குளிர் பான பாட்டில் வாங்கி கையில் வைத்து கொண்டு, பேருந்திற்காக காத்து இருந்தாள் .

பேருந்து 7 மணிக்கு வந்தது. ஏறி தன இருக்கையில் அமர்ந்த மது , தன கண்களை சோர்வுடன் மூடினாள்.
அவள் வாழ்க்கை, அவள் கண்களுக்குள் ஒரு நிழற்படமாக சுழன்றது.

அம்மா, அம்மாவின் செயல்கள், கடன்கள், அம்மாவால் ஏற்பட்ட அவமானங்கள்,அம்மாவின் நோய், அம்மாவின் மரணம், அடுத்து ஆசையை அவள் மேற்கொண்ட ,மும்பை பயணம்..... அப்பாவின் அன்பு, அவள் வேணுவின் மீது வைத்த, வெளிப்படுத்தாத மென்மையான காதல் உணர்வுகள் என அனைத்தும் வேகமாக ஓடியது அவள் மனக்கண்ணில் !!!

அப்பாவுமா அவளை தவறாக, திருடி என்று நினைத்து இருப்பார்??? அவள் நெஞ்சம் வேதனை பட்டது.

வேணு???? எத்தனை மனக் கோட்டைகள் அவள் ப்ஞ்சு இதயத்தில் உண்டாகி இருந்தன
வேணுவை பற்றி ????

இந்நேரம் அப்பா இவளுடைய ரெகார்டிங் கேட்டு இருப்பாரா?மது நிரபராதி என்று ஒரு முடிவுக்கு வந்து இருப்பாரா?

தன்னை தேடுகிறார்களோ எங்கே போனேன் என்று??

வேணு அவளை பற்றி இப்போது என்ன நினைக்கிறானோ?

அவனும் அவளை பணத்திற்கு அலைபவள் என்று முடிவு கட்டி த்தான் அவளை
வெறுத்து ஒதுக்கி வேகமாக , கண்ணில் கனல் காட்டி சென்றானோ அன்று??

மது ஒரு . பெருமூச்சு விட்டு கொண்டாள் .பணமும் பகட்டும் அவளை என்றுமே ஈர்த்ததில்லை. வேதனையையும், கஷ்டத்தையும் மட்டுமே சுவாசித்தாலும்,நேர்மறை எண்ணங்களை மட்டுமே உள்ளின் உள்ளில் வளர்த்து, எதற்கும் யாரையும் நாடாமல், இறைவனையும் நிந்திக்காமல் ," இது தான் நம் வாழ்வு" என கிட்டுவதை மகிழ்வுடன் ஏற்கும் தன மனோநிலையை எண்ணி கொண்டாள் .தன சுயம் காலில் நிற்கும் அளவு திறனை வளர்த்து கொண்டமைக்கு அந்த பகவதி அன்னைக்கு நன்றி தெரிவித்து க் கொண்டாள் மனதுக்குள்ளேயே !!!


மது மனதின் வலியை மறைக்க, கட்டாயப்படுத்தி சிந்தனை ஓட்டத்தை
பாண்டிச்சேரிக்கு அனுப்பினாள். இன்னும் நாலு நாட்களில் பள்ளி திறந்து விடும்.

அவளும் அவள் பிரெஞ்சு பாடங்களும், அவள் பைண்டிங் வகுப்புகளும் என்று
மனதை ஒரு நிலைப்படுத்த அவளால் முடியும் !!! முடிய வேண்டும் !!!

பேருந்தில் அப்போது ஒலித்த பாடல் :- "ஏ சிந்தகி உசீகி ஹை " என்ற ஹிந்தி
பாடல் !! கதாநாயகி காதல் விரக்தியில் பாடுவதாக அமைந்த அந்த பாடல் தன நிலைக்கு
மிகவும் பொருந்துகிறதே என்று நினைத்தாள் மது...

"சோகத்தையும், வேதனையையும் பாண்டிசேரி க்குள் கால் வைக்கும்போதே தூக்கி
எறிந்து விட வேண்டும்.!! நினைவுகளை மனதில் இருந்து, எத்தனை வலித்தாலும்
அகற்ற முயற்சிக்க வேண்டும்... நல்ல எண்ணங்கள் மனதினுள் முகிழ்க்க வேண்டும்" என்று நினைத்தபடி தன பேருந்து பிரயாணத்தை தொடர்ந்தாள் மது....!!!


