நறுமணத் தூள்

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#1
தேவையான பொருட்கள்:
 1. வெட்டி வேர் – 100 கிராம்
 2. விளாமிச்சை வேர் -100 கிராம்
 3. மாசிப்பச்சை – 100 கிராம்
 4. கோரைக்கிழங்கு – 100 கிராம்
 5. திருநீற்றுப்பச்சிலை- 100 கிராம்
 6. நன்னாரி வேர் – 100 கிராம்
 7. மர மஞ்சள் – 50 கிராம்
 8. சந்தனக்கட்டை – 150 கிராம்
 9. மகிழம்பூ – 150 கிராம்
 10. பச்சை அரிசி – 100 கிராம்
 11. பாசிப்பருப்பு – 100 கிராம்
செய்முறை:

வெட்டி வேர், மாசிப்பச்சை, திருநீற்றுப் பச்சிலை, மகிழம்பூ ஆகியவைகளை நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். பச்சை அரிசி, பாசிப்பருப்பு இவைகளை ஒன்றாகப் போட்டு இளம் வறுவலாக வறுத்துக் கொள்ளவேண்டும். எல்லா சரக்குகளையும் கல் உரலில் போட்டு இடித்து வடிகட்டிப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உபேயாகிக்கும் முறை:

குளிப்பதற்கு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம், வெந்நீரில் குழைத்து தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.

தீரும் நோய்கள்:

சொறி, சிரங்கு, வறட்சி, பொடுகு, அரிப்பு, முடி கொட்டுதல் ஆகியவைகள் குறையும். உடல் மிகவும் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்கும். தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி மிருதுவாகவும், மணத்தோடும் இருக்கும்.

குறிப்பு:

எண்ணெய் முழுக்கிற்கு தேய்த்துக் கொள்ள விரும்பினால் தேவையான அளவுக்கு நறுமணப் பொடியை எடுத்து அதற்குச் சமமாக சீயக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்
 
Last edited by a moderator:

tilak

Commander's of Penmai
Joined
Sep 6, 2011
Messages
2,376
Likes
3,393
Location
karur
#2
இவற்றில் ஒரு சில பொருட்கள் நட்டு மருந்துக் கடையில் கிடைக்குமா ?கௌசல்யா
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.