நலம் தரும் நலங்கு !!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நலம் தரும் நலங்கு !

வயது நிர்ணய நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா நாதன்

திருமணத்துக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களே உள்ளன. ஊரும் உறவும் கூடி நிற்கும் நேரத்தில், 'எங்க மருமக அழகோ... அழகு!’ என்று உங்கள் புகுந்த வீடு பெருமை பேசக்கூடிய அளவுக்கு நீங்கள் பொலிவாக இருக்க வேண்டும் இல்லையா? அதற்கு அடித்தளம் அமைக்க... நீங்கள் முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

பெற்றவர்களைப் பிரியப் போகும் பரிதவிப்பு ஒருபுறம்; புதியவர்கள் நிறைந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகும் பதற்றம் மறுபுறம்... என இந்த நாட்களில் மணப்பெண்களின் மனதில் பல அலைகள் அடித்துக் கொண்டே இருக்கும். இந்த பிரஷர் காரணமாக சிலருக்கு முன்கூட்டியே மாதவிடாய் ஏற்படலாம், கண்களுக்கடியில் கருவளையம் ஏற்படலாம், முகம்... பொலிவிழக்கலாம்.

இன்னொரு பக்கம்... இந்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் பெண்ணிடம் அத்தனை பாசத்தையும் கொட்டிவிடும் தவிப்பில் உறவுகள் தினமும் ஒரு உணவைச் செய்து வந்து சாப்பிடக் கொடுப்பார்கள், அல்லது பெண்ணின் தாயே 'ஊட்டம்’ கொடுப்பதாக நினைத்து மணப்பெண்ணை அதிகம் சாப்பிட வைப்பார். ஆனால், எண்ணெயில் பொரித்தெடுத்த டீப் ஃப்ரை அயிட் டங்கள் எல்லாம்... உடலைத் தேற்றுவதற்கு பதிலாக, முகத்தில் திடீர் பருக்களை ஏற்படுத்தி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். எனவே, சஞ்சலங்கள் இல்லாத அமைதியான மனமும், அளவான உணவும் திருமணத்துக்கு முந்தைய நாட்களில் பெண்ணுக்கு அவசியம் தேவை.உணவைப் பொறுத்தவரையில், அதிகமாக பழங்கள், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இளநீர் எனவும் பருகலாம். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை 'ரெயின்போ ஃப்ரூட் ஜூஸ்’ என்று அழைக்கப்படும் மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ்-களை ஜூஸாகவோ, துண்டுகளாகவோ சாப்பிட வேண்டும். இது வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் (கிஸீtவீஷீஜ்வீபீணீஸீts) போன்ற சத்துக்களைத் தரும்.

பீட்ரூட், கேரட் போன்றவற்றை ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் பி-யாக இருக்கும் பீட்டாகரோட்டீன் , சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும். இவற்றுடன் அடிக்கடி சாத்துக்குடி, எலுமிச்சம்பழ ஜூஸ் பருகலாம். இவற்றில் இருக்கும் வைட்ட மின் 'சி’, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமப் பொலிவு தருவதோடு, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்றுவதற்கும் உதவி புரிவதாக இருக்கும். மேற்சொன்ன உபாயங்களையெல்லாம் நீங்கள் தவறாமல் மேற்கொண்டால்... மணப்பெண்ணுக்கு வேண்டிய சருமம் மற்றும் முகப்பொலிவு எல்லாம் தானாகவே வந்துவிடும். டால் அடிக்கும் கன்னங்கள், திருமணப் பரிசாகக் கிடைக்கும்!

மேக்கப் என்பதை, திருமண நாளன்று திடீரென போட்டுக் கொள்ளாமல், பார்லரில் முன்கூட்டியே டிரயல் பார்ப்பது... மேக்கப் அலர்ஜி யால் உண்டாகும் பருக்கள், சரும ஒவ்வாமைகளைத் தவிர்க்கும். சைனஸ், வீஸிங், ஆஸ்துமா போன்ற பிரச்னையுள்ளவர்கள், திருமணத்துக்கான தலை அலங்காரம் மற்றும் மாலையில் பயன்படுத்தக் கூடிய பூக்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றிலிருக்கும் அதீத நறுமணம்கூட பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அதிக நறுமணம் இல்லாத கனகாம்பரம், வாடாமல்லி, ரோஜா போன்ற பூக்களைப் பயன்படுத்தலாம். மிக அழகாகவும், வாசனையற்றும் இருக்கும் 'ஆர்க்கிட் ஃப்ளவர்ஸ்' கூட இவர்களுக்கு நல்ல சாய்ஸ்.

திருமணம் என்றதுமே, அதற்கு முன்பும் பின்பும் இருக்கும் சடங்குகளை நினைத்து பலரும் சோர்ந்துவிடுவார்கள். உண்மையில், சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டவைதான் இந்த சடங்கு கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத் துக்கு... இந்துக் குடும்பங்களில் 'நலங்கு' என்கிற பெயரில்மஞ்சள் தேய்த்து, எண்ணெய் வைத்துக் குளிப்பது, மருதாணி வைப்பது என பலவிதமான பழக்க வழக்கங்கள் உண்டு. இவையெல்லாம் உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. இதை உணர்ந்து, அவற்றை ஒதுக்காமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளலாம். இந்து மதம் என்றில்லாமல், எல்லா மதங்களின் சடங்குகளிலும் அறிவியல் பூர்வமான ஏதோவொரு காரணம் நிச்சயமாக இருக்கும். உடல் தவிர, மனதளவிலும் இவை எல்லாம் உங்களை 'ஸ்பெஷல்’ ஆக உணர வைக்கும். அந்தப் பூரிப்பே அழகைக் கூட்டும் !

முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். அதாவது, திருமணத்துக்கு முன்பு குறைந்தது ஒரு மாதம் ஓய்வில் இருப்பது, உடலையும், மனதையும் மணநாளுக்காக ரிலாக்ஸ்டாகத் தயார்படுத்தும். திருமணத்துக்குப் பின்பான தாம்பத்யத்துக்கும் இந்த ஓய்வும், பராமரிப்பும் கை கொடுக்கும்.
என்ன... எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொண்டு திருமணத்துக்கு தயார் ஆகிவிட்டீர்கள் தானே!

 
Last edited:

ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
அருமையான விளக்கம் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.