......தொடரும்...

expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html 

girija chandru

Penman of Penmai
Blogger
#13
நம்பிக்கை ஒளி :- பாகம் 11
=========================

"மழலையர் அரும்பு புன்னகை
மனதினை ஆற்றுமே !!
மங்கும் சூழலும் மணம் ஆகுமே !
மழலையர் சிறு கை பட்டுவிட்டால் !!"

தினசரி பொழுது இனிமையாகவே புலர்ந்தது. அதிகாலையில் மது
எழுந்து காலை கடன்களை செவ்வனே முடித்து, பள்ளிக்கு விரைதலும் பள்ளியின் அன்றாட அலுவலில் தன்னை மூழ்க வைப்பதும் நித்ய வேலை ஆக இருந்தது.

அன்று வெள்ளி கிழமை. ஒரு அழகான பிரவுன் நிற புடவை, அதனோடு பொருந்திய டிசைன் ரவிக்கை அணிந்து அழகு தேவதையாக பள்ளிக்கு சென்றாள் .

எட்டாம் வகுப்பில் பிரெஞ்சு படிப்பித்து அந்த பாட வேளை முடிந்து வெளியே வந்த அவளை நோக்கி மலர் என்ற சிறுமி "மிஸ், மிஸ், நீங்க இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க...இந்தாங்க மிஸ் ஒரு சிகப்பு ரோஜா எங்க வீட்டிலே பூத்து இருந்ததா? உங்க நினைவு வந்தது...
உங்களுக்காக கொண்டு வந்தேன்.... ப்ளீஸ் மிஸ்...எனக்காக் தலையில் வைத்து கொள்ளுங்கள்".

மது,"நன்றி மலர்... உன் மனசு மாதிர்யே இந்த ரோஜாவும் பெரிசா, அழகா இருக்கு" என்று சொல்லி சிரித்த படி வாங்கி கொண்டாள் .

மனசு இல்லா மனசோடு கான்டீன் சென்று, மதிய உணவு உண்ணத் தொடங்கினாள் .

"பூ போன்ற நெஞ்சினிலும்
முள் இருக்கும் பூமியடா...
பொல்லாத கண்களடா....
புன்னகையும் வேஷமடா....

பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு தொல்லை அடா"

என்ற பாடல் அவள் உள்ளத்திரையில் ஓடியது.....

ஆமாம் ! இந்த மலர் தான் எவ்வளவு அழகான சிறுமி... படிப்பு, பாடல், ஆடல் என்று எல்லாவற்றிலும் சுட்டி. பிரெஞ்சு பாடத்திலும் அவள் தான் எப்போதும் முதல் மதிப்பெண் எடுப்பாள் . எவ்வளவு இயல்பாக அவளுடைய சின்னஞ்சிறு மனதில் தோன்றிய உணர்வுகளை
அழகாக வெளிப்படுத்தினாள் !!! ஒரு பெரு மூச்சு மதுவிடம் இருந்து வந்தது........

மது, 'நாமும், நம் மனதில் உள்ளதை இந்த வேணுவிடம் தெளிவாக சொல்லி இருந்தால்....???வேணு கூடவா நம்மை தப்பாக நினைக்கிறார்? " என்று உருகினாள். உதடு ஓரம் ஒரு மெல்லிய நகை தோன்றியது..... "ஆமாம்... அப்பா ராகவனே நம்ப காணோம்...... பிறகு வேணு எம்மாத்திரம்??" என்று எண்ணினாள் .

பிறகு நினைவு அலைகளின் சுழற்சியில் இருந்து பிடிவாதமாக வெளியே வந்து, மதிய வகுப்புகளை கவனிக்கத் தொடங்கினாள்.

இரவு, மதுவை நித்திரா தேவி வலுவே அழைத்தாள். உடல் உழைப்பும், மன சோர்வும் ஒன்று சேர்ந்து தாக்க, மது உறங்கினாள் .

கனவுகளின் மேல் நம்பிக்கை வைத்த அவள் விழித்திரைகளில் வேணுவின் ஆஜானுபாகுவான தோற்றமும், அரும்பு மீசையும், குறும்பு பார்வையும், அவன் கையை தொட்ட இன்ப வினாடியும்
வந்து ஆனந்த கூத்தாட்டம் போட்டன...

இனி.... வேணுவின் மன நிலைமை எப்படி தான் இருக்கிறது என்று பார்க்க புகுவோமா?

..... தொடரும்....

