நம் சருமத்தை நாம் அறிய ஒரு விளக்கம்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
நம் சருமத்தை நாம் அறிய ஒரு விளக்கம்

சருமம் ஒரு மனிதனுக்கு நிறத் தைக் கொடுக்கிறது; உருவத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளின் கொழு கொழு கன்னம், இளம் பெண்களின் மினுமினு கன்னம், உடல் தோற்றம், அங்க வளைவுகள் எல்லாம் சரு மத்தில் உள்ள கொழுப்பின் அள வைப் பொருத்தே அமைகிறது.

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சோப்புகளை உபயோகிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்கவும்.

சருமத்தில் உள்ள கொழுப்புப் பகுதி உடலில் ஒரு சத்து சேகரிக்கும் (Storage organ)இடமாக உதவுகிறது.

ஒரு மனிதனுக்கு இருக்கும் கை ரேகையின் அமைப்பு மற்ற வேறு எந்த நபருக்கும் இருப்பதில்லை. அதேபோல சருமத்தில் உள்ள மச்சம், தழும்பு போன்றவையும் அங்க அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

குழந்தைகளுக்கு முகத்தில் ஏற்படும் தேமல்கள், பனிக் காலத்து வறட்சியினாலோ, சோப்பு, பவுடர், லோஷன்களினாலோ அல்லது வயிற்றில் பூச்சி (worm infestation) இருப்பதாலோ ஏற்படுகிறது. இவற்றை முழு மையாக குணப்படுத்த முடியும்.

தொழு நோய் ஒரு பரம் பரை நோயோ அல்லது பாவத்தின் சின்னமோ அல்ல. அது ஒருவரிடம் இருந்து மற்ற வருக்குத் தொற்றக்கூடிய நோயே. தொழுநோயை முழுவதுமாக கட்டுப் படுத்த அல்லது குணப்படுத்த முடியும். உலகத்திலேயே இந்தியாவில்தான் தொழு நோய் அதிகம் உள்ளது

கிருமித் தொற்று மிகவும் அதிகமிருந்து, அக்குள் பகுதிகளில் துர்வாடை அடித் தால், குளித்தவுடன், சுத்தமாகத் துடைத்து டஸ்டிங் பவுடரைப் பயன்படுத்துங்கள். Body Spray, Deodorant போன்ற வாசனை திரவி யங்களை சருமத்தில் நேராகப் படும்படி பயன்படுத்த வேண்டாம்.

குறைந்தது 50 - 100 முடிகள் வரை தினமும் உதிர்கின்றன. அதற்கேற்றார் போல் முடி வளரவும் செய்கின்றது.

இளநரை பொதுவாக பரம்பரையாக வரும் ஒன்று. சிலருக்கு சத்துக் குறை வினாலும் தரம் குறைந்த ஷாம் புக்களைப் பயன்படுத்துவத னாலும் உண்டாகிறது. தலையில் தவறுதலாக தேன் பட்டதால் ஏற்படுகிறது என்பது தவறானக் கருத்து.

பொடுகு சரும நோயல்ல. எண்ணெய்ச் சுரக்கும் சுரப்பிகள், தலை, முகம், நெஞ்சு ஆகிய இடங்களில் அதிகம் உள்ளது. இவை அதிகமாகச் சுரப்பதினால் அவை தலையில் படிந்து செதில்களை (பொடுகாக) உருவாக்குகிறது.

எண்ணெய்த் தேய்த்துக் குளித்தால் உடலுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியைத்தரும் என்பது உண்மையே. ஆனால் விஞ்ஞான பூர்வமான சான்று எதுவும் இல்லை.

இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் செயற்கை இழையினால் ஆன ஆடைகளைத் தவிர்க்கவும். கண்டிப்பாக ஒரு நாள் பயன்படுத்திய உள்ளாடைகளைத் துவைக்காமல் மறுநாள் உபயோகிப்பதோ அடுத்தவர் பயன்படுத்திய உள்ளாடையைப் பயன்படுத்துவதோ கூடாது. இது சுகாதாரக்கேடு மட்டுமல்ல; நோய்களையும் உண்டாக்கும்.

வியர்வையைக் குறைக்க நீர் மோர், இளநீர், பனை நுங்கு, பதநீர், தர்பூசணிப் பழம், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை உணவுப் பொருள் களைப் பயன்படுத்துதல் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவே சிறந் தவை.

வெள்ளரி, வெள்ளைப்பூசணி, தக்காளி, சின்ன வெங்காயம், சுரைக் காய் போன்ற நீர்சத்து மிகுந்த காய்கறிகளை நிறையப் பயன்படுத்தவும்.

