நலமாய் வாழ சில வழிகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நலமாய் வாழ சில வழிகள் !!!

நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். உங்கள் ஞாபகத்துக்காக,

1. இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)


2. இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல்.(இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)


No Computer, No TV, No Book after 8 pm
3. இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று.( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)

Light Food for Dinner or Fruits

4. இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)
Sleep - "Early to bed, early to rise, makes a man healthy ..."

5. அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)

சூரியனைப் பார்க்கஎழுபவன் சுறுசுறுப்புக்காரன்
சூரியன்பார்க்கஎழுபவன்நோய்நொடிக்காரன் ,

5. காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க.

(இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)

6. பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக.(வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)
Brush with your fingers (until a cling sound is heard) or with empty brush. Avoid using paste.

7. நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)

8. இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும்.(சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)

9. வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும்.(எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)

10. காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும்.(நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)

Breakfast between 7 – 8 30 am

11. உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது.(மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)

Eat fruits before every meal

12. மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க.(இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)
Noon meal, only if hungry. Or twice a day food is enough.

13. பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் -தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.(எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)
Water for thirst alone.

14. கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும்.(உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)

15. மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது.( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)

16. மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது.(இப்போதைய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.).

17. குளிப்பதற்கு நம் வீட்டிலேயே செய்த குளியல் பொடியை பயன்படுத்துக. ஒரு பொதுவான கலவையினை இங்கே தருகிறோம். பல வித சரும நோய்களையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

பாசிப்பயிறு - ஒரு கிலோ
கஸ்தூரிமஞ்சள் - நூறுகிராம்
வெட்டிவேர் - நூறுகிராம்
விளாமிச்சைவேர் (கருப்புவெட்டிவேர்) - நூறுகிராம்
பூலாங்கிழங்கு - நூறுகிராம்
கார்போகஅரிசி - நூறுகிராம்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குக் இவற்றை வாங்கி காய வைத்து அரிது பயன்படுத்தி வாருங்கள் . நல்ல பலனை காண்பீர்கள்.

கடைகளில் சோப்பு, ஷாம்பூ, இவற்றை தவிர்த்தாலே பல விதமான நோய்களை தவிர்க்கலாம்.மேலும் பல இராசயனங்களினால் செய்யப்படும் ஷாம்பூ, சோப்பு போன்றவை நமது சருமத்திலுள்ள மெல்லிய துவாரங்களின் மூலம் உடலினுள் சென்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கிறது.

ஷாம்பூ-வில் ப்ளீசிங் பவுடர்-ல் போடும் ஒரு இரசாயனத்தை சேர்க்கிறார்கள். நினைத்துபாருங்கள் இது நமது தோலை / தலையை, முடியை என்னவெல்லாம் செய்யும் என்று....
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.