..... ஆக்கம் கிரிஜா சந்துரு (ரா. கிரிஜா)
 

girija chandru

Penman of Penmai
Blogger
#14
நம்பிக்கை ஒளி :- பாகம் 12
=========================

"நம்பிய மனமே சூது செய்தால்
நம்பிக்கை மரிக்கிறது"

வேணுவின் மனம் கொதி கலன் போல கொதித்து கொண்டு இருந்தது.

வேணு, தன மனத்திரையில் மதுவை முதன் முதலில் கண்டது முதல்
கடைசி நாள் சம்பாஷனை வரை ஓடு குறும்படமாக ஓட்டி பார்த்தான்.

அந்த ஒல்லியான தேகமும், வார்ப்பு சிலை போன்ற அழகும்,
குவிந்த சிறிய இதழ்களும், வில்லொத்த புருவமும், கயலை பழிக்கும்
கண்களும் மதுவை குற்றம் அற்றவள் என்று பறை சாற்றியது...!!!

மரியம், எடிசன் நடவடிக்கைகளை கண்காணிக்க சொல்லி, தன நண்பன் போலீஸ்
இன்ஸ்பெக்டர் குருராஜ் இடம் கேட்டுக் கொண்டிருந்தான் வேணு.

குரு ராஜ் வேணுவை ஒரு வள்ளி அன்று மதியம் தொலைபேசியில் அழைத்தார்.
"வேணு, நாம் நினைத்தது போல எல்லா தவறும் எடிசன் செய்தது தான்.
மதுவை ஒரு பழ ரசம் கொடுத்து மயக்கி, அவள் பாத்ரூம் போன இடைவெளியில்,
அவள் பின்புறம் இருந்து , பச்சை நெக்லஸ் உருவி இருக்கிறான். பிறகு, மரியம் கூட
அடுக்களையில் சண்டை இட்டு இருக்கிறான். அதை தான் மது வெளியில் இருந்து
கேட்டிருக்கிறாள். பிறகு, அவள் நிலையை புரிய வைக்க டேப் ரெகார்ட் செய்து இருக்கிறாள்.
எடிசன் கைது செய்து விசாரித்து கொண்டு இருக்கிறேன். நீயும் ராகவனும் நேரில் வந்து
கொடுத்த கம்ப்ளைன்ட் இல் ஒரு சிக்ன் சிக்ன் போட்டுட்டு போங்க" என்றார்.

வேணு துடி துடித்து விட்டான். மதுவின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
ஏழை என்றால் நகை மீது மோகம் கொள்ள தான் வேண்டுமா? யார் கூறினாலும்
பொறுத்து கொள்வாளே... தானும் சீறி விழுந்தால் ???? காதல் கண்டவரின் வாக்குகள்
சந்தேக வாக்குகள், சுட்டு எரிக்கும் அல்லவா?

பாவம் அந்த பேதை பெண், ஊரை விட்டே போய் விட்டாளே என்று வேதனை உற்றான்.
குரு ராஜ் சொன்னபடி, ரகஹ்வைனை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
அங்கு மரியம், எடிசன் இருவரையும் பார்க்கையிலேயே, வேணுவிற்கு, கோபம்
கண்ணு மண்ணு தெரியாமல் வந்தது.வேணு மரியத்திடம், " ஏன் ஆன்டி, அவனை சப்போர்ட் செய்து உங்களை அசிங்கப் படுத்தி கொள்கிறீர்கள்?? இருவருமாக எப்பேர்பட்ட பழியினை மதுவின் தலையில் போட்டு விட்டீர்கள்?? இது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா?" என்பர் கோபமாய் கேட்டான் வேணு.

ராகவன், "மரியம், நீயும் என்னுடன் 10 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறாய்... இப்படி
செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" நேதூர் வேந்தனையுடன் கூறி முகத்தை திருப்பிக் கொண்டார். பிறகு குர் ராஜிடம், 'கேஸ் வேண்டாம் குரு.. வாபஸ் வாங்கி கொள்கிறேன்.... எடிசனை விட்டு விடுங்கள்... ஆ னால், மரியம் இனி எனக்கு வேலை பார்க்க கூடாது" என்றார்.

மரியம் , "அது.. வந்துங்க .... அய்யா மன்னிக்கணும். பிள்ளை பாசத்திலே, மடத்தனமா நடந்துகிட்டேன்.... பெரிய மனசு பண்ணி திருப்பி வேளையிலே செர்த்துகிடனும்". என்றாள் .

