நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்


ஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி, சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன், டீ காபி சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. இந்த ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகள் ஒட்டுமொத்த உடல்
நலத்துக்கும் தீங்கு. இதற்கு மாற்றாக, உலர் பழங்கள்


மற்றும் கொட்டை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் பெறலாம். இவை ஒவ்வொன்றுமே ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களின் சுரங்கங்களாக விளங்குகின்றன.

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற ஒவ்வொன்றிலும் என்ன சத்துக்கள் உள்ளன, எந்த அளவில் உள்ளன, ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. உடலில் வலிமை கூடி, ஆரோக்கியம் பெருக, சென்னை போரூர் சமையல் கலைஞர் எஸ். ராஜகுமாரி சில ரெசிப்பிகளை சுவைபட உங்களுக்காக செய்து காட்டியிருக்கிறார்.

பலத்தைக் கூட்டும் பாதாம்

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது பாதாம். அதனால்தான் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களைத் தருகிறதோ அதேபோன்று ஆற்றலையும் அளிக்கிறது.

சத்துக்கள் பலன்கள்:

இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இது கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பான ஹெச்்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.வைட்டமின் இ இதில் நிறைவாக உள்ளது. 100 கிராம் பாதாம் பருப்பில் 25 கிராம் வைட்டமின் இ சத்து உள்ளது. இது நம் ஒரு நாளையத் தேவையில் 170 சதவிகிதம். இதுதவிர, பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. அதாவது, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின்,் ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் இதில் அதிகம்.இதில் உள்ள வைட்டமின் இ, பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஃபிளவனாய்டுகள் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் அதிக அளவில் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இது மிகவும் குறைவான கிளைசிமிக் இ்ண்டெக்ஸ் கொண்டதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

பாதாம் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் உலர்தல் பிரச்னை நீங்கி, பளபளப்பைக் கூட்டும்.


தேவை
:

நாள் ஒன்றுக்கு ஒரு கை அளவு பாதாம் மட்டுமே சாப்பிடுவது அன்றைக்குத் தேவையான அளவு தாது உப்புக்கள், வைட்டமின்கள், புரதம் உள்ளிட்டச் சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, தினமும் 4 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், குண்டானவர்களும் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டாலே போதும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
முதுமையை முறியடிக்கும் முந்திரி

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

சத்துக்கள் பலன்கள்:

மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இதயத்துக்கு ஆரோக்கியமான முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.


முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன. அதிலும் குறிப்பாக 100 கிராம் முந்திரியில் 0.147 மி.கி அளவுக்கு வைட்டமின் பி6 உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 32 சதவிகிதம். இது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக விரைவில் முதுமை தோற்றம் ஏற்படு்வதைத் தடுக்கிறது.


தேவை:
ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால் (எண்ணெயில் வறுக்காமல், பச்சையாக) பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் வராமலே தடுக்க முடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
பளபள சருமத்துக்கு பிஸ்தா

சுவை மிகுந்த பிஸ்தா ஆரோக்கியத்தின் அடையாளம். வலிமையை அளிக்கக்கூடியது. இதி்ல் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், மருத்துவ நலன்கள் நிறைவாக உள்ளன. பாதாம் முந்திரியைப் போலவே... புரதம், கொழுப்பு மற்றும் தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.

சத்துக்கள் பலன்கள்: 100 கிராம் பிஸ்தாவைச் சாப்பிடும்போது, 557 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.

இதில் உள்ள கரோட்டீன்ஸ், வைட்டமின் இ போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்்டாக செயல்படுகின்றன. உடலில் ஆக்ஸிஜன் பயன்படுத்துதலினால் ஏற்படும் நச்சுக்களை நீக்கி, பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, இ மற்றும் இதர வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து காக்கிறது.

பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை உடைக்கும் செயல்
பாட்டை துரிதப்படுத்தி அமினோ அமிலமாக மாற்றுகிறது.
வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) ரத்த அணுக்கள் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல உதவுகிறது. பிஸ்தாவில் நிறைவான அளவில் வைட்டமின் பி6 உள்ளது,

இதனால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. உடலில் உள்ள சுரப்பிகள் நன்றாக வேலை செய்யத் தூண்டுகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கச் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரிக்கிறது.

பிஸ்தா எண்ணெய் மிகச் சிறந்த இயற்கை மாய்ச்சரைசராகவும் பயன்படுவதால், சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தை மென்மையாக்கி பளபளப்பைக் கூட்டுகிறது. இதனால் இளமைப்பொலிவு கூடும்.


