நலம் நலம் அறிய ஆவல்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நலம் நலம் அறிய ஆவல்
ஷைலஜா, ஊட்டச்சத்து ஆலோசகர்

மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், ஹார்லிக்ஸ் பாட்டில்களும், சாத்துக்குடிப் பழங்களும் நோயாளிகளைச் சுற்றிக் குவிந்துகிடக்கும். ‘‘இரண்டு சாத்துக்குடியை நீங்க எடுத்துட்டுப் போங்க, ஹார்லிக்ஸ் குடிச்சு உடம்பைத் தேத்துங்க’’ என நலம் விசாரிக்கச் சென்றவர்களுக்கே திரும்பக் கொடுத்துவிடுவதுதான் நடக்கிறது.

நோயாளிகளை பார்க்கப் போகும்போது என்னதான் வாங்கிச் செல்வது?

குழந்தையைப் பார்க்கச் செல்லும்போது, குழந்தையைச் சுத்தப்படுத்தும் வைப்ஸ் (டிஷ்ஷூ), பிளாஸ்டிக் மற்றும் ஃபர் இல்லாத பாதுகாப்பான பொம்மைகள், குழந்தைகளுக்கான மெத்தைகள், இடுப்பில் கட்டிக்கொள்ளும் பருத்தியால் தயாரிக்கப்பட்ட துணிகள், பேபி பாட்டிலை சுத்தப்படுத்தும் பிரஷ், குழந்தைகளை வளர்க்கும் முறை பற்றிய புத்தகம், தெர்மாமீட்டர் வாங்கி செல்லலாம்.

வயதானவர்களை சந்திக்கச் செல்லும்போது, கைத்தடி, பூதக்கண்ணாடி, பனிக் கால மஃப்ளர், சாக்ஸ், ஸ்வெட்டர் மற்றும் வலி நிவாரணி தைலங்கள் வாங்கிச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஓமவல்லி, துளசி, கறிவேப்பிலை போன்ற மூலிகைச் செடிகள், கீரைகள் வாங்கிச் செல்லலாம்.


காய்ச்சல் வந்தவர்களைப் பார்க்கச் செல்லும்போது புரதங்கள் நிறைந்த உணவுகள், நட்ஸ், சாத்துக்குடிப் பழங்கள், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் செய்து எடுத்துச் செல்லலாம்.

மஞ்சள் காமாலை நோயாளியாக இருந்தால், இளநீர், நீர்மோர், கரும்புச் சாறு, கீழாநெல்லிக் கீரை, பழங்கள், பழச்சாறுகளைக் கொண்டு போகலாம்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பொட்டாஷியம் அடங்கியுள்ள வாழை, ஆப்பிள், பேரீச்சை, அவகேடோ, மெலன், அன்னாசி, ஆரஞ்சு பழங்கள், யோகர்ட் ஆகியவை ஏற்றது. ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் மானிட்டர், சிரிக்கவைக்கும் நகைச்சுவைப் புத்தகங்கள், நகைச்சுவை சி.டிக்கள், வீடியோக்கள் போன்றவை உயர் ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க உதவும்.இதய நோயாளிகளுக்கு பொட்டாஷியம் நிறைந்த பழங்களான வாழைப்பழம், மாம்பழம், உலர் பழங்கள், ஆரஞ்சு போன்றவையும், பருப்பு வகைகளும் நல்லது. மருத்துவர் ஆலோசனையுடன் இதய நோயாளி பயிற்சி செய்யக்கூடிய பலூன்களை வாங்கித் தரலாம்.

பிரசவித்த தாயைப் பார்க்கச் செல்லும்போது, தாய்ப்பால் சுரக்க உதவும் கீரை வகைகள், பாதாம், வால்நட், உலர் பழங்கள், சிறுதானியங்கள், பழங்கள் வாங்கிச் செல்லலாம். ஆப்பிள், பாதாம், பூண்டு, கீரை, முட்டை, பால் இவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுகளை செய்து எடுத்துச் செல்லலாம். அம்மா, குழந்தை இருவரது ஆரோக்கியத்துக்கும் நல்லது.

புற்றுநோயாளிகளுக்கு பால், நீர் மோர், கரும்புச்சாறு, இளநீர், தயிர், இஞ்சிமரப்பா வாங்கி செல்லலாம். சிகிச்சைகளினால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைக்கும். நீர்க்காய்களை வாங்கித் தருவது அவர்களின் உடல்நலத்தைக் காக்கும். சிறுதானியங்கள் போட்டுச் செய்த தயிர்சாதம் மிகவும் நல்லது.


சிறு குழந்தைகளைப் பார்க்கச் சென்றால், பாதாம், ஆளி விதைகள், வால்நட் போன்ற பருப்பு வகைகளை வாங்கிச் செல்லலாம். வெல்லத்தால் செய்த இனிப்புகள், எள் உருண்டைகள், சிறுதானியங்கள் கலந்த சத்துமாவுமிக்ஸ், நாட்டுக் கோழி முட்டைகள் என ஆரோக்கியமாக வாங்கிச் செல்லலாம்.
இனிப்பில் கேரட் மற்றும் பீட்ரூட் அல்வா, மாதுளை, பப்பாளி போன்ற பழங்கள் நல்லது. மேலும், ஸ்கிப்பிங் கயிறு, பாஸ்கெட் பால் போன்ற உடல் உழைப்பைத் தரும் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தரலாம். குழந்தைகள் உடல் நலமானதும் விளையாட உதவியாக இருக்கும். மருத்துவமனை என்று இல்லாமல், உறவினர் வீடுகளுக்குப் போகும்போதும் குழந்தைகளுக்கு இவற்றை வாங்கித் தரலாம்.

பழங்கள் போதுமே...!

நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது கடைகளில் கிடைக்கும் ஊட்டச்சத்து பானங்களை வாங்கிச் செல்ல வேண்டாம். கொழுப்பு, ட்ரான்ஸ்ஃபேட், சர்க்கரை உள்ளிட்டவை அதிக அளவில் இருக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, பழங்களே நல்லது.

பழங்களை மென்று சாப்பிட முடியாதவர்கள் ஃப்ரெஷ் பழச்சாறுகளை அருந்தலாம். எண்ணெயில் பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த இனிப்பு வகைகள், ரெடிமேட் பழச்சாறுகள், ரெடிமேட் உணவுப் பொருட்கள், பிஸ்கட், சாக்லெட், மிக்சர், பர்கர், பீட்சா போன்ற உணவுகளை நோயாளிகளுக்குத் தர வேண்டாம். நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது, அவர்களிடம் நோயின் வீரியத்தைச் சொல்லிப் பயமுறுத்தக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் எனில் டயாபடீஸ் டெஸ்ட் ஸ்டிரிப், வாக்கிங் போக காலணிகள், அக்குபிரஷர் செருப்பு, நடைப்பயிற்சிக்குத் தேவையான லூஸான உடைகள் போன்றவற்றை வாங்கிச் செல்லலாம். கேழ்வரகு, வரகு அரிசி உணவு, பழங்களில் கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, நாவல், அத்தி, ஆப்பிள், பப்பாளி போன்றவை நல்லது.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.