ராகவன், "இல்லை... மரியம்... நான் ஒரு முறை தான் முடிவு செய்வேன்... இனியேனும் எங்களை விட்டு விடு" என்றார்.

வேணு ராகவனை அழைத்து கொண்டு வேணுவின் வீடு சென்றான். "மாமா, கொஞ்ச நாள் நீங்க, நம்பே வீட்டிலே இருங்க..... சாப்பாட்டு பிரச்னை இல்லாமல் என் முருகன் ஆனந் பார்த்ஹு கொள்வார்" என்றான்.

ராகவ்ன்,"வேணு, நாளை காலை பாண்டிச்சேரி க்கு ரெண்டு டிக்கெட் பலனே இல் எடு" என்றார்..

வேணு மெல்ல சிரித்து கொண்டே "மாமா, எடுத்து விட்டேன். நாளை 8 மணி " என்றான்....


தொடரும்....... aakkam raa. girija....
expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html

 

girija chandru

Penman of Penmai
Blogger
#15
நம்பிக்கை ஒளி :- பாகம் 13
=========================


"பிரிந்தவர் சேர்கையில்
பறந்திடும் மொழிகள்.....
புரிந்த உள்ளங்களுக்கு
பறக்கும் வார்த்தைகள்
புரிவதே இல்லை"


மறு நாள், மதியம் ஒரு மணிக்கு முதல்வர் அழைப்பதாக செய்தி வர மது முதல்வர் அறைக்கு செல்கிறாள்.


அங்கு தன தந்தை ராகவனையும், வே ணு வையும் கண்டு , வாய் பேச மறந்து
விக்கித்து நிற்கிறாள்`.


"மது,என் கண்ணே,என்னை மன்னித்து விடு" என்றார் ராகவன்.


"இன்று இரவு விமானத்தில் நாங்கள் போகும்போது,மதுவையும் அழைத்து போகின்றோம் மேடம்" என்றான் வேணு.


மது "மேடம்,என்னை பற்றிய முடிவு நான் எடுக்க வேண்டும் என்று பர் நினைக்கிறேன்" என்றாள் .


வேணு அழகாய் புன்னகைத்தபடி,"ஆனால்,என் வருங்கால மனைவியை பற்றிய முடிவு நான் எடுக்கலாம், என்ன மாமா?" என்று கூறினான்.


மது "மேடம்....." என இழுத்தாள் .


மேடம்,"மது அப்பா பேச்சை கேளு டா" என்றாள் .


அன்றே வேலை ராஜினாமா கடிதம் கொடுத்து மது விரைவாக தந்தை மற்றும் வேணுவின் உதவியுடன் மொத்தம் மூட்டை கட்டினாள் . ஆமாம், இனி அவளுக்கு பாண்டிச்சேரி இல் என்ன வேலை??


ராகவன் முகம் கழுவ சென்ற அந்த ஒரு நொடியில், வேணு அவளை சடார் என்று இழுத்து இதழில் நச் என்று ஒரு முத்தம் இட்டு "என் உயிரே !!! இனி உன்னி ஆயுளுக்கும் சந்தேகப்படவே மாட்டேன்" என்று கூறினான்.
மதுவின் முகம் அந்தி வான சிவப்பை வெளிப்படுத்தியது.


"பிரிந்தவர் மீண்டும் சேரும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி ...
பேச மறந்து சிலையாய் நின்றால்,
அது தான் தெய்வத்தின் சந்நிதி !!!"


என்ற பழைய பாடல் மெல்ல காற்றில் சிறகடித்து வந்தது.


ராகவன் முகம் கழுவி வரும்போது ரெண்டு சிலைகளை பார்த்தார்.


அன்று இரவு விமானம், பூ குவியலாய் ரெண்டு காதலர்களையும்,
மனம் நெகிழ்ந்த ஒரு தந்தையையும் மும்பைக்கு அழைத்து சென்றது.....
நல்லவர்களுக்கு வாழ்வில் (தன்) நம்பிக்கை ஒளி காட்டும் !!!


முற்றும்.....!!!!!!!

.... aakkam raa. girija....
expecting your comments in the below link...

http://www.penmai.com/forums/serial-stories/11093-girijas-serial-story.html

 
Last edited:

girija chandru

Penman of Penmai
Blogger
#16
thank you for your lovely support to my story !!!

completed successfully now.....

my next story is getting ready..... i will let you know the title today.....i am very happy to announce my next title is :- "thadumbi vazhigiradhae mounam"

get read to read it !!!!
 
Status
Not open for further replies.

Important Announcements!