மனிதர்களில் இத் தனை நிறங்களா?’ என்று தத்துவமாகக் கேட்டாலும், விஞ்ஞானப்பூர்வமாக உலகில் உள்ள மனிதர்களின் நிறங்கள் மொத்தம் மூன்றே தான்.
1. கறுப்பு - நீக்ரோ இனம்

2. சிவப்பு வெள்ளை - ஐரோப்பியர்

3. மஞ்சள் - மங்கோலியர், ஜப்பானியர் மனிதனின் பிறவியில் உள்ள நிறத்தை செயற்கை முறையில் முழுமையாக மாற்ற இயலாது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#2
சருமத்தின் அமில காரத்தன்மை ph அளவு
5 - 6 - புறத்தோல்
6 - 7 - அகத்தோல்
ஆகவேதான் ph7 என்ற அளவு காரத்தன்மை உள்ள சோப்புகளே சருமத்துக்கு உகந்தது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

நம்முடைய நகம் நாள் ஒன்றுக்கு 0.1 எம்.எம். வளர்கிறது. கை விரலின் நகம், கால் விரல் நகத்தைவிட அதிகமாக வளர்கிறது. கை நகம் முழுமையாக வளர சுமார் 100 நாட்கள். கால் நகம் வளர சுமார் 120 முதல் 150 நாட்கள் ஆகின்றன. குளிர் / மழை காலங்களைவிட வெயில் காலங்களில் நகம் வேகமாக வளர்கிறது


உள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரே உறுப்பு சருமமாகும். மனதை அறியும் மாயக் கண்ணாடி முகம்.
சந்தோஷம் - முகம் பிரகாசம்
வெட்கம் - முகம் சிவத்தல்
கோபம் - இறுக்கம்
பயம் - வெளுத்துப் போதல் / வியர்த்தல்
கவலை - முகம் கறுத்துச் சுருங்கிப் போகும்.

இரண்டு, மூன்று வயது பெண் குழந்தைகளுக்கு, உடல் முழுக்க சிறு சிறு முடியாக இருக்கும். அதற்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள். இதனால் முடி கொட்டி விடும் என்பது தாய்மார்களின் நம்பிக்கை. ஆனால் உண்மை அது அல்ல! மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் தேவையற்ற முடிகள் கொட்டுவதில்லை. அவை தானாகவே ஒரு காலகட்டத்தில் உதிர்ந்துவிடுகின்றன என்பது தான் நிஜம்!

கவரிங் ஆபரணங்கள், பிளாஸ்டிக்கால் ஆன செருப்புகள் மற்றும் செயற்கைத் துணிகளால் ஆன உள்ளாடைகளைத் தவிர்க்கவும். இரவு படுக்கும் முன் ஆபரணங்கள் (வாட்சு, மோதிரம், தோடு, கொலுசு) போன்ற வற்றைக் கழற்றி வைத்துவிட்டு படுக்கைக்குச் செல்வது நல்லது.

தினசரி குறைந்தது மூன்று தடவை முகம், கைகளை அலம்பும் நாம் நமது பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால்தான் சேற்றுப்புண், நகச்சுற்றி போன்றவை உண்டாகின்றன. இரவு படுக் கும் முன்பு, கால்களை மிகச் சுத்தமாகக் கழுவி, உலரத் துடைத்து வாஸிலின் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு படுக்கவும். குறிப்பாகச் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிக மிக கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

2 வயதிலிருந்து 10 வயது வரை உள்ள குழந்தை களுக்கு பால்பரு மற்றும் மருக்கள் உண்டாகி வலியை ஏற்படுத்தும். இது ஒரு வைரஸ் கிருமியினால் உண்டா கிறது. கோயில்களில் மிளகு, உப்பு இறைப்பது அல்லது மசூதிகளில் மந்திரிப் பது போன்றவற்றால் ஏற்படுவது மனத் திருப்தி மட்டுமே. இதற்கும் சரும நோய் மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள லாம்.
பெண்களுக்கு கர்ப்பகாலம் மற்றும் மெனோபாஸ் காலங்களில், முகத்தில் கருந்திட்டுக்கள் படர் கின்றன. குறிப்பாக மூக்கு மற்றும் கன்னங்களில் ஏற்பட்டு, அழகைக் கெடுக்கின்றன. ‘மங்கு வந்தால் தரித்திரம்’ என்று சில வீடுகளில் பெண்களை வசைப்பாடுவதும் உண்டு. ஆனால் இது ஒரு ஹார்மோன் பிரச்னை மட்டுமே! இதற்கு தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

சிலர் குழந்தைகளைக் குளிப்பாட்டும்போது, உடம்புக்குப் பயன்படுத்தும் சோப்பையே தலைக்கும் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகின்றனர். இது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். தரமான ஷாம்பூக்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். மிகவும் சிறிய குழந்தையானால், பயத்தமாவைப் பயன் படுத்தலாம்.

25% பாரம்பரியம், 25% சத்துணவு, 25% சுற்றுப்புற சூழ்நிலை + மனநிலை, 25% பராமரிப்பு - இந்த விகிதாசாரத்தில் அமைந்ததே நமது சருமத்தின் ஆரோக்கியமும்! முறைப்படி பராமரித்து, அழகாய் வாழுங்க!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.