நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&#300

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#2
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

ர்க்கரை நோய் என்பது புதிதாக மனிதர்களுக்கு வந்திருக்கும் நோய் அல்ல. காலம்காலமாக உலகம் முழுக்கப் பரவலாக இருந்ததுதான். ஆரம்பத்தில் இது, பணக்கார வியாதியாகக் கருதப்பட்டது. இப்போது வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக நம் குடும்பத்தில், அக்கம்பக்கத்தில், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருக்கும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.


கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றம்.


சர்க்கரை நோயாளிகள் ஒரு பக்கம் இருக்க, தனக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம். சர்க்கரை நோய் வந்தவர்களும் விழிப்புஉணர்வுடன் இருப்பதன் மூலம், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுக்குள்வைக்க முடியும். சர்க்கரை நோய் குறித்த முழு விவரங்களை உள்ளடக்கிய இந்த கைடு என்றென்றும் உதவும்.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#3
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

சர்க்கரை நோய் என்றால் என்ன?நாம் சாப்பிடும் உணவு, செரிமானத்தின்போது குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.


குளுக்கோஸ்தான் நமக்கு ஆற்றல் தரக்கூடியது. குளுக்கோஸை நம்முடைய செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.


இதற்கு உதவ, கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கிறது.


ரத்தத்தில் கலக்கும் இன்சுலின், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.


இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#4
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

சர்க்கரை நோய் வகைகள்டைப் 1 சர்க்கரை நோய்


டைப் 2 சர்க்கரை நோய்கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes)


இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary diabetes)


மோடி சர்க்கரை நோய் (Maturity onset diabetes of the young (MODY))


குழந்தைப் பருவ சர்க்கரை நோய்

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#5
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#6
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

டைப் 1 சர்க்கரை நோய்இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில், ஐந்து சதவிகிதம் பேர் டைப் 1 வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது. டைப் 1 சர்க்கரை நோய் ஒரு முறை வந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க செயற்கை இன்சுலின் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.


டைப் 1 சர்க்கரை நோய், குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகம் வருகிறது.


இந்த வகை சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியாது.


டைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடலையே தாக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னை காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடலாம்.


வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் டைப் 1 சர்க்கரை நோய் திடீரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#7
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary Diabates)உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்பு காரணமாக, இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவது இரண்டாம் நிலை சர்க்கரை நோய். சர்க்கரை நோய் வர என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகளைக் கொடுத்தாலே இந்தப் பிரச்னை ஓரளவு சரியாகிவிடும்.
இரண்டாம் நிலை சர்க்கரை நோய்-சில காரணங்கள் ஸ்டீராய்டு:
ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களில், வெகு சிலருக்கு, ஸ்டீராய்டு அதிகமாக உடலில் சேர்வதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தாலே, சர்க்கரை நோய் குணமாகும்.
பித்தப்பை கற்கள்:
நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பதாலும், உடல் பருமனோடு இருப்பதாலும், பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள் போன்றவை, கணையத்தை அழுத்தினால், கணையம் புண்பட்டு இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
ஹார்மோன் குறைபாடு:
அட்ரினல் சுரப்பியில் இருந்து ஸ்டீராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், ‘குஷிங் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வரக்கூடும்.
அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி காரணமாக, அட்ரினலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், சர்க்கரை நோய் வரலாம்.
அக்ரோமெகாலி எனும் குரோத் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் பிரச்னை உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
பி.சி.ஓ.டி-யால் அவதிப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் அதிகப்படியான இன்சுலினை, ஓர் எல்லை வரை கணையம் வழங்கும். ஒரு கட்டத்தில் இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்தி, பி.சி.ஓ.டி-யைச் சரிசெய்தாலே, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்க முடியும்.
ஆல்கஹால்:
ஆல்கஹால் காரணமாக அரிதாகச் சிலருக்குக் கணைய அழற்சி ஏற்படும். இதனாலும், சர்க்கரை நோய் வரலாம்.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#8
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

மோடி சர்க்கரை நோய் (Mody Diabates)மரபியல் அணுக்களில் ஏற்படும் மாறுதல் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் இது. மிக மிக அரிதாகத்தான் இந்த வகை சர்க்கரை நோய் இந்தியாவில் உள்ளது.
பொதுவாக, 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத்தான் இந்த வகை சர்க்கரை நோய் வரும்.
ஹெச்.என்.எஃப்.1-ஆல்பா, ஹெச்.என்.எஃப்.1-பீட்டா, குளுக்கோகினேஸ் என 12 வகையான மோடி குறைபாடுகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை இருக்கிறது. எந்த டி.என்.ஏ காரணமாக சர்க்கரை நோய் வருகிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.
சில மோடி குறைபாடுகளுக்கு எளிய மாத்திரைகள் கொடுத்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும்.

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#9
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#10
Re: நவம்பர் 14 சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு த&

4. கர்ப்பகால சர்க்கரை நோய்கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரலாம். நஞ்சுக்கொடி (Placenta) தாயையும் குழந்தையும் இணைக்கிறது. குழந்தைக்குப் பல்வேறு ஹார்மோன்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.
கர்ப்பம்தரித்த 24 வாரங்களுக்குப் பிறகு, நஞ்சுக்கொடியில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக, உடலுக்கு இன்சுலின் அதிக அளவில் தேவைப்படும். இதனை கணையமே தானாக உற்பத்தி செய்துகொள்ளும்.
சில கர்ப்பிணிகளுக்கு, தேவைப்படும் அதிக அளவிலான இன்சுலினை கணையம் உற்பத்தி செய்யவில்லை எனில், கர்ப்பகால சர்க்கரை நோய் வரும்.
குழந்தை பிறந்த பின்னர் 24-48 மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாகிவிடும்.
கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் தற்காலிகமானதுதான்.
ஆனால், அவர்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மருத்துவர் ஆலோசனை படி நடப்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.