தேவை:
தினமும் 4 பிஸ்தா எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவில் அன்றைய தினத்துக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டுவந்தால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
வாழ்நாளை கூட்டும் வால்நட்

சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.

சத்துக்கள் பலன்கள்: இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலம் இதயம் மேலும் காக்கப்படுகிறது.

இதயத்துக்கு மட்டுமல்ல இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளைக்கும் மிகவும் நல்லது. இது மூளை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.


திசுக்கள் வீக்க நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மன அழுத்தம் குறையவும் தூக்கத்துக்கும் இது உதவுகிறது. இதில் உள்ள ஒரு வகையான அமிலம் எலும்புடன் இணைந்து செயல்பட்டு, எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் இருப்பதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் பி7 வைட்டமின் என்ற பயோடின் உள்ளதால், முடி உதிர்வு பிரச்னையில் இருந்து தடுத்து முடி வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் வழிவகுக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், சருமத்தை ஃப்ரீராடிக்கல்ஸ் தாக்குதலில் இருந்து காத்து, சுருக்கம், கருவளையம் ஏற்படுவதைத் தடுத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.


தேவை
: தினசரி 2 வால்நட் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பெருகுவதுடன் அதன் ஆரோக்கியம், நீ்ந்திக் கடக்கும் திறன் மேம்படும். மொத்தத்தில் ஒருவரின் வாழ்நாளைக் கூட்டச் செய்யும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள் பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.


உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.


தேவை:
திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்

சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

சத்துக்கள் பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது ரத்த சோகையை வராமல் தடுக்கும். ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது. எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.


காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை தண்ணீரில் கலந்து சிறிது தேன் கலந்து கொடுத்தல் நல்ல பலன் கிடைக்கும்.

அப்ரிகாட் பழத்தை சருமத்தில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். சூரிய கதிர்வீச்சல் சருமம் பாதிக்கப்படுவதில் இருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சருமப் பிரச்னைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல கூர்மையான பார்வைக்கு உதவியாக இருக்கிறது.

மேலும், மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் இந்தப் பழத்தைச் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது. சில வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இந்த பழம் செயல்படுகிறது.


தேவை:
சாப்பிடுவதற்கு முன்பு 3 உலர் அப்ரிகாட் பழத்தைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவு நன்கு செரிமானம் ஆக உதவுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் இனிப்பு உள்ளிட்டவற்றைச் சாப்பிடுவதற்குப் பதில், உலர் அப்ரிகாட் சாப்பிடுவது நல்ல சிற்றுண்டியாக இருக்கும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
ரத்த சோகையை போக்கும் பேரீச்சம் பழம்

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது.

சத்துக்கள் பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன. வைட்டமின்களின் தங்கச்சுரங்கம் என்று இதை அழைக்கின்றனர். இந்த வைட்டமின்கள்தான் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.


அனைத்து அத்தியாவசிய தாது உப்புக்களும் இதில் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் செல்களின் அன்றாட செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இரும்புச் சத்து இதில் அதிகம். உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு இரும்புச்சத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. ரத்த சோகை உள்ளவர்கள் உலர் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுங்கள்.

நம்முடைய உறுதியான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைவாக உள்ளது. கொலஸ்டிரால் இல்லை. அதைவிட ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்தில் உள்ளதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும், இதில் சோடியம் மிகக் குறைவாகவும், பொட்டாசியம் அதிக அளவிலும் உள்ளன. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் செரிமானத்தை எளிமையாக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள நீரில் கரையாத நார்ச்சத்துக்கள், குடல் உற்பத்தி செய்யும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அசிடிட்டி, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

முடி பிளவுறுவது, உதிர்வு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்துக்கு உள்ளது. முடி வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. முடியை வலுவாக்குகிறது. சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்புக்கு எதிராகப் போராடி இளமையானத் தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் பி5 உள்ளதால், அது தோல் செல்களுக்கு ஊட்டம் அளித்து பாதிப்பை சரிசெய்கிறது.


தேவை:
பேரீச்சம் பழத்தை ஒரு நாளைக்கு 5 சாப்பிடலாம். தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகள் வரவே வராது. கர்ப்பிணிகள் தினசரி குறைந்த அளவில் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைத் தசைகளை வலிமைப்படுத்துவதுடன் குழந்தைப் பிறப்பை எளிமையாக்குகிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்

ஆதிகாலம் தொட்டே மனிதன் சாப்பிட்டு பழக்கப்பட்ட பழம் அத்தி. இது எல்லா பருவத்திலும் கிடைப்பது இல்லை. ஆனால் உலர் பழமாக எல்லா பருவத்திலும் கிடைக்கிறது. பழங்கால கிரேக்க இலக்கியத்தில் அத்திப்பழத்தை குழந்தைப் பேறுக்கும், காதலுக்கும் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக அத்திப்பழம் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

சத்துக்கள் பலன்கள்: வெறும் மூன்று உலர் அத்தியில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 20 சதவிகிதம். அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும், செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சிற்றுண்டியாக இது இருக்கிறது. இதில் துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன.


உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பவர்களுக்கு நல்ல செய்தி. உடலில்
சோடியம் அதிகரிக்கும்போது அது சோடியம் பொட்டாசியம் சம நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அப்படி அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அத்திக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தப் பாதிப்பில் இருந்து காக்கிறது.

ரத்த குழாய்களைப் பாதிக்கும் ஃப்ரீ ராடிக்கிள்ஸை வெளியேற்றும் திறன் உலர் அத்திக்கு உண்டு. இதனால் ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் டிரைகிளசரைட் என்ற கொழுப்பு வகை குறையவும் இது உதவுகிறது.

டி.என்.ஏ பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் ஓரளவுக்கு கால்சியம் உள்ளதால், எலும்பின் அடர்த்தியைப் பாதுகாத்து உறுதிப்படுத்துகிறது.

தேவை: தினமும் 3 அத்திப்பழம் சாப்பிடலாம். இதில், நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இருப்பினும் இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
நட்ஸ் பதிர் பேணி
தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு ஒரு கப், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை.

அரைத்துக் கொள்ள: பாதாம் அரை கப், பிஸ்தா கால் கப், முந்திரி 15 துண்டுகள், எண்ணெய் பொரிக்க.

பாகு வைக்க: சர்க்கரை 400 மி.லி., லெமன் ஃபுட் கலர் சிட்டிகை.

அலங்கரிக்க: மெலிதாக சீவிய பாதாம், பிஸ்தா தலா ஒரு ஸ்பூன்.

செய்முறை:
பாதாம், பிஸ்தா முந்திரி மூன்றையும் தனித்தனியாக மூன்றையும் ஊறவிடவும். ஊறியதும் பாதாம், பிஸ்தாவின் தோல் உரித்து, முந்திரி சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மேல் மாவுக்கு, கொடுத்துள்ளவற்றை நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசையவும். இதில், கெட்டியான பெரிய சப்பாத்தியாக இட்டு, அரைத்த விழுதினை அதன் மேல் சீராகப் பரப்பவும். பிறகு, பாய் போல் சுருட்டி, 4 (அ) 6 பாகங்களாகக வெட்டி, அடிப்பாகத்தை கைகளால் அமுக்கி, மேல் பாகத்தை சப்பாத்திக் குழவியால் சிறிய சப்பாத்திகளாக இடவும். அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த பேணிக்களை ஒரு தட்டில் போட்டு, சர்க்கரை பாகினை ஒவ்வொரு பேணியின் மேலும் ஊற்றவும்.

பலன்கள்: நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். ஓடி விளையாடும் குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்கு நல்லது. வீட்டில் நடக்கும் சின்ன விசேஷங்களுக்கு இந்த ஸ்வீட் செய்துதரலாம்,

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
பேரீச்சம் பழ கீர்
தேவையானவை: விதையில்லா பேரீச்சம் பழம் ஒரு கப், வறுத்து ரவைப் பதத்துக்கு உடைத்த அரிசி 2 டீஸ்பூன், பால் ஒரு கப், கன்டன்ஸ்ட்டு மில்க் 3 டீஸ்பூன், ஊறவைத்த பாதாம் 5, ஏலக்காய்த்தூள் சிட்டிகை, சர்க்கரை 8 ஸ்பூன்
செய்முறை: பேரீச்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி 20 நிமிடம் ஊறவைக்கவும். பச்சரியை பாலில் வேகவைக்கவும். பாதாமை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, ஊறிய பேரி்ச்சையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனை வெந்துகொண்டிருக்கும் பால் கலவையில் சர்க்கரை, கன்டன்ஸ்ட்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், இறக்கவும். சூடாகவும் அருந்தலாம். குளிரவைத்தும் குடிக்கலாம்.
பலன்கள்: இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த கீரை ரத்த சோகை உள்ளவர்கள் அருந்தலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. காலை டிபனுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.